Sunday, October 31, 2010

அவரும் அவளை நாடினார்.

அவரும் அவளை நாடினார்.
وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَى بُرْهَانَ رَبِّه
 அப்துந் நாசிர்  M.I.Sc

சூரத்துல் யூசுஃப் என்ற 12வது அத்தியாயத்தின் 24வது வசனத்திற்குப் பொருள் செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யூசுப் (அலை) அவர்கள் ஒரு மன்னருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னருடைய மனைவி யூசுஃப் நபியவர்களின் அழகில் மயங்கி அவரை தவறான பாதைக்கு வற்புறுத்துகின்றார். இதைப் பற்றி இறைவன் 24வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்திற்கு ஒரு சாரார் பின்வருமாறு பொருள் செய்கின்றனர்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திரா விட்டால் (தவறியிருப்பார்) இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.     அல்குர்ஆன் 12:24

இம்மொழிபெயர்ப்பின்படி யூசுஃப் (அலை) அவர்கள் அப்பெண்ணை நாடி விட்டார்கள். அல்லாஹ்வின் அத்தாட்சியைப் பார்த்த காரணத்தினால் அவர்கள் அப்பெண்ணின் ஆசைக்கு இணங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மற்றொரு சாரார் இவ்வசனத்திற்குப் பின்வருமாறு பொருள் செய்கின்றனர்.

அவள் அவரை நாடினாள். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திரா விட்டால் அவரும் அவளை நாடியிருப்பார். இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.    அல்குர்ஆன் 12:24

இம்மொழிபெயர்ப்பின்படி அல்லாஹ்வின் சான்றைப் பார்த்த காரணத்தினால் யூசுஃப் நபியின் உள்ளத்தில் அப்பெண்ணைப் பற்றிய நாட்டம் அறவே ஏற்படவில்லை என்ற கருத்து வரும்.

இவ்விரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சரி என்ற ஆய்விற்கு வருவோம்.

முதல் மொழிபெயர்ப்பு தான் அரபி மொழி இலக்கணத்தின் அடிப்படையிலும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும் சரியானதாகும். இப்னு கஸீர்,  அர்ராஸீ, ஸமஹ்சரீ, அபூ ஜஃபர், அபூ இஸ்ஹாக் ,பகவீ ,போன்ற அறிஞர்கள் இரண்டாவது வகையான பொருள் கொள்வது அரபு மொழி மரபுக்கும் இலக்கணத்துக்கும் எதிரானது என்று கூறுகின்றனர். அரபு மொழி மரபுப்படி முதல் வகையான பொருள் தான் சரியானது. திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டிருப்பதால் வேறு காரணங்கள் கூறி அம்மொழி மரபுக்கு எதிராகப் பொருள் கொள்ள முடியாது.

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி), இமாம் ஷாஃபி, இப்னு தைமிய்யா, அய்னீ, முல்லா அலீ காரி, இப்னு உஸைமீன், முஹம்மது ஸைய்யித் தன்தாவீ, குஸைரி, அபூ நஸ்ர், இப்னுல் அன்பாரி, அன்னுஹாஸ், மாவிர்தீ, பி.ஜே. போன்ற பலர் முதலாவது கருத்தையே கொண்டுள்ளனர். யூசுஃப் (அலை) அவர்கள் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் செய்தி நபிமார்களின் தன்மைக்கு முற்றிலும் எதிரானது என்றாலும் முதலாவது அர்த்தத்தையே அவர்கள் கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நாட்டத்தின் இரு வகைகள்

யூசுப் (அலை) அவர்களின் உள்ளம் அப்பெண்ணை நாடியது என்று பொருள் செய்வது ஒரு நபியின் நபித்துவத்திற்கு எதிரானது என்று சில சகோதரர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே அரபி மொழி இலக்கணத்திற்கு எதிராக இருந்தாலும் இரண்டாவது வகையான பொருள் செய்வதை சரி காண்கின்றனர். 

முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

மன்னருடைய மனைவி யூசுப் நபியை நாடியதற்கும். யூசுப் (அலை) அவர்கள் அப்பெண்ணை நாடியதற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. மன்னருடைய மனைவி யூசுப் நபியின் மீது தவறான நாட்டம் கொண்டது மட்டுமல்லாமல் தன்னுடைய தவறான நாட்டத்தை அடைவதற்காக செயலிலும் இறங்கினார். இதனை திருமறைக் குர்ஆன் மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து வா! என்றாள்.  அல்குர்ஆன் 12:23

மன்னரின் மனைவி மோகம் கொண்டு யூசுப் நபியை விரட்டினார். இதைப் பற்றி திருமறை பின்வருமாறு விவரிக்கிறது.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள்.   அல்குர்ஆன் 12:25

இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார். நான் கட்டளையிடுவதை இவர் செய்யாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார். சிறுமையானவராக ஆவார் என்று அவள் கூறினாள். அல்குர்ஆன் 12:32

மன்னரின் மனைவி யூசுப் நபியின் மீது தவறான நாட்டம் கொண்டு அந்தக் கெட்ட எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயலிலும் இறங்கி விட்டார் என்பது மேற்கண்ட வசனங்கள் மூலம் தெளிவாகி விட்டது.

ஆனால் யூசுப் நபியின் நாட்டம் என்பது இவ்வாறானதல்ல. அப்பெண் யூசுப் நபியை தவறான வழியில் அடைவதற்கு ஆசைப்பட்டு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, அவளாகவே முன்வரும் போது எந்த ஒரு மனிதனுக்கும் மனதில் சலனம் ஏற்படத்தான் செய்யும்.

கடுமையான வெய்யில் காலத்தில் கடமையான நோன்பை நோற்ற ஒருவனுக்குத் தண்ணீரைப் பார்த்தால் அருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்படத் தான் செய்யும். ஆனால் அதை அருந்தினால் தான் அவன் செய்தது பாவ காரியமாகக் கருதப்படும். இது போன்று தான் யூசுப் நபியின் உள்ளத்தில் உதித்த எண்ணம். யூசுப் நபி மட்டுமல்ல. ஆதம் (அலை) முதல் உலகத்தில் இறுதியாகத் தோன்றவிருக்கின்ற மனிதன் வரை இந்தச் சலனம் ஏற்படத் தான் செய்யும். இதை யாராவது மறுத்தால் அவர் இறைவன் ஏற்படுத்திய அடிப்படை விதியை மறுக்கிறார் என்று தான் பொருள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6243

மேற்கண்ட ஹதீஸில் மனிதன் என்று மொழி பெயர்த்த வார்த்தைக்கு அரபி மூலத்தில் இப்னு ஆதம் (ஆதமுடைய மகன்) என்ற வார்த்தை உள்ளது. இது ஆதி முதல் அந்தம் வரை உள்ள மனித சமுதாயத்தைக் குறிப்பதற்குரிய சொல்லாகும்.

நபிமார்களிடம் பெரும்பாவமாகக் கூறப்படும் விபச்சாரம் போன்ற பெரும் தவறுகள் ஒரு போதும் நிகழாது. உள்ளத்தில் சலனம் ஏற்படுவது போன்ற நிலைகளுக்கு அவர்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

மார்க்க அடிப்படையில் உள்ளத்தில் ஒரு தவறை நினைத்தால் அது குற்றமாகாது. மாறாக அந்தத் தவறைச் செய்தால் தான் அது பாவமாகக் கருதப்படும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்கல் ஊசலாடும் தீய எண்ணங்களை அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெலிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2528

இது நபியவர்களின் உம்மத்திற்கு மட்டுமல்ல. இதற்கு முந்தைய சமுதாயத்திற்கும் இது தான் மார்க்க அடிப்படையாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (வானவர்கலிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி விட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகலிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7501

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் யூசுப் நபி செய்தது அவர்களுக்கு நன்மையாகத் தான் எழுதப்பட்டது என்பதில் சந்தேகமேயில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே யூசுப் நபியின் உள்ளத்தில் அந்தப் பெண்மீது நாட்டம் ஏற்பட்டது. மாறாக அப்பெண்ணைப் போன்று தவறைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த யூசுப் (அலை) எண்ணவில்லை என்பதைப் பின்வரும் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து வா! என்றாள். அதற்கவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள் எனக் கூறினார்.          அல்குர்ஆன் 12:23

இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார். அல்குர்ஆன் 12:32

இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர் என்று அமைச்சரின் மனைவி கூறினார்.         அல்குர்ஆன் 12:51

என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றா விட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து அறிவீனனாக ஆகி விடுவேன் என்றார். இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.     அல்குர்ஆன் 12:33. 34

மேற்கண்ட வசனங்கள் யூசுப் நபியின் உள்ளத்தில் தான் நாட்டம் ஏற்பட்டதே தவிர அவர் அதனை வெளிப்படுத்தவோ செயல்படுத்தவோ இல்லை என்பதற்குச் சான்று பகர்கின்றன.

நபித்துவத்திற்கு எதிரானதா?

யூசுப் நபியின் உள்ளத்தில் அப்பெண்ணின் மீது நாட்டம் ஏற்பட்டது என்று கூறும் போது அது நபித்துவத்திற்கு எதிரானது என்று கூறுவது தவறு என்பதை நாம் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையிலிருந்தே இதற்கு நாம் மற்றொரு சான்றையும் முன்வைக்கலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள் ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில் அது அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 2718

நபியவர்களின் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை இவ்வாறு நடந்துள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் தெளிவான சான்றாகும். சாதாரண நிலைகளில் கூட ஒரு அழகிய பெண்ணைப் பார்க்கும் போது மனிதனுக்கு இது போன்ற சலனங்கள் ஏற்படும் என்றால் அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் அனைத்து சூழ்நிலைகளும் வாய்ப்பாக இருக்கும் நிலையில் தானாக முன்வந்து யூசுப் (அலை) அவர்களை நிர்ப்பந்திக்கும் போது அவர்களது உள்ளத்தில் நாட்டம் ஏற்பட்டிருப்பது மனிதத் தன்மைக்கு எதிரானதல்ல. இதனால் நபித்துவத்திற்குப் பாதிப்பில்லை. இது போன்ற சலனம் கூட ஒரு நபிக்கு ஏற்படாது என்று வாதிப்பது தான் ஈமானுக்கு எதிரான நிலையாகும்.

