Tuesday, October 12, 2010

கலகம் கொலையை விடக் கொடியது

புனிதமிகு ரமளான் மாதம் பிறை 25, செப்டம்பர் 5ம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரி பள்ளிவாசலில் ஒருதுப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் பலியாகி விட்டனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முஸ்லிம் விவகாரம் என்றதும் ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. தங்களது அன்றாட செய்திகளில்முஸ்லிம்கள் தொடர்பான கொலைச் செய்திகள் வராத ஆத்திரத்தை, அரிப்பை இதில் தாகம் தீரத் தணித்துக் கொண்டன.உலை நெருப்பை, ஊதி ஊதி ஊர் நெருப்பாக்கி மகிழ்ந்தன.
இந்த ஊடகங்களுக்குச் செய்தி வருகின்ற வழி நம்பகமான வழியா? நம்பகமற்ற வழியா? என்றெல்லாம் பார்ப்பதில்லை.சமூக அமைதிச் சூழல் மாசானாலும் பரவாயில்லை, செய்தியை செய்தீயாக்கி பரவச் செய்து காசாக்குவது தான்அதனுடைய ஒரே இலக்கும் குறிக்கோளும் ஆகும்.
இந்த அடிப்படையில் தான் துப்பாக்கியால் சுட்ட ஹாஜி முஹம்மது என்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்என்ற வதந்தியை சன் டிவி திரும்பத் திரும்ப வாந்தியெடுத்தது.
ஊடகங்கள் தான் செய்தி வந்த வழியைப் பார்ப்பதில்லை. காரணம் அவற்றுக்கு மறுமை விசாரணையில் நம்பிக்கைஇல்லை எனலாம். ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்டோம் என்று சொல்லிக் கொள்ளும் நயவஞ்சகக் கும்பல்கள்இணைய தளங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியது தவ்ஹீத் ஜமாஅத் தான் என்ற நாசக் கருத்துக்களை மின் வேகத்தைமிஞ்சிய வேகத்தில் மின்னஞ்சல்களில் பரப்பி விட்டன, பறக்க விட்டன.
இறையச்சம் இவர்களுக்கு இருக்கின்றதா? என்று எண்ணிய மறு கணத்தில் நம்முடைய உள்ளத்தில் மின்னிய பதில்,இவர்களுக்கு இதயம் இருந்தால் தானே இறையச்சம் இருக்கும் என்பது தான்.
கடந்த ஜூலை 4ல் மக்களால் மறக்க முடியாத பேரியக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாறியிருக்கின்றது என்பதைத்தாங்க முடியாத ஆத்திரத்தில், துப்பாக்சிச் சூடு செய்தி பரவிய மாத்திரத்தில் சென்னையில் அனைத்து இயக்கங்களும்கூடின. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒரேயடியாகக் குழி பறிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
"சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சுட்ட இவர்களைச் சும்மா விடக் கூடாது; நாம் அனைவரும் பேரணியாகப் புறப்பட்டுச்சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தடை செய்யுமாறு முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும்'' என்று பேசினர்.அப்போது அங்கிருந்த சிலர், "ஆதாரமில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தை இதில் இழுக்கக் கூடாது. ஆய்வு செய்து தான் நாம்முடிவுக்கு வர வேண்டும்'' என்று ஆட்சேபணை செய்ததால் இவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.
இதன் பின்னர் உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் ஒரு பயணத்தை மேற்கொண்டனர். துப்பாக்கியால்சுட்டவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தான் ஊர் மக்கள் கூறியுள்ளனர். ஆனாலும்அந்த உண்மையை மறைத்து சில நயவஞ்சகர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக சுவரொட்டிகளை சில இடங்களில்ஒட்டியுள்ளனர்.
நடந்த உண்மையை நாம் விளக்குவதற்கு முன்னால் இவர்களின் திட்டம் இன்ஷா அல்லாஹ் தோல்வியில் தான் முடியும்என்பதைச் சொல்லி வைக்கிறோம்.
ஜூலை 4 மாநாட்டின் போது, அதில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும்இவர்கள் செய்த பிரச்சாரம் கொஞ்சமல்ல! ஆனால் இவர்களின் சதித் திட்டம் பலிக்கவில்லை. இவர்கள் காலமெல்லாம்பொறாமையில் வெந்து சாகும் அளவுக்கு அல்லாஹ் மாநாட்டுக்கு மாபெரும் வெற்றியளித்தான்.
