மவ்லூது எகிப்து நாட்டு கிருத்தவர்களின் கலாச்சாரம் (எச்சரிக்கை)
மவ்லூது பொருள் விளக்கம்
மவ்லூது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்பது பொருள்.
மவ்லூது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர். வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும்! இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லூதை கொண்டாடி வருகின்றனர். (கைசேதமே!)
மவ்லூது வகைகள் கிருத்தவ மவ்லூதுகள்
- மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது
- மேரி கிர்கிஸ் மவ்லூது
பெயர்தாங்கி முஸ்லிம் மவ்லூதுகள்
- மீலாதுன் நபி,
- சைய்யிதா ஜைனப் மவ்லுது
- சைய்யித் படாவி (SAYYID BADAWI) மவ்லூது
- சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது
- அல்-ரிஃபாயி மவ்லூது
- ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது
- அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது
மவ்லூதும் சூஃபி, ஷியா, ஷைகுமார்களின் கூத்துக்களும்
காலம் காலமாக கிருத்தவர்களை நடைமுறையை இன்றுவரை எகிப்து நாட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் பின்பற்றி மவ்லூது விழா கொண்டாடி வருகின்றனர் இந்த விழாவின் உச்ச கட்ட நாளான இறுதிநாளை LEILA-EL-KEBIRA அதாவது மிகப் பெரிய இரவு என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கூறுவதாக இருந்தால் சிவன்ராத்திரி! (கைசேதமே!)
இந்த நாளின் இரவை மகத்துவமிக்க நாளாக கருதி சூஃபிக்களும் ஷைகுமார்களும் வண்ண வண்ண ஆடை உடுத்தி நகர ஊர்வளம் சென்று ஜிக்ரு செய்து ஆடிப்பாடி மகிழுவார்கள். (கைசேதமே!)
முன்ஷிதீன் எனப்படும் பாடகர்களை வரவழைத்து ராகங்களுடன் மவ்லூது பாடி தம்புரைன் வாத்தியம் இசைத்து விடிய விடிய கூத்து கட்டுவார்கள். வாசனை திரவியங்களின் கமகமக்கும் நறுமனமும் இசையும், நடனமும் அங்கு கூடியிருப்பவர்களை தெய்வீக தன்மைக்கே அழைத்துச் செல்வதாக நம்புவார்கள். (கைசேதமே!)
மவ்லூதை சிறப்பிக்க ஏற்பாடுகள்
மவ்லூது பாடல்களை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக சூஃபிக்கள் கடுமையான பயிற்சி எடுப்பார்கள்! இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள்??) நகரத்தின் மையப்பகுதியில் வைத்து நடத்தப்படும் இங்கு சூஃபிக்கள் மவ்லூது பாடல்களை பாடவதும் ஷைகுமார்கள் அதற்கு விளக்கம் கொடுப்பதும் என கூத்து அரங்கேரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு SOWAN (சோவன்) அதாவது தங்களுக்குள்ள திறமையான அறிவாற்றலை வெளிப்படுத்துதல் என்று பொருள்.
இந்த பாடல்களை பாடுபவர்களுக்கு MAWALIDIYA அதாவது மவ்லூது பாடும் குழுவினர் என்று பெயர். இவர்கள் ஒரு இடத்தில் பாடி முடித்து மற்றொரு இடத்திற்கு பாட செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இது நடைபெறுகிறது! ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு மறு தெருவுக்கு சென்று கச்சேரி பாடுவது! (கைசேதமே!)
மவ்லூது பாடப்படும் இடமும் மக்கள் கூட்டமும் எகிப்து நாட்டில் மவ்லூது பாடப்படும் இடங்களுக்கு மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்வார்கள் மேலும் அங்கு இரவு நேர கூடாரம் அமைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் இங்கு மக்கள் சுவையான உணவுகளை உண்பதற்காகவும், ஒருவகையான புகை பழக்கமான ஷிஸா என்ற (வாட்டர் பைப்) புகைக்கவும் வருகிறார்கள். உணவு, புகை மற்றும் ஜிக்ரு ஆகியவையே இந்த மவ்லூது கச்சேரிகளில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மவ்லூது விடிய விடிய நடத்தப்படுகிறது பெண்கள் அர்த்த-ராத்திரியில் புர்கா கூட இல்லாமல் தெருக்களில் ஆண்கள் முன் அமர்வதும், ஆண் கிலடுகள் பீடி, சிகரெட் குடிப்பதும் விமரிசையாக உள்ளது! (கைசேதமே!)