உண்மையை உறுதிப்படுத்தும் சான்று

சிறையில் அடைக்கப்பட்ட யூசுஃப் நபியவர்களை தன்னிடம் அழைத்து வருமாறு தூதர்களுக்கு மன்னர் கட்டளையிடுகின்றார். இதைப் பற்றி திருமறை பின்வருமாறு பேசுகிறது.

மன்னர் அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! என்றார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் வந்தார். அதற்கு யூஸுஃப் உமது எஜமானனிடம் சென்று தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை அறிந்தவன் என்றார். யூஸுஃபை நீங்கள் மயக்க முயன்ற போது உங்களுக்கு நேர்ந்ததென்ன? என்று (அரசர் பெண்களிடம்) விசாரித்தார். அதற்கு அவர்கள் அல்லாஹ் தூயவன். அவரிடம் எந்த ஒழுக்கக்கேட்டையும் நாங்கள் அறியவில்லை என்றனர். இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர் என்று அமைச்சரின் மனைவி கூறினார். (என் எஜமானராகிய) அவர் மறைவாக இருந்த போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் துரோகமிழைப்போரின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிவதற்காக (இவ்வாறு விசாரணை கோரினேன் என்று யூஸுஃப் கூறினார்.) எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றும் கூறினார்).                     அல் குர்ஆன் 12:50-53

மேலே கோடிடப்பட்ட வார்த்தைகள் யூசுஃப் நபி கூறியவையாகும். எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது.

என்ற யூசுப் நபியின் வார்த்தைகள் அவருடைய உள்ளத்திலும் நாட்டம் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. யூசுஃப் நபியின் உள்ளத்தில் அறவே எந்த நாட்டமும் ஏற்படவில்லை என வாதிக்கும் அறிஞர்கள் இவை மன்னரின் மனைவியுடைய வார்த்தைகள் எனக் கூறுகின்றனர். இலக்கண அடிப்படையில் இருவரில் யாருடைய கூற்றாகவும் இதைக் கருதுவதற்கு இடமிருந்தாலும் வசனத்தின் கருத்து இது யூசுஃப் நபியின் கூற்று தான் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. மேற்கண்ட வசனத்தை அடைப்புக் குறிகளை நீக்கிப் படித்தால் பின்வருமாறு பொருள்தரும்

இதுவாகிறது அவர் மறைவாக இருந்த போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் துரோகமிழைப்போரின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிவதற்காக என்கின்ற இந்த வார்த்தைகளை நிச்சயமாக மன்னரின் மனைவி கூறியிருக்க முடியாது.

ஏனெனில் அவர் தன்னுடைய கணவருக்குத் தெளிவாகவே துரோகமிழைத்து விட்டார். மகனாகக் கருதி வளர்த்த யூசுப் நபியின் மீது தவறான முறையில் மோகம் கொண்டு வாயில்களையெல்லாம் அடைத்து வெருண்டோடிய யூசுப் நபியின் சட்டையைப் பின்புறமாகப் பிடித்து இழுத்ததோடு மட்டுமல்லாமல் யூசுப் என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லையென்றால் அவரைச் சிறுமைப்படுத்தி சிறையிலடைப்பேன் என்கின்ற அளவிற்கு சபதமெடுத்த ஒரு பெண் எவ்வாறு தன் கணவருக்குத் துரோகம் செய்யவில்லை என்று கூற முடியும்.

அப்பெண்ணுடைய கணவரும் அத்துரோகத்தை உண்மைப் படுத்தியிருக்கிறார். அப்பெண்ணும் துரோகத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது என்றார். யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு! (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்). அல்குர்ஆன் 12:28, 29

இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர் என்று அமைச்சரின் மனைவி கூறினார்.          அல்குர்ஆன் 12:51

மேற்கண்ட வசனங்கள் மன்னரின் மனைவி கணவருக்குத் துரோகமிழைத்தவர் தான் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. மன்னரின் மனைவி தான் விபச்சாரம் செய்யவில்லையே? எனவே அவள் விபச்சாரம் செய்யாத காரணத்தை வைத்து மன்னருக்குத் துரோகமிழைக்கவில்லை என்று கூறினால் என்ன? என்று கேட்கலாம்.

இதுவும் தவறான புரிதலாகும். மன்னரின் மனைவி விபச்சாரத்திற்குத் தயாராகத் தான் இருந்தார். யூசுப் (அலை) அவர்களை இறைவன் தன் சான்றைக் காட்டித் தடுத்த காரணத்தினால் தான் மன்னரின் மனைவியால் தவறு செய்ய இயலவில்லை.

விபச்சாரத்திற்குரிய உலகத் தண்டனையிலிருந்து தான் மன்னரின் மனைவி தப்பிக்க முடியுமே தவிர அவர் தவ்பா செய்யாமல் இருந்திருந்தால் மறுமையில் இறைவன் நாடினால் அவரைத் தண்டிக்க இயலும். ஏனெனில் ஒரு தீமையை நினைத்து அதை நடைமுறைப்படுத்த செயலில் இறங்கிவிட்டால் வேறு சில காரணங்களால் நாடிய காரியம் நிறைவேறாவிட்டாலும் அது முழுமையான குற்றமாகவே கருதப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர் (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார் என்று சொன்னார்கள் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 31

கொல்லப்பட்டவர் தன் சகாவைக் கொலை செய்ய நாடியிருந்தார். ஆனால் அவர் கொல்லப்பட்ட காரணத்தினால் அவரின் நாட்டம் நிறைவேறவில்லை. என்றாலும் தீமையை நாடி அதைச் செயலாற்ற அவர் களத்தில் இறங்கிய காரணத்தினால் அவர் அந்தத் தீமையைச் செய்தவராகவே கருதப்படுவார்.

அது போல் மன்னரின் மனைவி மனம் திருந்தி விபச்சாரம் செய்யாமலிருக்கவில்லை. மாறாக உள்ளத்தில் ஆசை கொண்டு அதை நடைமுறைப்படுத்த இறங்கிய பின்னர் பிற காரணங்களினால் தான் அதற்குத் தடையேற்பட்டுள்ளது. எனவே விபச்சாரம் நடக்காததால் அவர் மன்னருக்குத் துரோகமிழைக்கவில்லை எனக் கருதுவது தவறானதாகும். மேலும் மன்னரின் மனைவி அவருக்குத் துரோகமிழைத்தவர் தான் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கூறினார்கள்: ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா? (அது தான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன்) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்குக் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள்.
நூல்: அபூதாவூத் 1417

(மனைவியர்களாகிய) அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்பது, நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.
நூல்: திர்மிதி 1083

எனவே, நான் அவருக்குத் துரோகம் செய்யவில்லை என்ற இந்த வார்த்தையை மன்னரின் மனைவி தான் கூறியிருப்பார் என்ற அடிப்படையில் பொருள் செய்தால் அது தவறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.

நான் அவருக்குத் துரோகம் செய்யவில்லை என்பதையும் அதைத் தொடர்ந்து வரக் கூடிய வாசகங்களையும் யூசுப் (அலை) அவர்கள் தான் கூறியுள்ளார்கள். அவர்களுக்குத் தான் அவ்வார்த்தைகளைக் கூறுவதற்கு முழுமையான தகுதியிருக்கின்றது என்பதே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான கருத்தாகும்.
நன்றி:rasminmisc

Thursday, October 28, 2010

கோவணத்தைக் கட்டிக் கொண்டு...........


(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும். அதை இப்போது சில கூடுதல் குறிப்புகளுடன் வாசகர்களின் சிந்தனைக்குத் தருகிறோம்.புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம்.தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.

அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.

இவ்வாறு நாம் கூறுவதால், நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம். அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும், அவ்லியாக்களின் சிறப்பை நாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றி அரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காக அவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

நிர்வாணச் சாமியார்

அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.

அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.

இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளின் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.

அஷ்ஷைகு இப்ராஹீம்

ومنهم الشيخ إبراهيم العريان رضي الله تعالى عنه ورحمه...وكان رضي الله تعالى عنه يطلع المنبر ويخطب عرياناً، فيقول: السلطان ودمياط باب اللوق بين القصرين وجامع طيلون الحمد لله رب العالمين، فيحصل للناس بسط عظيم...وكان يخرج الريح بحضرة الأكابر، ثم يقول: هذه ضرطة فلان، ويحلف على ذلك، فيخجل ذلك الكبير منه، مات سنة نيف وثلاثين وتسعمائة

பொருள்: அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் நிர்வாணி அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள். அந்த உரையில் சுல்தான்,திம்யாத்,இரண்டு மாளிகைகளுக்கு இடையே உள்ள லூக் வாசல், தைலூன் பள்ளிவாசல் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று (அர்த்தமில்லாமல்) உளறுவார். இதைக் கேட்டு மக்கள் மகத்தான் ஞானம் பெறுவார்கள். பெரியவர்கள் முன்னிலையில் வேண்டுமென்றே காற்றை வெளிப்படுத்தும் இந்தப் பெரியார், (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார். இவர் 930 ஆம் ஆண்டில் மரனித்தார்.

(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)

நிர்வாணமாக ஒருவன் குத்பா ஓதி இருக்கிறான்; அதை மக்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்; மேலும் வாயல் வந்த படி மிம்பரில் இருந்து உளறியுள்ளான். இத்தகைய கிறுக்கனை அந்த மக்களும் அவ்லியா என்று கொண்டாடி இருக்கின்றனர். ஷஃரானி என்பாரும் அவ்லியா பட்டியலில் சேர்த்துள்ளதைப் பார்க்கும் போது அவ்லியாக்கள் என்போரின் இலட்சனம் பளிச்செனத் தெரிகிறது.

(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த ம()கானின் வழியில் ஜும்ஆ மேடைகளில், இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தாலும் தரலாம்.)

عن الغمري: ودخل عليه سيدي محمد بن شعيب، فرآه جالساً في الهواء، وله سبع عيون يقول. عن الشيخ أبو لعي: تدخل عليه تجده جندياً، ثم تدخل عليه، فتجده سبعاً، ثم تدخل عليه فتجده فيلاً، وكان يقبض من الأرض، ويناول الناس الذهب والفضة (ص 80، 81 جـ2 الطبقات).

இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன. இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது, அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக, வெள்ளியாக அவை மாறும்.

இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை.

பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா, காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.

كرامات علي أبو خودة: (وكان إذا رأى امرأة أو أمرد راوده عن نفسه وحسس على مقعدته سواء كان ابن أمير أو ابن وزير ولو كان بحضرة والده أو غيره ولا يلتفت إلى الناس)

அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால் உடலுறவுக்கு அழைப்பார். அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 149)

சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?

إن شيخي أخذ على العهد في القبة تجاه وجه سيدي أحمد البدوي، وسلمني إليه بيده، فخرجت اليد الشريفة من القبروقبضت على يدي قال سيدي الشناوي: يكون خاطرك عليه، واجعله تحت نظرك، فسمعت سيدي أحمد يقول من القبر: نعم!. ولما دخلت بزوجتي، وهي بكر، مكثت خمسة أشهر لم أقرب منها، فجاء، وأخذني، وهي معي، وفرش فرشاً فوق ركن قبته، وطبخ لي حلوى، ودعا الأحياء والأموات إليه، وقال: أزل بكارتها هنا، فكان الأمر تلك الليلة

(الطبقات الكبرى ج1 ص161،162)

எனது ஷைகு அவர்கள், ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத் தலத்தில் ஒரு உடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போது கப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள், கப்ரை நோக்கி, உங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க! என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்து, சரி என்று அவர் கூறியதை நான் கேட்டேன். நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத் தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும், இறந்தவர்களையும் அழைத்தார். இங்கே இவளது கன்னித் தன்மையை நீக்கு என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.

(தபகாத், பதவீயின் வரலாறு பாகம் 1 பக்கம் 161,162)

கப்ரிலிருந்து வந்து பர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமா? என்பது ஒரு புறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையா? இப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமா? என்பதே கேள்வி!

இந்த அவ்லியா பக்தர்கள், கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டி, கொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!

ஸய்யித் அல்அஜமீ

ومنهم سيدي يوسف العجمي الكوراني رضي الله تعالى عنه: وهو أول من أحيا طريقة الجنيد رضي الله عنه بمصر...ولقد وقع بصره يوماً على كلب، فانقادت إليه جميع الكلاب، إن وقف وقفوا، وإن مشى مشوا، فأعلموا الشيخ بذلك، فأرسل خلف الكلب، وقال: إخسأ، فرجعت عليه الكلاب تعضه حتى هرب منها. ووقع له مرة أخرى أنه خرج من خلوة الأربعين، فيقع بصره على كلب، فانقادت إليه جميع الكلاب، وصار الناس يُهرعون إليه (إلى الكلب) في قضاء حوائجهم، فلما مرض ذلك الكلب، اجتمع حوله الكلاب يبكون ويظهرون الحزن عليه، فلما مات أظهروا البكاء والعويل، وأَلْهَمَ الله تعالى بعض الناس فدفنوه، فكانت الكلاب تزور قبره حتى ماتوا(2)..

(الطبقات الكبرى ج2 ص62)

இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்த நாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்த நாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லா நாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரது உள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அந்த நாயை அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்...?

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 62)

யானைக்கும் கப்ரு கட்டியுள்ள பொட்டல்புதூர் வாசிகளே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.

தமிழகத்தில் நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாது; நாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

كان رضي الله عنه إذا خرج مِن الخلوةيخرج وعيناه كأنَّهما قطعة جمرٍ تتوقد ، فكلُّ مَن وقع نظره عليه انقلبت عينُه ذهباً خالصاً

பொருள்: இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் அவரது கண்கள் கொளுந்து விட்டு எரியும் தீப்பந்தம் போல் இருக்கும் யார் மீது இவரது பார்வை படுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 61)

கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு அபீ ஜம்ரா

9 عبد الله بن أبي حمزةقال أناأجتمع بالنبي صلى الله عليه وسلم يقظة ،فلزم بيته فلم يخرج إلاللجمعة حتى مات

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.

(தபகாத், பாகம்: 1, பக்கம்: 15)

குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவிலும், நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில் கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்த உலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.

ஷஃபான் அல் மஜ்தூப்

الشيخ شعبان المجذوب رضي الله عنه. وكان يقرأ سورا غير السور التي في القرآن على كراسي المساجد يوم الجمعة وغيرها فلا ينكر عليه أحد ، وكان العامي يظن أنها من القرآن لشبهها بالآيات في الفواصل

இப்பெரியார் ஜும்ஆ நாட்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளியில் இருந்து கொண்டு குர்ஆனில் இல்லாத புதிய அத்தியாயங்களை ஓதுவார். அதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பாமரன் அதுவும் குர்ஆன் தான் என்று எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவர் ஓதுவது குர்ஆன் போலவே இருக்கும்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

وقد سمعته مرة يقرأ على باب دار، على طريقة الفقهاء الذين يقرؤون في البيوت فأصغيت إلى ما يقول فسمعته يقول: وما أنتم في تصديق هود بصادقين ، ولقد أرسل الله لنا قوماً بالمؤتفكات يضربونناويأخذون أموالنا وما لنا من ناصرينثم قال: اللهم اجعل ثواب ما قرأناه من الكلام العزيز في صحائف فلان وفلان إلى آخر ما قال

மார்க்க அறிஞர்கள் வீடுகளுக்குச் சென்று குர்ஆன் ஓதுவது போல் இந்தப் பெரியார் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஓதினார். அவர் என்ன ஓதுகிறார் என்று செவிமடுத்தேன். வமாஅன்தும் ஃபீதஸ்தீகி ஹுதின் பிஸாதிகீன். வலகத் அர்ஸலல்லாஹுலனா கவ்மன். பில் முஃதபிகாதி யள்ரிபூனனா வயஃகுதூன அம்வாலனா மின் நாஸிரீன் என்று ஓதினார். (இது குர்ஆனில் இல்லாததாகும்.) இப்படி ஓதி விட்டு, இறைவா, கண்ணியமிக்க வேதத்திலிருந்து ஓதிய நன்மையை... என்று துஆச் செய்தார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

எள்ளளவு இறையச்சம் உள்ள எவரும் குர்ஆனுடன் எதையும் கலக்கத் துணிய மாட்டார். ஆனால் இந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்! இவருக்குப் பெயர் இறை நேசராம்!

وكانرضيالله عنهعرياناًلايلبسإلاقطعةجلدأوبساطأ وحصيرأولباديغطيقبلهودبرهفقط

இந்தப் பெரியார் முன்பகுதி, பின்பகுதியை மறைக்கும் விதமாகக் கோவணமே கட்டியிருப்பார்.

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)

குறிப்பு: ஆறேழு மீட்டர்களில் ஆள் மூழ்கிப் போகும் அளவுக்குத் துணியில் ஜிப்பாவும், குஞ்சான் வைத்த துருக்கி தொப்பியும் அணிய வேண்டிய அவசியம் இந்தப் பரேலவிகளுக்கு இல்லை. ஒட்டுக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு காசை மிச்சப்படுத்தலாம்.

وأخبرني الشيخ أبو الفضل السرسي أنه جاءهم يوم الجمعة، فسألوه الخطبة، فقال: بسم الله؛ فطلع المنبر، فحمد الله وأثنى عليه ومجده، ثم قال: وأشهد أن لا إله لكم إلا إبليس عليه الصلاة والسلام، فقال الناس: كفر. فسل السيف ونزل، فهرب الناس كلهم من الجامع، فجلس عند المنبر إلى أذان العصر وما تجرأ أحد أن يدخل الجامع، ثم جاء بعض أهل البلاد المجاورة، فأخبر أهل كل بلد أنه خطب عندهم وصلى بهم، قال: فعددنا له ذلك اليوم ثلاثين خطبة، هذا ونحن نراه جالساً عندنا في بلدنا

طبقات الشعراني: (2/107

ஷைகு முஹம்மத் அல்கள்ரீ என்பார் ஒரு வெள்ளிகிழமை அன்று வந்தார். அவர் ஜும்மா உரை நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் கேட்டனர். அவர் அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி விட்டு மிம்பரில் ஏறினார். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி விட்டு இப்லீஸைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை என்று நான் உறுதி கூறுகிறேன் என்றார். இது குஃப்ராகும் என்று மக்கள் கூறினார்கள். அந்தப் பெரியார் வாளை உருவிக் கொண்டு கீழே இறங்கினார். பள்ளிவாசலில் இருந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர். அஸருக்கு பாங்கு சொல்லும் வரை மிம்பரில் அமர்ந்து கொண்டார். யாரும் பள்ளிவாசலில் நுழையத் துணியவில்லை. அருகில் உள்ள பல ஊர் வாசிகள் வந்து இவர் எங்கள் ஊரில் குத்பா உரை நிகழ்த்தி தொழுகை நடத்தினார் என்று கூறினார்கள். இவ்வாறு முப்பது ஊர்களில் குத்பா நிகழ்த்தியதாகத் தெரிந்தது. இவர் இந்த இடத்தில் தானே உட்கார்ந்திருக்கிறார் என்று ஊர் வாசிகள் ஆச்சரியப்பட்டனர்.

இப்லீஸின் கூட்டம் தான் அவ்லியாக்களாக்கப்பட்டுள்ளர் என்பது இதன் முலம் தெரிய வருகிறது.

ومنهم الشيخ محمد الشربيني رحمه الله تعالى، شيخ طائفة الفقراء بالشرقية، كان من أرباب الأحوال والمكاشفات...ولما ضعف ولده أحمد، وأشرف على الموت، وحضر عزرائيل لقبض روحه، قال له الشيخ: ارجع إلى ربك فراجعه فإن الأمر نُسخ؟ فرجع عزرائيل وشفي أحمد

طبقات الشعراني: (2/136

ஷைகு முஹம்மத் அஷ்ஷர்பீனியின் மகன் நோய்வாய்ப்பட்ட மரணத்தை நெருங்கிய போது உயிரை எடுக்க இஸ்ராயீல் வந்தார். அப்போது அந்தப் பெரியார் இஸ்ராயிலிடம் நீ உன் இறைவனிடம் திரும்பிச் செல்! காரியம் மாற்றப்பட்டு விட்டது என்றார்.