இவர்களுக்கு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்றால் இவர்கள் ஒன்று திரண்டு தவ்ஹீத் ஜமாஅத்தைத்தடை செய்யுமாறு மாபெரும் பேரணியை நடத்திக் காட்டட்டும்! தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தினாலும்அல்லாஹ் நாடினாலே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தை யாராலும் தடை செய்ய முடியாது. தடை செய்வதற்கான எந்தச்செயலையும் இந்த ஜமாஅத் செய்ததோ ஆதரித்ததோ கிடையாது.
19 ஆயிரம் அமைப்புகள் ஒன்று திரண்டு சுவரொட்டிகள் ஒட்டினாலும் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத்தைஅசைக்க முடியாது. ஏனெனில் துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினராகவோ ஆதரவாளராகவோஇருந்தால் தான் இது மக்களிடம் எடுபடும். ஆனால் சுட்டவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லைஎன்பது மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது இவர்கள் வகுத்துள்ள திட்டம் இவர்களுக்குக் கடுகளவும்உதவாது.
மாறாக, இவர்களின் கபட நோக்கத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்பதால் அவர்களுக்குத் தான்இது இழப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி வைக்கிறோம்.
இனி, திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம்.
உண்மை நிகழ்வு
திருவிடைச்சேரியில் உள்ள
பள்ளிவாசலில் கடந்த சில மாதங்களுக்கு முன் நபிவழி அடிப்படையில் தொழ அனுமதிமறுத்துள்ளனர். தொழுகைக்குச் சென்ற முஜிபுர்ரஹ்மான் என்பவரை ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் என்பவர்தாக்கியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுஅதில் இரு தரப்பும் தனித்தனி இடங்களில் தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அப்துர்ரஹீம் என்பவரது வீட்டின் மாடியில்தொழுகை நடத்தி வந்தனர்.
வீட்டுச் சொந்தக்காரரான அப்துர்ரஹீமின் குடும்பத்தினருக்கும் எதிர் வீட்டிலிருந்த ஜபருல்லாஹ் என்பவரின்குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்துள்ளது.
இந்தப் பிரச்சனையில், மாடியில் செயல்படும் மர்கஸிற்கு நோன்பு திறக்க வந்த ஸலாவுத்தீன் என்பவரது தகப்பனாரைஎதிர்வீட்டு ஜபருல்லாஹ், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் சிலர் வழிமறித்து, "இங்கு தொழுகைக்குச் செல்லக்கூடாது' என்று தடுத்துள்ளனர்.
இந்தத் தகவலை ஸலாவுத்தீன், தனது நண்பரான குத்புதீனுக்குத் தெரிவிக்க அவர் அந்த இடத்திற்கு வருகிறார்.ஜபருல்லாஹ், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் அவரது கூட்டத்தினரிடம் குத்புதீன் சமாதானமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்தக் கும்பல் குத்புதீனை உருட்டுக் கட்டையால் தாக்குகின்றது.
மர்கஸ் வாசலில் குத்புதீன் தாக்கப்பட்டுள்ளார் என்பதால் செய்தியறிந்த திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், திருவிடைச்சேரிகிளை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு, இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் கொடுக்குமாறுஅறிவுறுத்தியுள்ளனர். ஆனால் புகார் கொடுக்க குத்புதீன் மறுத்து விடவே இந்தத் தகவலை கிளை நிர்வாகிகள், மாவட்டநிர்வாகிகளிடம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் குத்புதீனைத் தொடர்பு கொண்டு, புகார் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அப்போதும் அவர், "இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று கூறி விடுகின்றார்.
இதன் பின், குத்புதீன் திருமங்கலக்குடியில் இருக்கும் தனது மச்சான் ஹாஜி முஹம்மதுவிடம், ஜமாஅத் தலைவர்இஸ்மாயீல் மற்றும் அவரது அடியாட்கள் உருட்டுக்கட்டையால் தன்னைத் தாக்கியது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார்.
கும்பலாகத் தாக்கியுள்ளார்கள் என்பதால் ஹாஜி முஹம்மது, மூன்று கார்களில் ஆட்களை அழைத்துக் கொண்டுபள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத் தலைவரிடம் நியாயம் கேட்கின்றார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுகைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஜமாஅத் தலைவர் இஸ்மாயீலின் மூக்கு உடைந்துள்ளது.
