Saturday, October 23, 2010

கல்லை மட்டும் கண்டால் கப்ரைத் தெரியாது


கல்லை மட்டும் கண்டால் கப்ரைத் தெரியாது
கப்ரை மட்டும் கண்டால் கல்லைத் தெரியாது
கப்ரில் உள்ளவர் எல்லாம் மகானே கிடையாது
மகானாய் இருந்தவர் எல்லாம் கப்ரில் வாழ்வதும் கிடையாது
கட்டியக் கப்ரில் கந்தூரி எடுப்பது நபிவழிக் கிடையாது
நபிவழிக்கெதிராய் நாளும் நடந்தால் சொர்க்கம் கிடையாது


அப்துல்காதிர் அவ்லியா என்றால் உனக்குப் பயனேது
ஆயுள் முடிந்து அடங்கிப்போனவரை அழைத்துப்பயனேது
அப்துல்காதர் அடங்கிய இராக்கை அமெரிக்கா அழிக்குது
அப்துல்காதரிடம் அற்புதம் இருந்தால் இராக் அழியாது
சாகுல்ஹமீதுக்கே சந்ததி கிடையாது சரித்திரம் சொல்லுது
சாகுல்ஹமீதிடம் சந்ததியைக் கேட்பது சாத்தியம் ஆகாது


அஜ்மீரில் அடங்கியது அவ்லியா என்றால் ஆதாரம் உள்ளதா
ஹாபீழ் அமீர் அவ்லியா என்று ஹதீஸில் உள்ளதா
ஏர்வாடி மகானிடம் ஏதும் இருந்தால் அங்கே நெருப்பில் மடிவாரா
மௌண்ட்ரோட்டு மகானாய் இருந்தாலும் மரணத்தை வெல்வாரா
தைக்கா சாகிப் என்றழைத்தால் சஞ்சலம் தீர்ப்பாரா
பக்கா ஷிர்க்குக்கு பாவ மன்னிப்பு மறுமையில் பெறுவாரா


கட்டைப் பீடி மஸ்தானுக்கு கூட கப்ருகள் இருக்கிறதே
கிளியைக் கூட அவ்லியாவாக்கிய கிறுக்கர்கள் உள்ளாரே
விமானத்தைக்காணா மகானிடம் விசாவைக்கேட்பது வேடிக்கை ஆகாதா
விபத்தின்போது மகானை அழைப்பது வினையாய் முடியாதா
இல்லாத பேயை விரட்டுவதென்பது மகானின் வேலையா
இருக்கின்ற ஈமானை இழந்துத் தவிப்பது சைத்தானின் வேலையா


வயிற்றுப் பிழைப்புக்கு வழிவகை செய்திட தர்ஹா வழிபாடு
மாதவருமானத்திற்கு மக்களைச் சுரண்டிட மௌலிது ஏற்பாடு
தாயத்து தகடு சந்தனக்கூடு இஸ்லாத்தில் கிடையாது
இஸ்லாத்தில் இல்லாததை எவரேனும் செய்தால் ஈமான் கிடையாது
இப்லீஸின் ஏஜெண்டாய் இருக்கிற இமாம்கள் திருந்திட மாட்டாரா
இணைவைப்புக்கு நிரந்தர நரகம் உணர்ந்திட மாட்டாரா


என்றோ இறந்த மகானை அழைப்பது இஸ்லாத்தில் உள்ளதா
இன்றும் இருக்கிற இயேசுவை அழைத்தால் நசாரா என்பதா
படைத்தவனைவிட்டு படைப்புகளை வணங்குவது பைத்தியம் ஆகாதா
இறைவனுக்கு இணையாய் இவர்களை எண்ணுவது ஈமானைப் பறிக்காதா
சைத்தானின் வலையில் வீழ்ந்து கிடப்பது தவறாய்த் தெரியாதா
இறைவனின் சாபம் இறங்கும் முன்னே விழிப்பது கிடையாதா
நன்றி:dhargavalikedu

No comments:

Post a Comment