தபகாத் பாகம் 2 பக்கம் 136

وكان الشيخ محمد بن عنان وغيره ينكرون عليه لعدم صلاته مع الجماعة، ويقول: نحن ما نعرف طريقة تقرب إلى الله تعالى إلا ما درج عليه الصحابة والتابعون...له ذرية بأرض الغرب، وذرية في بلاد العجم، وذرية في بلاد الهند، وذرية في بلاد التكرور، فكان في ساعة واحدة يطوف على عياله في هذه البلاد ويقضي حوائجهم، وكل أهل بلاد يقولون: إنه مقيم عندهم، ولتبدله في هذه الصور، وتصرفه في هذه الأشكال، كان ربما أنكر عليه بعض الفقهاء ترك الجمعة...وكان إذا أراد أن يعدِّي في البحر يقول له المعدِّي: هات كراء...فقال الشيخ: (ها الله)، وطأطأ الإبريق، فأخذ ماء البحركله فيه!! ووقف المركب على الأرض، فاستغفر المعدِّي وتاب، فصب الإبريق في البحر، ورجع الماء كما كان

طبقات الشعراني: (2/136

முஹம்மத் பின் அனான் என்ற பெரியார் ஜமாஅத் தொழுகைக்கு வர மாட்டார். இறைவனை நெருங்கும் வழி நபித்தோழர்களுக்குத் தெரிந்தது போல் எங்களுக்கும் தெரியும் எனக் கூறுவார். இவருக்கு மேற்குலகில் ஒரு ஊரிலும், அரபியல்லாத ஊரிலும் இந்தியாவில் உள்ள் ஊரிலும் தக்ரூர் பகுதியில் உள்ள ஊரிலும் மனைவி மக்கள் இருந்தனர். ஒரே நேரத்தில் நான்கு மனைவியிடமு செல்வார். இவர் கடலைக் கடந்து செல்ல நாடினால் கடல் நீரை ஒரு கூஜாவில் அடைத்திடுவார். தரைப்பகுதியாக கடல் மாறிய பிறகு குதிரையில் ஏறிப் பயணிப்பார். கடலைக் கட்ந்த பின் கூஜாவில் உள்ள தண்ணீரை ஊற்றுவார். உடனே பழைய படி கடல் நிறைந்து விடும்.

இது விட்டலாச்சாரி கதை அல்ல. சுன்னத் ஜமாஅத்தின் அவ்லியாக்கள் கதை தான்.

قال في ترجمة من سماه بسيده علي وحيش: وكان إذا رأى شيخ بلد، أو غيره ينزله من على الحمار ويقول: امسك رأسها حتى أفعل فيها. فإن أبى شيخ البلد تسمر في الأرض ولا يستطيع أن يمشي خطوة. وإن سمح حصل له خجل عظيم والناس يمرون عليه!! (الطبقات الكبرى ج2ص135)

ஸையித் அலீ வஹீஷ் என்ற பெரியார் முதியவர் யாரேனும் கழுதையில் ஏறி வரக் கண்டால் அவரைக் கழுதையில் இருந்து கீழே இறக்கி விடுவார். கழுதையின் தலையைப் பிடித்துக் கொள்! நான் பின்பக்கமாகச் செய்கிறேன் என்று கூறுவார். முதியவர் இதற்கு மறுத்தால் அந்தப் பெரியவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பூமி பிடித்துக் கொள்ளும். அவர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் மேற்படி பெரியாருக்கு வெட்கம் வந்து விடுமாம்! மக்களெல்லாம் கழுதையில் வேலை செய்யும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே செல்வார்களாம்!

இவர்களை அவ்லியாக்கள் என்று மதரஸாவில் சொல்லிக் கொடுத்த பிறகும் உங்களுக்கு புத்தி வரவில்லையா? அல்லது இதெல்லாம் அவலியாக்களுக்கு சகஜமப்பா என்று கூறப் போகிறீர்களா? என்று ஷேக் அப்துல்லா ஜமாலிகளைக் கேட்கிறோம்.

இவை அவ்லியாக்களின் இலட்சணங்களில் சில பகுதிகளாகும். சுன்னத் வல்ஜமாஅத்தின் மிகப் பெரும் இமாமாக மதிக்கப்படும் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்களின் நூலில் காணப்படும் இந்த விஷயங்களைக் கவனிக்கும் போது, கடந்த காலங்களில் யாரெல்லாம் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள் என்பது விளங்க வரும்.

இந்த சுன்னத் ஜமாஅத்தினர், இந்த உயர்ந்த (?) பண்புடையவர்களை இன்றளவும் அவ்லியாக்கள் என்று நம்புகின்றனர். மவ்லிதுக் கிதாபுகளில் வரும் துஆக்களில் இவர்களின் பெயர்களும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் பொருட்டால் கேட்கப்படும் துஆக்களும் உள்ளன.

நியாய உணர்வும், சிந்திக்கும் திறனும், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி ஓரளவு அறிவும் இருக்கும் முஸ்லிம்களே! இந்தத் தன்மைகள் அவ்லியாக்களுடையது என்பதை நம்ப முடிகின்றதா? சிந்தியுங்கள். இப்படித் தான் நம்மை ஏமாற்றியுள்ளனர் இந்த முல்லாக்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

(عبد الكريم الدمشقي) سألوه: هل تستطيع أن تشرب كل ما في هذه البركة؟ فقال: إملأوها. فأخذه حال عجيب ووضع فمه في البركة فصار يشرب والماء يخرج من إحليله (ذَكَرِهِ) ولم يزل كذلك يدخل الماء من فمه ويخرجه من إحليله إلى أن فَرَغت البركة. قال النبهاني: وهي من أعظم كرماته(1)

அப்துல் கரீம் திமிஷ்கீ என்ற பெரியாரிடம் இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதையும் உங்களால் குடிக்க முடியுமா என்று மக்கள் கேட்டனர். அவர் தனது வாயை வைத்து குடிக்கலானார். உள்ளே சென்ற தண்ணீர் அவரது ஆணுறுப்பு வழியாக வெளியேற ஆரம்பித்தது. இப்படியே முழுக் குளத்தின் தண்ணீரும் வெளியேறியதாம்

...ومنهم سيدي الشيخ شهاب الدين الطويل النشيلي رضي الله تعالى عنه...وكان ينادي خادمه وهو في الصلاة، فإن لم يجبه مشى إليه وصكه ومشى به وقال: كم أقول لك لا تعد تصلي هذه الصلاة المشئومة، فلا يستطيع أحد يخلصه منه(2)...

ஷைகு ஷிஹாபுத்தீன் அவர்கள் தனது ஊழியர் தொழுது கொண்டிருக்கும் போது அழைப்பார். ஊழியர் உடனே வராவிட்டால் நடந்து வந்து பலமாக அடிப்பார். இந்த நாசமாப் போன தொழுகை வேண்டாம் என்று உனக்கு எத்தனை தடவை சொல்வது? எனக் கூறி அடிப்பார். அவரிடமிருந்து அந்த ஊழியரை யாராலும் காப்பாற்ற முடியாது.

...ومنهم سيدي إبراهيم بن عصيفير رضي الله تعالى عنه آمين...وكان كثير الكشف، وله وقائع مشهورة...وكان بوله كالحليب أبيض، وكان يغلب عليه الحال فيخاصم ذباب وجهه، وكان يتشوش من قول المؤذن (الله أكبر) فيرجمه ويقول: عليك يا كلب نحن كفرنا يا مسلمين حتى تكبروا علينا!

இப்ராஹீம் பின் உசைபிர் என்பார் மிகுந்த ஞானம் உள்ளவராக இருந்தார். அவரது மூத்திரம் பால் போல வெளிப்படும். முஅத்தின் அல்லாஹு அக்பர் என்று கூறினால் அவரைக் கல்லால் அடிப்பார். நாயே உன்னோடு இதை வைத்துக் கொள்! முஸ்லிம்களே நாங்கள் காபிராகி விட்டோம். எங்களிடம் அல்லாஹு அக்பர் கூறுவது ஏன்? என்று கேட்பார்.

இவர்கள் அவ்லியாக்கள் பெயராலும், தரீக்காவின் பெயராலும் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனையில் இருந்துள்ளனர் என்பதற்கு இறுதிச் சான்றாக ஒன்றைத் தருகிறோம். அதை அரபி மொழியில் மட்டுமே தர முடியும். அதைத் தமிழில் தருவதற்கு எங்கள் கைகள் கூசுகின்றன. இந்தியத் தண்டனைச் சட்டமும் சும்மா விடாது. அவ்வளவு ஆபாசம்! தெரிந்தவர்களிடம் அர்த்தம் கேட்டுக் கொள்க!

இதைப் பொது மேடையில் வாசித்து அப்படியே தமிழாக்கம் செய்ய முன்வரும் சு.ஜ. உலமாக்களுக்கு ரூபாய் 500 தரப்படும்.