"ஜமாஅத் தலைவர் தாக்கப்பட்டு விட்டார், எல்லோரும் பள்ளிக்கு வாருங்கள்' என்று பள்ளிவாசல் ஒலிபெருக்கியில்அறிவிப்புச் செய்துள்ளனர். ஜபருல்லாஹ் மற்றும் அவரது அடியாட்கள் கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அங்குஇருந்ததால் ஹாஜி முஹம்மதை நோக்கி அந்தக் கும்பலில் ஒருவர் அரிவாளால் வெட்ட வருகின்றார். அப்போது ஹாஜிமுஹம்மதுடன் வந்த ரவி என்பவர் குறுக்கே நின்று தடுக்கும் போது ரவியில் தலையில் வெட்டு விழுகின்றது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ஹாஜி முஹம்மது, அடுத்த வெட்டு தனக்குத் தான் என்பதால் தன்னிடமிருந்ததுப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் சுட்டுள்ளார். இதற்கும் அந்தக் கும்பல் அஞ்சாமல்அவரைக் கொல்ல முற்படவே அவர்களை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல், பிரச்சனைக்குக்காரணமான ஜபருல்லாஹ் என்பவரின் மைத்துனர் ஹஜ் முஹம்மது, அடியாட்கள் பால்ராஜ், ராமதாஸ், சந்தியாகு,ஹாஜா மைதீன் ஆகியோர் காயமடைகின்றனர்.
இதில் இஸ்மாயீல் மற்றும் ஹஜ் முஹம்மது ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் இறந்து விடுகின்றனர்.பால்ராஜ், ராமதாஸ், சந்தியாகு ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதன் பின்னர் ஜபருல்லாஹ்வும் அவரது அடியாட்களும் அரிவாள், கம்பு, உருட்டுக்கட்டைகளுடன் அப்துர்ரஹீமின்வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். அப்துர்ரஹீம், அவரது மனைவி கமருன்னிஸா, மகள் மற்றும் பேரக் குழந்தைஆகியோர் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளேயிருந்துள்ளனர்.
வெளிக் கதவையும், கொல்லைப்புறக் கதவையும் உடைத்து உள்ளே சென்ற ஜபருல்லாஹ் மற்றும் அவரது அடியாட்கள்வீட்டிலிருந்த டிவி, டேபிள், அலமாரி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை உடைத்து, அலமாரியில் வைத்திருந்த தங்கநகைகள், கமருன்னிஸா அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டுள்ளனர்.
"இவர்களைக் கொல்லுங்கடா' என்று ஜபருல்லாஹ் வெறிக் கூச்சலிட, அவர்கள் அப்துர்ரஹீமை வெளியே இழுத்துஅரிவாளால் வெட்டியுள்ளனர். அப்துர்ரஹீம் தனது கைகளால் தடுத்ததால் அவரது கைகளில் வெட்டு விழுகின்றது.அவரது மனைவி கமருன்னிஸாவையும் அரிவாளின் மறு முனையால் தாக்கியுள்ளனர்.
வெட்டுக்காயம் அடைந்த அப்துர்ரஹீமும், ஹாஜி முஹம்மதுடன் வந்த ரவியும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்குஎள்ளளவும் தொடர்பில்லாத தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அப்துர்ரஹீம்ஆகியோர் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தான் நடந்த நிகழ்வு!
உண்மையில், இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்றவன்முறைக் கலாச்சாரத்தை ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆதரிக்கவும் செய்யாது.
மிக மிகச் சிறுபான்மையாக இருந்த போதும் சரி! அல்லாஹ்வின் அருளால் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்த பின்பும்சரி! பள்ளிவாசலில் தாக்கப்படும் போதெல்லாம் காவல்துறையைத் தான் நாடியிருக்கின்றோம். நீதிமன்றம் சென்றுநீதியைத் தான் நாடியிருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று திருப்பிக் கொடுக்கும் வலிமையைப் பெற்றுள்ளது.இருந்தாலும் நம்மைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்காமல் சகிப்புத் தன்மையைத் தான் கடைப்பிடிக்கின்றது.
காரணம், இறைவன் நாடினால் நாளைய தினம் இவர்கள் இந்த ஏகத்துவக் கொள்கைக்கு வந்து விடுவார்கள் என்றநம்பிக்கையிலும் நல்லெண்ணத்திலும் தான்.
இன்று ஏகத்துவத்திற்காகத் தாக்கப்படுபவர்கள், ஒரு காலத்தில் ஏகத்துவவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் தான்.
ஏகத்துவத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுத்தவர்கள் தான் இன்று இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பின் இதற்காகத்தாக்கப்படுகின்றார்கள் என்பதே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருவிடைச்சேரி சம்பவம் நடைபெற்றதற்குக் காரணம் என்ன? என்பதை இனி பார்ப்போம்.