மவ்லூது பாடல்களின் யார் யாருக்கு பாடப்படுகிறது! - நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளன்று பாடப்படும் மவ்லூதுக்கு MOULID-EL-NABY மீலாதுன் நபி என்று பெயர்!
- சைய்யிதா ஜைனப் மவ்லுது! நபிகளாரின் மூத்த மகளின் பெயரால் அவரது நினைவாக கட்டப்பட்ட சைய்யிதா ஜைனப் மசூதியில் (மண்ணரையில்) பாடப்படுகிறது! இது செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
- சைய்யித் படாவி (SAYYID BADAWI) அதாவது எகிப்து நாட்டு துறவியின் பெயரால் மவ்லூது பாடுதல். இது டான்டா எனப்படும் நைல் நதிக்கரையில் பாடப்படுகிறது. அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
- சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது காய்ரோவில் ஆகஸ்டு மாதம் கொண்டாடப்படுகிறது.
- அல்-ரிஃபாயி மவ்லூது சிட்டாடெல் சதுக்கத்தில் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
- ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது ஜுலை மாதம் தார்ப் அல் அஹ்மர் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது!
- அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது ஷாபான் மாதம் லக்ஸர் என்ற பகுதியில் கொண்டாடப்படுகிறது!
- மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது அன்னை மரியம் அவர்களின் நினைவாக அஸ்ஸைட் என்ற பகுதியில் காப்டிக் கிருத்தவர்களால் கொண்டாடப் படுகிறது.
- மேரி கிர்கிஸ் மவ்லூது காப்டிக் கிருத்தவர்களால் வெஸ்டு பேங்க் என்ற நைல் மற்றும் லக்ஸர் பகுதியில் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
மனிதர்களை புகழ்வது கூடுமா?
ஒரு தடவை நபிகளார் (ஸல்) முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன், ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள்.[நூல்;புஹாரி-முஸ்லீம்]
கேடுகெட்ட மவ்லூது பாடல்களை பாடிக்கொண்டே நபிமார் களையும், நல்லடியார்களையும், மனிதர்களையும் கண்ணியப் படுத்துகிறோம் என்று பெருமையாக கூறிக்கொண்டு அவர்களின் தலைகளை வெட்டும் செயல்களை செய்கிறீர்களே! மவ்லூது ரசிகர்களே நீங்கள் இந்த கொலைக்கு ஒப்பான பாவத்தை சுமக்காதீர்கள்! மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் கைசேதப்பட்டு நிற்காதீர்கள்!
நபிகளாரின் எச்சரிக்கையை பாருங்கள்
அன்புச்சகோதர சகோதரிகளே நபிகளாரின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அல்லது மறந்துவிட்டதா? மறந்து விட்டிருந்தால் மீண்டும் நினைவுபடுத்த இதோ கீழே அந்த மாநபியின் எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்
கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல் : புகாரீ (3445)
இப்போது கூறுங்கள்! இந்த மவ்லூது பாடல்களை பாடலாமா? கிருத்தவர்களின் வழிமுறையை பின்பற்றலாமா? இதோ நபிகளாரின் மற்றுமொரு கடுமையான எச்சரிக்கை உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள்!
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
இதோ அருள்மறை வசனங்கள் இதை படித்து நல்லுணர்வு பெற முயற்சி செய்யுங்கள்! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
தாயத்தை கட்டாதீர்கள்
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன் 39:65,66)
இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
தீர்ப்பு நாளின் கைசேதமே!
அதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா? (அல்குர்ஆன்:34:33)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே நன்றி! இஸ்லாமிய இணைய தளங்கள்!
No comments:
Post a Comment