عبد القادر السبكي

وكان يتكلم بالكلام الذي يستحي منه عرفاً وخطب مرة عروسة فرآها فأعجبته فتعرى لها بحضرة أبيها.وقال انظري أنت حتى لاتقولي بعد ذلك بدنه خشن أوفيه برص أوغيرذلك ثم مسك ذكره وقال انظري هل يكفيك هذا وإلا فربما تقولي هذا ذكركبيرلاأحتمله أويكون صغيراً لايكفيك فتقلقي مني وتطلبي زوجاً أكبر آلة مني

(தபகாத், பாகம்: 2, பக்கம்: 186)

இதற்கும் பொது மேடையில் அர்த்தம் செய்யுமாறு ஷேக் அப்துல்லா ஜமாலீ வகையறாக்களை வற்புறுத்துங்கள்

ومن كراماته رضي الله عنه ما أخبرني به الحاج إبراهيم المذكور (إبراهيم الحداد من اللاذقية)، قال: دخلت في هذا النهار إلى الحمام مع شيخنا الشيخ علي العمري، ومعنا خادمه محمد الدبوسي الطرابلسي، وهو أخو إحدى زوجات الشيخ، ولم يكن في الحمام غيرنا، قال: فرأيت من الشيخ كرامة من أعجب خوارق العادات وأغربها، وهي أنه أظهر الغضب على خادمه محمد هذا وأراد أن يؤدبه، فأخذ الشيخ إحليل نفسه بيديه الاثنتين من تحت إزاره، فطال طولاً عجيباً بحيث إنه رفعه على كتفه وهو زائد عنه، وصار يجلد به خادمه المذكور، والخادم يصرخ من شدة الألم، فَعل ذلك مرات ثم تركه، وعاد إحليله إلى ما كان عليه أولاً، ففهمت أن الخادم قد عمل عملاً يستحق التأديب، فأدَّبه بهذه الصورة العجيبة. ولما حكى لي ذلك الحاج إبراهيم، حكاه بحضور الشيخ، وكان الشيخ واقفاً، فقال لي الشيخ: لا تصدقه وانظر، ثم أخذ بيدي بالجبر عني، ووضعها على موضع إحليله، فلم أحس بشيء مطلقاً، حتى كأنه ليس برجل بالكلية، فرحمه الله ورضي عنه ما أكثر عجائبه وكراماته(2).

جامع النبهاني: (2/396)

இவரெல்லாம் அவ்லியாவா? சுன்னத் ஜமாஅத்தின் காவலர்களே! ஷைகு முரீது வியாபாரிகளே! இதற்குப் பொது மேடையில் அர்த்தம் செய்ய முன்வருவீர்களா? அல்லது இந்தக் குப்பைகளைக் கொளுத்தத் தயாரா?

அரபியில் எழுதப்பட்டதால், முன்னோர்கள் அங்கீகரித்ததால் மத்ஹபைக் கட்டிக் கொண்டு அழுவோரே! சிந்தியுங்கள்.

கம்ப ராமாயணத்தின் காம ரசத்தை விளக்க அறிஞர் அண்ணா, கம்ப ரசம் எழுதினார். அவருக்கு இந்த ஷஃரானியின் ஆபாசக் களஞ்சியம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இந்த அம்மண சாமியார்களின் ஆபாச ரசத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காக தபகாத் ரசம் எழுதியிருப்பார்.

ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் கோவணத்தைக் கட்டிக் கொண்டு, அல்லது அஷ்ஷைகு (?) இப்ராஹீம் என்ற அவ்லியாவைப் போன்று கோவணமும் இல்லாமல் மேடைக்கு வந்து இந்த ஆபாசக் களஞ்சியத்திற்கு அர்த்தம் செய்வார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்ப்போமாக!

இதைப் பொது மேடையில் மொழிபெயர்ப்பவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். தற்போது பண மதிப்பைக் கவனத்தில் கொண்டு ரூ. 5,000 வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thanks :onlinepj.com

Wednesday, October 27, 2010

மவ்லூது கிருத்தவ நடைமுறை


மவ்லூது எகிப்து நாட்டு கிருத்தவர்களின் கலாச்சாரம் (எச்சரிக்கை)மவ்லூது பொருள் விளக்கம்
மவ்லூது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்பது பொருள்.
மவ்லூது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர்.  வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும்!  இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லூதை கொண்டாடி வருகின்றனர். (கைசேதமே!)
மவ்லூது வகைகள்
கிருத்தவ மவ்லூதுகள்
 1. மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது
 2. மேரி கிர்கிஸ் மவ்லூது
பெயர்தாங்கி முஸ்லிம் மவ்லூதுகள்
 1. மீலாதுன் நபி,
 2. சைய்யிதா ஜைனப் மவ்லுது
 3. சைய்யித் படாவி (SAYYID BADAWI) மவ்லூது
 4. சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது
 5. அல்-ரிஃபாயி மவ்லூது
 6. ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது
 7. அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது


மவ்லூதும் சூஃபி, ஷியா, ஷைகுமார்களின் கூத்துக்களும்

மவ்லூதும் கூத்தும்
காலம் காலமாக கிருத்தவர்களை நடைமுறையை இன்றுவரை எகிப்து நாட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் பின்பற்றி மவ்லூது விழா கொண்டாடி வருகின்றனர் இந்த விழாவின் உச்ச கட்ட நாளான இறுதிநாளை LEILA-EL-KEBIRA அதாவது மிகப் பெரிய இரவு என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கூறுவதாக இருந்தால் சிவன்ராத்திரி! (கைசேதமே!)
இந்த நாளின் இரவை மகத்துவமிக்க நாளாக கருதி சூஃபிக்களும் ஷைகுமார்களும் வண்ண வண்ண ஆடை உடுத்தி நகர ஊர்வளம் சென்று ஜிக்ரு செய்து ஆடிப்பாடி மகிழுவார்கள். (கைசேதமே!)
முன்ஷிதீன் எனப்படும் பாடகர்களை வரவழைத்து ராகங்களுடன் மவ்லூது பாடி தம்புரைன் வாத்தியம் இசைத்து விடிய விடிய கூத்து கட்டுவார்கள். வாசனை திரவியங்களின் கமகமக்கும் நறுமனமும் இசையும், நடனமும் அங்கு கூடியிருப்பவர்களை தெய்வீக தன்மைக்கே அழைத்துச் செல்வதாக நம்புவார்கள். (கைசேதமே!)
மவ்லூதை சிறப்பிக்க ஏற்பாடுகள்

மவ்லூது பாடும் பெண்கள்! கை சேதமே! கை சேதமே!
மவ்லூது பாடல்களை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக சூஃபிக்கள் கடுமையான பயிற்சி எடுப்பார்கள்! இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள்??) நகரத்தின் மையப்பகுதியில் வைத்து நடத்தப்படும் இங்கு சூஃபிக்கள் மவ்லூது பாடல்களை பாடவதும் ஷைகுமார்கள் அதற்கு விளக்கம் கொடுப்பதும் என கூத்து அரங்கேரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு SOWAN (சோவன்) அதாவது தங்களுக்குள்ள திறமையான அறிவாற்றலை வெளிப்படுத்துதல் என்று பொருள்.
இந்த பாடல்களை பாடுபவர்களுக்கு MAWALIDIYA அதாவது மவ்லூது பாடும் குழுவினர் என்று பெயர். இவர்கள் ஒரு இடத்தில் பாடி முடித்து மற்றொரு இடத்திற்கு பாட செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இது நடைபெறுகிறது! ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு மறு தெருவுக்கு சென்று கச்சேரி பாடுவது! (கைசேதமே!)
மவ்லூது பாடப்படும் இடமும் மக்கள் கூட்டமும்

மீலாது விழாவில் ஆண்களுடன் பெண்கள் (ஹிஜாப் எங்கே!) இவர்களுக்கு வெட்கமில்லையா?
எகிப்து நாட்டில் மவ்லூது பாடப்படும் இடங்களுக்கு மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்வார்கள் மேலும் அங்கு இரவு நேர கூடாரம் அமைத்துக் கொள்வார்கள்.  பெரும்பாலும் இங்கு மக்கள் சுவையான உணவுகளை உண்பதற்காகவும், ஒருவகையான புகை பழக்கமான ஷிஸா என்ற (வாட்டர் பைப்) புகைக்கவும் வருகிறார்கள். உணவு, புகை மற்றும் ஜிக்ரு ஆகியவையே இந்த மவ்லூது கச்சேரிகளில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மவ்லூது விடிய விடிய நடத்தப்படுகிறது பெண்கள் அர்த்த-ராத்திரியில் புர்கா கூட இல்லாமல் தெருக்களில் ஆண்கள் முன் அமர்வதும், ஆண் கிலடுகள் பீடி, சிகரெட் குடிப்பதும் விமரிசையாக உள்ளது! (கைசேதமே!)
மவ்லூது பாடல்களின் யார் யாருக்கு பாடப்படுகிறது!
 • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளன்று பாடப்படும் மவ்லூதுக்கு MOULID-EL-NABY மீலாதுன் நபி என்று பெயர்!
 • சைய்யிதா ஜைனப் மவ்லுது! நபிகளாரின் மூத்த மகளின் பெயரால் அவரது நினைவாக கட்டப்பட்ட சைய்யிதா ஜைனப் மசூதியில் (மண்ணரையில்) பாடப்படுகிறது! இது செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
 • சைய்யித் படாவி (SAYYID BADAWI) அதாவது எகிப்து நாட்டு துறவியின் பெயரால் மவ்லூது பாடுதல்.  இது டான்டா எனப்படும் நைல் நதிக்கரையில் பாடப்படுகிறது.  அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
 • சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது காய்ரோவில் ஆகஸ்டு மாதம் கொண்டாடப்படுகிறது.
 • அல்-ரிஃபாயி மவ்லூது சிட்டாடெல் சதுக்கத்தில் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
 • ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது ஜுலை மாதம் தார்ப் அல் அஹ்மர் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது!
 • அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது ஷாபான் மாதம் லக்ஸர் என்ற பகுதியில் கொண்டாடப்படுகிறது!
 • மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது அன்னை மரியம் அவர்களின் நினைவாக அஸ்ஸைட் என்ற பகுதியில் காப்டிக் கிருத்தவர்களால் கொண்டாடப் படுகிறது.
 • மேரி கிர்கிஸ் மவ்லூது காப்டிக் கிருத்தவர்களால் வெஸ்டு பேங்க் என்ற நைல் மற்றும் லக்ஸர் பகுதியில் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!


மனிதர்களை புகழ்வது கூடுமா?
ஒரு தடவை நபிகளார் (ஸல்) முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன், ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள்.[நூல்;புஹாரி-முஸ்லீம்]
கேடுகெட்ட மவ்லூது பாடல்களை பாடிக்கொண்டே நபிமார் களையும், நல்லடியார்களையும், மனிதர்களையும் கண்ணியப் படுத்துகிறோம் என்று பெருமையாக கூறிக்கொண்டு அவர்களின் தலைகளை வெட்டும் செயல்களை செய்கிறீர்களே! மவ்லூது ரசிகர்களே நீங்கள் இந்த கொலைக்கு ஒப்பான பாவத்தை சுமக்காதீர்கள்! மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் கைசேதப்பட்டு நிற்காதீர்கள்!