திருவிடைச்சேரி சம்பவம்: முழு முதற் காரணம்
திருவிடைச்சேரி சம்பவம் குறித்து இறையச்சம் துளியும் இல்லாமல் பல்வேறு பொய்களை அவிழ்த்து விட்டுள்ளதுரோகிகளின் ம.உ. பத்திரிகை, "தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத்' என்று கிண்டலடித்துள்ளது.
திருவிடைச்சேரி போன்று பல பள்ளிகளில் அடி வாங்கிய தவ்ஹீது சகோதரர்கள் தான் முகம் தெரியாத இந்தத்துரோகிகளைத் தோள்களில் தூக்கிச் சுமந்தனர். அந்த நன்றி கெட்ட நாடகக் கம்பெனியினர் தான் "தவ்ஹீத் ஜமாஅத்துப்பாக்கிச் சூடு நடத்தியது' என்பதை இந்த வார்த்தையில் சொல்கின்றனர். ஹாஜி முஹம்மதை தவ்ஹீத் ஜமாஅத் என்றுநிலை நிறுத்துகின்றனர்.
திருவிடைச்சேரி பிரச்சனைக்கு மூல காரணம் என்ன? என்று பார்த்தால் இரண்டு காரணங்கள் உள்ளன.
1. பள்ளிவாசலில் தவ்ஹீது ஜமாஅத்தினரைத் தொழ விடாமல் அந்தப் பள்ளி நிர்வாகம் தடுத்தது.
2. தனிப் பள்ளி கண்ட பிறகு அங்கு வந்தும் தொழ விடாமல் தடுத்தது.
இவை தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்.
இந்தத் துரோகிகளின் பார்வையில் துப்பாக்கிச் சூடு பெரும் பாவமாகவும் பயங்கரவாதமாகவும் தெரிகின்றது. மனிதஉயிர்களைக் கொன்றது பெரும் பாவம் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அல்லாஹ்வின் பார்வையில் எது பெரும்பாவம்? எது பயங்கரவாதம்? என்பது இந்தத் துரோகிகளுக்கு, சுனாமித் திருடர்களுக்குத் தெரியவில்லை. தெரியவும்செய்யாது.
இதோ அல்லாஹ் கூறுகிறான்:
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின்பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு(மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது.கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும்உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி(ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள்நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:217
1. மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது.
2. அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது.
3. அவனை ஏற்க மறுப்பது.
ஆகியவை தான் இறைவனின் பார்வையில் கலகம் செய்வதாகும். இது கொலையை விடக் கொடியது என்றுசொல்கின்றான்.
இந்த வசனம் இறங்கிய பின்னணியைப் பார்த்தால் இதன் கருத்து இன்னும் தெளிவாகப் புரியும்.
நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளை உளவு பார்ப்பதற்காக) ஒரு கூட்டத்தை அபூஉபைதா தலைமையில்அனுப்புகின்றார்கள். அவர் செல்லத் துவங்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பின்காரணமாக அழுகின்றார்; செல்லாமல் அமர்ந்தும் விடுகின்றார். அவருக்குப் பதிலாக அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷைஅவருடைய பொறுப்பில் நியமித்து அனுப்புகின்றார்கள். அவரிடம் ஒரு கடிதத்தையும் எழுதிக் கொடுத்து, "இன்ன இடத்தைஅடைந்த பிறகு தான் இந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும்'' என்றும் அவருக்குக் கட்டளையிடுகின்றார்கள்.
(அந்தக் கடிதத்தில்) "உன்னுடைய தோழர்கள் யாரையும் உன்னுடன் வருவதற்கு நிர்ப்பந்திக்காதே'' என்றுதெரிவித்திருந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் அதைப் படித்து விட்டு, "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செவிமடுப்பதும் கட்டுப்படுவதும் நமது கடமை ஆகும்'' என்றுகூறியவாறு தன்னுடன் வந்தவர்களிடம் அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டுகின்றார். அவருடன் வந்தவர்களில் இரண்டுபேர் திரும்பி விடுகின்றர். எஞ்சியவர்கள் அவருடன் செல்கின்றனர்.
அந்தக் கூட்டத்தினர் செல்லும் வழியில் (மக்காவைச் சேர்ந்த எதிரியான) இப்னுல் ஹள்ரமி என்பவரைச் சந்தித்து, கொலைசெய்து விடுகின்றனர். அந்த நாள் (போர் தடுக்கப்பட்ட புனித மாதமான) ரஜபா? அல்லது ஜமாதில் ஆகிரா? என்றுஅவர்களுக்குத் தெரியாது.