நபிகளாரின் எச்சரிக்கையை பாருங்கள்
அன்புச்சகோதர சகோதரிகளே நபிகளாரின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அல்லது மறந்துவிட்டதா? மறந்து விட்டிருந்தால் மீண்டும் நினைவுபடுத்த இதோ கீழே அந்த மாநபியின் எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்
கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : உமர் (ர­லி) நூல் : புகாரீ (3445)
இப்போது கூறுங்கள்! இந்த மவ்லூது பாடல்களை பாடலாமா? கிருத்தவர்களின் வழிமுறையை பின்பற்றலாமா? இதோ நபிகளாரின் மற்றுமொரு கடுமையான எச்சரிக்கை உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள்!
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

இதோ அருள்மறை வசனங்கள் இதை படித்து நல்லுணர்வு பெற முயற்சி செய்யுங்கள்! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
தாயத்தை கட்டாதீர்கள்
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன் 39:65,66)

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)


தீர்ப்பு நாளின் கைசேதமே!
அதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா? (அல்குர்ஆன்:34:33)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே                                                  நன்றி! இஸ்லாமிய இணைய தளங்கள்!


சிலை வணக்கம் ஒரு கண்ணோட்டம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சிலை வணக்கம் ஒரு கண்ணோட்டம்!
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே
படைத்த இறைவன் (அல்லாஹ்) மனிதனுக்கு அறிவைக் கொடுத்தான் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்தான் மனவலிமை மற்றும் உடல் வலிமையையும் கொடுத்தான் ஆனால் இந்த பாக்கியங்கள் அனைத்தையும் பெற்ற மனிதன் படைத்த இறைவனை மறந்துவிட்டு அவனை வணங்குகிறோம் என்று கூறிக்கொண்டு சிலைகளையும் சிற்பங்களையும் வணங்குகிறான். 

சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் தெய்வீகமாக எண்ணி வணங்கக் கூடிய அந்த கற்சிலைகள் மலையிலிருந்து பெயர்ந் தெடுக்கப்படுகின்றன ஒருகாலத்தில் அவைகளில் சிலர் சிறுநீர் கழித்திருக்கலாம், ஆடுமாடுகள் மலஜலம் கழித்து கால் வைத்து நின்றிருக்கலாம், காக்கையும் குருவியும் கூடுகட்டி வாழந்திருக்கலாம் அப்படிப்பட்ட கற்களைத்தான் சிலைகளாக வடிக்கின்றனர். அந்த கற்களில் அழகான சிற்பம் வடிக்கப்பட்டவுடன் அதற்கு தெய்வீக தன்மை வருவதாக எண்ணிக்கொள்கிறீர்கள்.  உண்மையில் அந்த கற்சிலைகளுக்கு தெய்வீக தன்மை இருந்திருக்குமேயானால் ஏன் தானாகவே உருவாகவில்லை? மனிதன் ஏன் அந்த கல்லை செதுக்க வேண்டும்?

கற்சிலைகள் பற்றி சிந்தித்துப்பாருங்கள்
சிலைகளுக்கு கண், காது, மூக்கு, வாய், கால்கள், கைகள் ஆகியன கொடுக்கிறீர்கள் மேலும் மர்மஸ்தான உறுப்புகளையும் அதிலேயே செதுக்குகிறீர்கள் இப்படிப்பட்ட அந்த சிலைகள் எதையாவது படைக்குமா? இதோ உங்களை படைத்த அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்!
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”" என்று (அல்குர்ஆன் 7:195)

கிரோக்க ரோமானிய சிலைகளும் ஆபாசமும்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலுக்கேற்ப மனிதன் கற்கைளைக் கொண்டு பலவகையான வேலைப்பாடுகள் மிக்க சிலைகளை செதுக்கினான். அதிலும் குறிப்பாக ரோமானிய சிலைகளை செதுக்கிய சிற்பிகள் அந்த சிலைகளில் பெரும்பாலும் ஆபாசத்தை தூண்டும் விதத்தில் வடிவங்களை கொடுத்தன. ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக நிற்பதைப் போலவும் அவர்களை சுற்றி பல நிர்வாண மக்கள் மகிழ்ச்சி ஆராவராம் செய்வதைப் போலவும் வடிப்பார்கள் அப்படிப்பட்ட சிலைகளை இன்றும் ரோம் நகரில் காணலாம். அப்படிப்பட்ட சிலைகளை ஆதாரத்துடன் இந்த கட்டுரையில் காட்ட இயலும் ஆனால் ஆபாசத்தை நாமாக வலியவந்து பரப்பக்கூடாது என்ற கொள்கையில் முஸ்லிம்களாகிய நாம் இருப்பதால் அதை இங்கு தவிர்த்துள்ளோம். இந்தக் கற்சிலை கலைநுணுக்கம் மக்களுக்கு ஆபாசத்தைத் தவிர எதைக் கொடுக்கிறது.

தமிழக சிலைகளும் ஆபாசமும்

கற்சிலைகளை வடிப்பதில் தமிழர்களுக்கு ஈடு இணை கிடையாது அந்த அளவுக்கு கலை நுணுக்கமாக சிலைகளையும் சிற்பங் களையும் தமிழர்கள் செதுக்கி வந்தனர், வருகின்றனர்.
மன்னர்கள் காலத்தில் சிலைகளை வடித்தவுடன் அதை மக்களுக்கு வெளிக்காட்டும் விதமாக விழாக்கள் நடத்தி மகிழ்வர்கள் அவைகள் ஆண்டாண்டுகாலமாக நடைபெற்று காலப்போக்கில் கோவில் திருவிழாக்களாக மறுவி தற்போது தெய்வீக சிலைகளாக மாறி நிற்கின்றன. சிந்தித்துப்பாருங்கள் சிலைகளை செதுக்குகின்ற சிற்பியின் வியர்வை, சலி ஆகியன இந்த தெய்வீகமாக கருதப்படும் சிலைகள் மீது படாமலா இருந்திருக்கும் இதையெல்லாம் சிந்திக்காமல் இன்றுவரை சிலைகளில் தெய்வீக கடாட்ஷம் வெளிப்படுவதாக எண்ணிக்கொண்டு அதை வழிபட்டும் வருகின்றனர் உண்மையை உணரமாட்டார்களா? எந்த மதமாக இருந்தாலும் மார்க்கமாக இருந்தாலும் அவரவர் முறைப்படி வழிபாடு நடத்தப்படக்கூடிய இடங்கள் புனிதமாக கருதப்படுவது தொன்றுதொட்டு நிகழும் நிகழ்ச்சியாகும் அப்படிப்பட்ட வழிபாட்டுத்தளங்களில் ஆபாச சிலைகள் கூடுமா? இதோ கீழ்கண்ட சிலைகளை காணுங்கள்!

சிந்தித்துப்பாருங்கள் தமிழர் பண்பாடு என்று வாணுயற பேசுகிறீர்கள் ஆனால் ஆபாசம் நிறைந்த நிர்வாண பெண் சிலைகளையும், நிர்வாண ஆண் சிலைகளையும்தானே வழிபாட்டுத்தளங்களில் வைத்து வழிபட்டும் பார்த்தும் மகிழுகிறீர்கள் இது என்ன பண்பாடு?

இதோ இறை தூதர் இப்ராஹீம்  (அலை) வார்த்தைகளை கேளுங்கள் 
(என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன் எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 14-36)
சிலைகளை கடுமையாக எதிர்க்கும் பைபிள் வசனங்கள்!

பைபிள் வேதத்தில் சிலை வணக்கத்தை எதிர்த்து கடுமையான வசனங்கள் இருக்கின்றன ஆனால் கிருத்தவ சகோதரர்கள் அதை மதிப்பதில்லை மாறாக பைபிள் வசனங்களுக்கு நேர்மாறாக நடந்துக்கொண்டு தங்கள் வேதமான பைபிளை இகழ்ந்தும் வருகின்றனர். இறைவன் எந்த செயல்களை கிருத்தவர்கள் செய்யக்கூடாது என்று பைபிளில் கட்டளையிடுகிறானோ அதைத் தானே பின்பற்றுகிறார்கள். கடவுளை விரும்புகிறோம் என்று கூறி கடவுளின் வார்த்தைகளை நிராகரிப்பது கூடுமா?


சிலை வணக்கம் கூடாது என்று தன் வேதாகமத்தில் குறிப்பிடும் இறைவனுக்கு மாற்றமாக ஏசுநாதரையும், மரியாளையும், சிலுவையையும், இன்னும் மனிதர்களில் சிலர் சிலரையும் கல்லாக வழிபடுகிறார்கள் இது நியாயமா?

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (44:6,9-20)
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
அன்புள்ள என் கிருஸ்தவ சகோதரர்களே நீங்கள் முதலில் சிலை வணக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் உங்களால் உங்கள் ஜீவனை நஷ்டப்படுத்தாதீர்கள் இதை நாம் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது. இதோ பைபிளுக்கு பின்னர் இறுதி வேதமாக அருளப்பட்ட அல்குர்ஆனில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்!

கற்சிலைகளை வழிபடுதல் கூடாது 
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்’  (அல்குர்ஆன் 5-90)

சிலைகள் எவ்வாறு உருவாகின்றன? 
சிலைகளை அரசர்களும், செல்வந்தர்களும், சமுதாய மக்களும் தங்கள் சுயநலனுக்காகத்தான் வடித்தார்கள் பிறகு ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து அந்த சிலைகளிடமே மக்களின் தேவைகளை நாட வைத்தான் இதன் மூலம் அவன் மனித சமுதாயத்தின் பெரும்பகுதியினரை வழிகெடுத்துவிட்டான் இறுதியாக படைத்த இறைவனை மறுக்க வைத்துவிட்டான். இதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவுபட கூறுகிறான்!
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் – இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள் (அல்குர்ஆன் 7-148)
இதோ கீழ்கண்ட சிலைகள் இதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றன. மாயாவதி என்ற அரசியல் பெண்மணி தான் உயிருடன் இருக்கும்போதே தனக்காக பல இலட்சங்களை செலவழித்து தன் சிலையை வடித்து தாமாகவே சிலை திறப்பு விழா நடத்தி மகிழ்ந்தார். இன்று இது சாதாரண சிலைதான் ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றக்கூடிய இளைய சமுதாயத்தை ஷைத்தான் வழிகெடுத்து வழிபடவைத்துவிடுவான். இதோ அந்த மாயாவதியின் சிலைகள். கையில் அழகான பேக் உள்ளது!
 

பிரபலங்களும் தன்னுடைய சிலை ஆசையும் 
சமுதாயத்தில் கண்ணியமாக கருதப்படக்கூடிய பிரபலங்கள் கூட இதற்கு விதிவிலக்கா என்ன! தன்னுடைய சிலைகளை வடித்து தாங்களே பார்த்து மகிழ்கின்றனர். அதன் வரிசையில் முன்னால் ஈராக் நாட்டு அதிபர் சதாம் உசேன் அவர் குறிப்பிடத்தக்கவர்.  ஒரு முஸ்லிமாக இருந்து சிலையை வடித்து இஸ்லாத்தை அவமானப்படுத்திய கவுரவம் இவரைச் சாரும். இவர் வாழும்போது ஒரு நாட்டின் அதிபர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார் அந்த பதவி ஆசையை காட்டி ஷைத்தான் அவரை மயக்கி கையில் துப்பாக்கி ஏந்திய வடிவில் சிலை வடிக்க தூண்டியிருக்கிறான் இறுதியில் உயிருடன் இருக்கும்போதே அந்த சிலை உடைக்கப்படுவதை கண்டுகளித்துள்ளார்.
சதாம் உசேன் மட்டும்தான் சிலையை வடிப்பானா! என்று எண்ணிய அமெரிக்க அரசு முன்னால் அதிபர் ஜார்ஜ் புஸ் (அதாவது கிருத்தவ தீவிரவாதி)-க்கும் சிலையை வடித்து மகிழ்ந்தது. இவர்கள்தான் சிலையை வடிப்பார்களா என்று எண்ணிய கிரிக்கெட் வீரர்கள் தமக்காகவும் சிலைகளை வடித்தனர் அதில் கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் இடம் பிடித்தார். ஷைத்தானின் ஊசலாட்டத்தை பாருங்கள் உயிருடன் வாழும்போது சிலைகள் வடித்து அதை கண்டு பிரபலங்களும் ரசிகர்களும் ரசிக்கின்றனர் இதை சிந்திக் கிறார்களா? பிரபலங்கள் தங்கள் சிலைகளை நோக்கி
 • பேசு என்றால் அது பேசுமா?
 • அழு என்றால் அழுதிடுமா?
 • ஓடிவா என்றால் ஓடி வருமா?
 • பேசினால் கேட்குமா?
 • பார்த்தால் சிரிக்குமா?
 • உணவு ஊட்டினால் உண்ணுமா?
கர்நாடகத்தில் வள்ளுவருக்கு சிலை வைத்தால் இடிக்கின்றான் வள்ளுவர் சிலை வடிக்க சொன்னாரா? இது வள்ளுவனுக்கு அவமானம் இல்லையா?
அம்பேத்காருக்கு சிலை வைத்தால் செருப்பு மாலை போடுகிறான் இவர் தமக்காக சிலை வடிக்க சொன்னாரா? இது அம்பேத்காருக்கு அவமானம் இல்லையா?
பெரியார் சிலைகளை வணங்காதே என்று கூறினார் அவர் மரணித்தவுடன் பெரியார் சிலை வடித்து மாலை சூட்டி மகிழ்கின்றனர் பிறந்தநாளில் வணங்குகின்றனர். இவர்கள் தந்தை பெரியாரின் பேச்சை மதிக்கிறார்களா?
மேற்கண்ட இவைகளால் என்ன விளங்குகிறது சிலைகளால் சிலை வடிக்கப்படுபவர்களுக்கு அவமானம் மாறாக சிலை வடிப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொண்டாட்டம்!

இதோ அல்குர்ஆனில் உள்ள வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29:17) 

நினைவு கூறுங்கள்! என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்) (அல்குர்ஆன் 14:35)

அன்புச் சமுதாயமே இனிமேலும் சிலை வணக்கத்தை பின்பற்றுவதை தவிர்த்துக்கொண்டு சத்தியப்பாதையில் கவனம் செலுத்துங்கள்.

உலகில் பிறந்துவிட்டோம், ஷைத்தானால் வழிகெடுக்கப் பட்டுவிட்டோம், வாழ்க்கையின் ஒருபகுதி வாழ்ந்துவிட்டோம் இனி மரணத்தை எதிர்பார்த்து நிற்கிறோம் இனியாவது திருந்த முற்படுங்கள்!

முதல் மனிதரும் இறைவனின் தூதருமான ஆதிபிதா ஆதம் (அலை) நபியின் மார்க்கமான இஸ்லாத்தை இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளைக் கொண்டு வாழ்ந்து மடிவோம்! மஹ்ஷர் எனும் கேள்விக் கணக்கு நாளில் வெற்றி பெற்று இழந்த சுவனத்தை மீண்டும் அடைவோமாக!
 நன்றி:islamicparadise.

மரம் ருக்கூ செய்கிறதா? மலை சஸ்தா செய்கிறதா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மரம் ருக்கூ செய்கிறதா? மலை சஸ்தா செய்கிறதா?

ஒரு முஸ்லிமுக்கு உண்டான அழகிய பண்பு என்னவெனில் அவன் அல்லாஹ்வையும், மலக்குமார்களையும், தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், சுவர்கம், நரகம் ஆகிய வற்றையும் முழுமையாக நம்ப வேண்டும்.  அதே போன்று அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக விளக்கிக் கூறும் மறைவான ஞானம் பற்றிய செய்திகளையும் ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது நபிமார்களும்  கூறுவதால் நம்ப வேண்டும்!

ஆனால் நம்மில் பலர் அருள்மறை குர்ஆனை படித்தவுடன் அதில் கூறப்பட்டுள்ள மறைவான ஞானம் பற்றிய தகவல்களை உணர்கிறார்கள் ஆனால் அதை எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகாமல் விழிபிதுங்கி வழிதவறிவிடுகிறார்கள. இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்துப்பார்த்தால் அவர்கள் அல்குர்ஆனை ஒழுங்காக விளங்காததுதான் என்பது தெளிவாகிறது.


மறைவான ஞானத்தை கூறும் அருள்மறை வசனம்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:41)

மேற்கண்ட இந்த அருள்மறை வசனத்தை படித்தவுடன் மனிதன் இதை உள்ளத்தால் நம்ப வேண்டும் ஆனால் இவ்வாறு செய்வதில்லை மாறாக தாம் காணும் காட்சிகளை இந்த வசனத்திற்கு உதாரணமாக கூற முற்பட்டுவிடுகிறான். இதோ மேலே உள்ள வசனத்திற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரம் கீழே உள்ள படங்கள்தான்.

மேலே உள்ள இரண்டு படங்களை பார்த்தவுடன் மெய் சிலிர்த்துப் போவது உண்மைதான். காரணம் இந்த இரண்டு படங்களும் தொழுகையை நினைவுட்டும் விதமாக அமைந்துள்ளது.

மரம் வளைந்து காணப்படும் முறையை பார்த்தால் தொழுகையில் மனிதன் ருக்கூ செய்வது போன்றும் அதே போன்று மலை முகடு குனிந்து வளைந்து இருப்பதை பார்த்தவுடன் தொழுகையில் மனிதன் சஸ்தாவில் உள்ளது போன்றும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு வினோதமாகத்தான் உள்ளது எனவேதான் உடல் சிலித்துவிடுகிறது.

ஆனால் முஸ்லிம்களில் பலவீனர்கள் இந்த படங்களை பார்த்தவுடன் மேற்கண்ட அல்குர்ஆன் 24:41 என்ற இறைவசனம் கூறுவது இந்த உண்மையைதான் என்று படத்தை பார்த்துத்தான் நம்புகிறார்களே தவிர உள்ளத்தால் நம்புவதில்லை. (இந்த அரிய படங்கள் இல்லையெனில் இந்த வசனத்தை நிராகரிப்பார்களா?)

பலவீனர்களே கீழே உள்ளவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள்
 • சுமார் 100 மரங்களுக்கு நடுவில் உள்ள ஒரே ஒரு மரம் மட்டும் ருக்கூ-வில் இருப்பது போன்று காணப்படுகிறது அப்படியானல் மீதமுள்ள 99 மரங்கள் ருக்கூவில் நின்று தொழவில்லையா?

 • மலைகள் சூழ்ந்த இந்த படத்தில் ஒரே ஒரு மலை முகடு மட்டும் சஸ்தாவில் இருப்பது போன்று உள்ளதே அப்படியானல் அருகருகே உள்ள மலைகள் சஸ்தா செய்ய வில்லையா?

கீழ்கண்ட அல்குர்ஆனுடைய வசனத்தை இவ்வாறு உணருங்கள்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:41)

முதலாவதாக இந்த அருள்மறை வசனம் உண்மையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது இதை நம்புவது நம் கடமையாகும் அதில் அணுவளவும் சந்தேகமில்லை. (அல்ஹம்துலில்லாஹ்)

முதலாவதாக
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? என்று மேற்கண்ட இந்த வசனத்தை அல்லாஹ் ஆரம்பிக்கின்றான் ஏனெனில் அல்லாஹ் யாருக்கு ஞானத்தை போதித்தானோ அவர்களுக்குத்தான் அதற்கான உண்மை மிக எளிதாக புரியும்.

உதாரணமாக இதயம் எவ்வாறு செயல்படும் என்ற பாடத்தை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் நடத்தினால் அவனால் ஓரளவுக்கு பதில் கூற இயலும் ஏனெனில் அவன் அதைப் பற்றிய அறிவை படிப்படியாக அறிந்துவைத்திருப்பான் ஆனால் இதே பாடத்தை 1ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு நடத்தி்னால் ஏதாவது பயன் உள்ளதா?
எனவே இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மறைவான செய்திகளை அல்லாஹ் தன் இறுதித் தூதருக்கு கற்றுத்தருகிறான் என்பதை முதலில் உணருங்கள் பின்னர் அந்த தூதர் எவ்வாறு எதிர் கேள்வி கேட்காமல் இந்த செய்தியை உண்மை என்று நம்பினாரோ அவ்வாறு நீங்களும் நம்புங்கள்!