அப்போது இணை வைப்பவர்கள், முஸ்லிம்களை நோக்கி, "(தூய இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறீர்கள்.ஆனால்) போர் தடுக்கப்பட்ட புனித மாதத்தில் கொலை செய்து விட்டீர்களே!'' என்று விமர்சிக்கின்றார்கள்.
அப்போது தான் அல்லாஹ் 2:217 வசனத்தை அருளினான்.
நூல்: முஸ்னத் அபூயஃலா, தப்ரானி
தூய்மையைப் பற்றிப் பேசும் நீங்கள் புனித மாதத்தில் தப்பு செய்யலாமா? என்று முஷ்ரிக்குகள் கேட்கிறார்கள். அதற்குத்தான் அல்லாஹ் பதிலடி கொடுக்கின்றான்.
புனித மாதத்தில் தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டது. தெரியாமல் நடந்தால் அது தவறாகாது. கொலை செய்வதுகுற்றம் தான். ஆனால் நீங்கள் செய்து கொண்டிருப்பது அதை விடப் பெருங்குற்றம்.
1. மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது.
2. அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது.
3. அவனை ஏற்க மறுப்பது.
இம்மாபெரும் பாவங்களைச் செய்து கொண்டு இந்தப் பாவத்திற்காகக் காட்டுக் கூச்சல் போடுகின்றீர்களே என்று கேட்பதுபோல் அல்லாஹ் இந்த வசனத்தை அருளுகின்றான்.
நூறு சத பொருத்தம்
திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த விஷயத்தை அப்படியே திருவிடைச்சேரி சம்பவத்துடன் பொருத்திப் பாருங்கள்.
• பள்ளியை விட்டுத் தடுத்தல். ஒரே ஒரு வித்தியாசம், அது மஸ்ஜிதுல் ஹராம். இது சாதாரண பள்ளிவாசல். ஆனால்தொழுவதற்குத் தடை விதித்தது தான் இரண்டு இடங்களிலும் நடந்துள்ளது.
பள்ளியில் தான் தொழ விடாமல் தடுத்தார்கள். சரி! தொலைந்து விட்டுப் போகிறார்கள், இவர்களது அராஜகம் தாங்கமுடியாமல் தனிப் பள்ளி துவங்கி தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகின்றனர். அங்கும் வந்து தொழ விடாமல் தடுக்கின்றனர்.
• அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; இறந்து போன பெரியார்களிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள் என்றுதவ்ஹீத் ஜமாஅத் சொல்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் ஜமாஅத்திற்கும் உள்ள பிரச்சனை இது தான்.
அவனை மட்டும் வணங்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
(ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கிஅவனிடமே பிரார்த்தியுங்கள்!
அல்குர்ஆன் 40:14
இதை இவர்கள் மக்கா காஃபிர்கள் பாணியில் மறுக்கிறார்கள். இது அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் மறுப்பதுஇல்லையா?
• அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுதல்: இறை மறுப்பாளர்கள், இறை நம்பிக்கையாளர்களை மக்காவை விட்டுவெளியேற்றியதை இது குறிக்கின்றது. இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு என சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது. இந்தசட்டத்தின் ஆட்சி மட்டும் இல்லை என்றால் சுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொட்டத்தின் ஆட்சி தான் நடக்கும். ஆம்! ஊரைவிட்டும் துரத்தி விடுவார்கள். இப்போது அவர்களால் துரத்த முடியவில்லை என்பதால் ஊர் நீக்கம் செய்துவைக்கின்றார்கள்.
பொதுக் குழாயில் தண்ணீர் கொடுக்கக் கூடாது.
திருமணப் பதிவேடு வழங்கக் கூடாது.
ஊரார் யாரும் இவர்களிடம் பேசக் கூடாது.
தவ்ஹீதுக் கொள்கையில் உள்ளவர்கள் இறந்து விட்டால் ஜனாஸாவை அடக்கம் செய்யக் கூடாது.
பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது.
இதுவெல்லாம் என்ன? மக்கா காபிர்களைப் போன்று ஊரை விட்டே துரத்தி அடிக்க முடியாது. காரணம், இவர்களிடம்ஆட்சியதிகாரம் இல்லை. இருந்தால் அதைச் செய்திருப்பார்கள். அது இல்லையென்பதால் அதற்கு இணையானகாரியத்தை இந்த ஜமாஅத்தார்கள் செய்கிறார்கள்.
அல்லாஹ்வின் பார்வையில் இவை கொலையை விடக் கொடிய கலகமாகும், கலவரமாகும். பெரும் பாவமும்பயங்கரவாதமும் ஆகும்

No comments:

Post a Comment