இரண்டாவதாக
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும் என்று அல்லாஹ் கூறுகிறான் அதாவது வானங்கள் என்று பண்மையாக கூறப்பட்டுள்ளது அல்லாஹ்வின் வல்லமையை குறிக்கிறது அதை முதலில் நாம் உணர வேண்டும் இதோ ஆதாரம்
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்அன் 2:29)

இங்கு அல்லாஹ் கூறும் ஏழு வானங்கள் என்ற உண்மையும் மறைவான ஞானத்தில் உள்ளதாகும் ஏனெனில் இதன் எல்லைகள் யாராலும் அறியமுடியாது (அல்லாஹ் நாடியோரைத் தவிர) இந்த ஏழு வானங்களிலும் அதற்குரிய மலக்குமார்களை அல்லாஹ் நியமித்துள்ளான் எனவே அந்தந்த மலக்குமார்களுக்கு வானங்கள் பற்றிய ஞானத்தை அல்லாஹ் கற்றுத்தந்திருப்பான் எனவே அவர்கள் இந்த பிரம்மாண்டத்தை கண்டு வியந்து அல்லாஹ்வை துதிக்கிறார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

ஆனால் மனிதர்களாகளாகிய நாம் இந்த ஏழு வானங்கள் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினால் வழிதவிறிவிடுவோம் ஏனெனில் நமது கண்களுக்கு எட்டக்கூடிய வானத்தின் எல்லையை கூட நாம் அறிய திராணியற்ற பலவீனர்களாக உள்ளோம்! (அல்லாஹு அக்பர்)

மூன்றாவதாக
வானங்களை பண்மையாக வர்ணிக்கும் உங்கள் இறைவன் நாம் வாழத்தகுந்த இடத்தைப் பற்றி வர்ணிக்கும் போது பூமிகள் என்று பன்மையாக கூறாமல் பூமி என்று ஒருமையில் கூறுகிறான் அதாவது மனிதன் வாழத்தகுந்த இடம் இந்த பூமி மட்டும்தான் என்று நாம் நம்பவேண்டும். எனவே இந்த பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன என்று நம்ப வேண்டும். ஆனால் பூமியில் உள்ள எல்லோரும் இறைவனை துதித்துவிடுவார்களா என்றால் இல்லை மாறாக அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டினானோ அவர்களும் யார் அல்லாஹ்வை உள்ளத்தால் அஞ்சுகிறார்களோ அவர்கள் என்று கருதுங்கள்!

நான்காவதாக
பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; என்று அல்லாஹ் கூறுகிறான்.

இங்கு பறவைகளைப் பற்றி இறைவன் கூறுகிறான் அவைகளில் விண்ணில் படபடவென சிறகடித்து பறப்பவையும் உண்டு நிலத்தில் நடப்பையும் உண்டு எனவே மேற்கண்ட வசனத்தை படித்தவுடன் பறக்கும் பறவைகள் மட்டும்தான் பறந்து சென்று தஸ்பீஹ் செய்கின்றன என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக கீழ்கண்டவாறு சிந்தித்து உணர வேண்டும்.

வானத்தில் பறக்கும் போது பறவைகள் 100% கீழே விழுந்து மடிய வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் இந்த பறக்கும் பறவைகள் வானில் எவ்வாறு பறக்க வேண்டும் என்று தங்களுடைய உள்ளுணர்வில் உதிக்கும் ஆற்றலை மையமாக வைத்து பறக்கும் முறைகளை தீர்மாணிக்கின்றன.

எனவே உள்ளத்தில் ஏற்படும் ஒருவகை உள்-உணர்வின் (சிந்தனையின்) திறமையினால் சிறகையடித்து வானில் பயமின்றி இவைகளால் பறக்க இயலுகிறது இப்படிப்பட்ட நிலையில் இவைகள் உள்ளுணர்வின் மூலம் பறக்கும் யுக்திகளை உணரும்போது அல்லாஹ்வின் வல்லமையையும் நிச்சயமாக உணர்ந்திருக்கும் என்று நாம் நம்ப வேண்டும். எனவே இந்த உள்ளுணர்வின் மூலமாக ஏன் இந்த பறவைகள் அல்லாஹ்வை பறந்தபடியே நன்றி செலுத்த தஸ்பீஹ் செய்யாது? என்று நினைக்க வேண்டும் அதை அப்படியே நம்ப வேண்டும்! (அல்லாஹு அக்பர்)


ஐந்தாவதாக
இறுதியாக இந்த வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்
ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்

வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகளும் தொழுகின்றன தஸ்பீஹ் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான் எனவே இதை மறுகேள்விக்கு இடமளிக்காமல் இதை இவ்வாறே நாம் நம்ப வேண்டும். மாறாக காக்கை எவ்வாறு தொழும், கழுகு எவ்வாறு தொழும், மலை எவ்வாறு தொழும், மலக்குகள் எவ்வாறு தொழுவார்கள் என்று கேள்வி எழுப்பக்கூடாது.

நம்மை நாமே முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த தொழுகையையே ஒழுங்காக பின்பற்றாமல் தங்கள் நாதாக்களும், குருமார்களும் கற்றுத்தந்த பித்அத் புதுமையான முறையில் ஷாபி, ஹனபி முறை தொழுகை, 20 ரக்ஆத் 40 ரக்ஆத் தொழுகை என 1000 புதுவகை தொழுகை முறைகளை வேதமும் நபிவழியும் இருக்கும் போதே மனிதன் பின்பற்றுகிறான். எனவே மேற்கண்ட கேள்வி எழுப்ப இவனுக்கு அடிப்படை அறிவே கிடையாது!

மேலும் மேற்கண்ட வசனத்தில் வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகளும் தொழும் முறைகளை எவ்வாறு உள்ளுணர்வின் அடிப்படையில் அறிந்துவைத்துள்ளனவோ அதுபோல அவைகளின் செயல்பாடுகளையும் அல்லாஹ்வும் நன்கறிந்துள்ளான் என்ற செய்தியை இந்த அருள்மறை வசனம் உறுதிப்படுத்துகி்ன்றது எனவே எதிர்கேள்விக்கு இடமே இல்லை மேலும் இப்படிப்பட்ட கேள்வியை கேட்க நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது!

அப்படியானல் குர்ஆனில் மனிதனுக்கு உள்ள அதிகாரம் என்ன இந்த வரைமுறையைக் கூட அல்லாஹ் அழகாக குர்ஆனில் வர்ணிக்கிறான் அவைகளை பற்றி சுருக்கமாக காண்மோம்!

மனிதன் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அருள்மறை வசனங்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் ஆகியவற்றின் தொழுகை, தஸ்பீஹ் பற்றிய மறைவான செய்திகளை தெளிவாக விளக்கிக் கூறிய இறைவன் அந்த வானங்கள், பூமி மற்றும் பறவைகளை பற்றி மனிதன் எவ்வாறு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறான் இதோ

வானத்தை பற்றி சிந்திக்க வலியுறுத்தும் குர்ஆன் வசனம்
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (அல்குர்ஆன் 41:11)

பூமியை பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்
பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன் (அல்குர்ஆன் 13:41)

வானம், பூமி மற்றும் கப்பல்கள் பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்
(நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன் 22:65)
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? – அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 26:7)


நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 27:86)

பறவைகளை பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை – நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன். (அல்குர்ஆன் 67:19)

வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 16:79)

மறைவான ஞானத்தை யார் நம்புவார்கள்?
அல்லாஹ் ஞானம் மிக்கவன் என்ற சொல் 100க்கு 100 உண்மையாகிவிட்டது ஏனெனில் இன்றைக்கு நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று தங்களைத்தாங்களே மார்தட்டிக் கொள்ளும் ஒருசிலர் தக்காளியில், சுண்டைக்காயில், பப்பாளியில் அல்லாஹ்வின் பெயர் உள்ளது என்பதை ஆதாரத்துடன் கண்களால் கண்ட பின்புதான் ஆஹா! ஓஹோ என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் இது முறையான நம்பிக்கையல்ல! மாறாக முஸ்லிம்களில் குர்ஆனையும் நபிவழியையும் முறையாக பேணி அல்லாஹ்வுக்கு அஞ்சும்விதமாக அஞ்சி பயபக்தியுடன் வாழ்பவர்கள் தங்கள் கண்களுக்கும், தங்கள் அறிவுப் புலன்களுக்கும் எட்டாத மறைவான விஷயங்களை ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுகிறார்கள் என்பதற்காகவே நம்புகிறார்கள் என்ற உண்மைச் செய்தியை படைத்த ரப்புல் ஆலமீனே கூறுகிறான்! இந்த ஞானம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கேனும் வந்துவிடுமா? (சுப்ஹானல்லாஹ்) ஆதாரம் இதோ!

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (அல்குர்அன் 2:3)


குறிப்பு
சகோதர சகோதரிகளே இனிமேலாவது மரம் தொழுவுது, காக்கை தொழுவுது, மலை சஸ்தாவில் இருக்குது என்று படங்களை காட்டி புரளியை கிழப்பாதீர்கள் அப்படி நீங்கள் புரளியை கிழப்பினால் அவைகள் தினமும் எத்தனை ரக்ஆத் தொழுகின்றன, எத்தனை முறை தஸ்பீஹ் ஓதுகின்றன என்பதை விளக்குங்கள்! மனிதன் தொழுவதைப் போன்றுதான் மலையும், மரமும் தொழுமா? இந்த அறிவு கூட வேண்டாமா? அள்ள அள்ள குறையாத செல்வத்தை கண்களால் கண்ட பின்பு ஒரு சில அரேபியர்களுக்கு அறிவு மழுங்கி இப்படி வதந்தியை கிழப்புகிறார்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்களாகிய நாங்களுமா அஜமிகளாக மாறி அவர்களின் மூடத்தனத்தை பின்பற்றவேண்டும்! சிந்திப்பீர்! செயல்படுவீர்!

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்!
 நன்றி:islamicparadise.