Tuesday, October 26, 2010

பைபிள் கூறும் பயங்கரவாதம்

பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.



கிறிஸ்தவர்களில் சிலர், முகம்மது (ஸல்) அவர்கள் வன்முறையைப் போதித்ததாகவும் இயேசு அகிம்சையையும் அன்பையும் போதித்ததாகவும் ஒப்பீட்டுப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதற்கு மாறாக இயேசுதான் வன்முறையைப் போதித்தார் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இயேசுவும் முஹம்மதுவும் (அவர்கள் மீது இறையருள் உண்டாகட்டும்) தார்மீக வழிகாட்டுதல்களுடன் அனுப்பப்பட்ட இறைவனின் அடியார்களும் தூதர்களும் ஆவார்கள். அவர்கள் இருவரிடையே வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் பொய் மார்க்கம் என்றும் கிறிஸ்தவம் தான் படைத்தவனின் உண்மையான வழிகாட்டுதல் - மார்க்கம் என்றும் நிறுவதற்காகவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனில், அவற்றிற்குச் சரியான பதிலளிப்பதும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமையாகிறது!

இஸ்லாம் வன்முறை - பயங்கரவாத மதம் என சாதாரண மக்களை ஏமாற்ற முயலும் இத்தகையவர்கள், தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் “மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்” உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.

மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைவிட மேலாக மதிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உட்பட்ட ஆன்மீகத் தலைவரை ஒற்றை வார்த்தையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கேவல விமர்சனம் செய்வதன் மூலம் தம்மை விட மதவெறி பிடித்தவர்கள் வேறுயாரும் இல்லை என்பதையும் வெளிக்காட்டியுள்ளனர்.
பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.

பயங்கரவாதம் - வன்முறை மற்றும் பைபிள்!
தாங்கள் செய்த/செய்யும் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் தாங்கள் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது புரோகித வர்க்கம். இதற்காக இவர்கள் இறைவனால் தூதர்களாக தேர்வு செய்யப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயரிலும் கையாடல்கள் செய்வதற்கும்த் தயங்கவில்லை. இதனால் தான் வேதம் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிள், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

ஒருபுறம் தங்களை அமைதிப் புறாக்களாகக் காட்டும் கிறிஸ்தவர்கள், திரைமறைவில் செய்து வரும் வேலைகளைக் குறித்து பலரும் அலட்சியமாகவே இருக்கின்றனர். மிஷினரிகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர்.

ஆபாசம், வன்முறை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், பொய்கள் என அசிங்கக் குப்பைகள் நிறைந்துக் கிடக்கும் பைபிளில், புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட அதனை வேதமாகக் கருதும் கிறிஸ்தவர்களே பின்பற்றுவதில்லை என்பது முரண்பாட்டின் உச்சகட்டம்!

“பன்றி மாமிசம் உண்ணக் கூடாது” என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!

“மதுபானம் அருந்தாதீர்கள்” என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.

“நீ திருமணம் முடிக்காதவனாக இருந்தால் (திருமணம் முடிக்க) பெண்ணைத் தேடாதே! திருமணம் முடித்திருந்தால் உன் மனைவியை விட்டுவிடாதே” என்று திருமணம் முடித்தல் பாவமா? நன்மையா? என்ற தெளிவான வழிகாட்டுதலை வழங்க பைபிள் தவறியதால் திருமணம் செய்யாமல் உணர்வுகளையும் அடக்க இயலாமல் சன்னியாசம் சென்று பாதி வழியில் வழிதவறி வருபவர்களும் கிறிஸ்தவர்களே!

தலைகுனிந்து ஆசீர்வதித்து அமைதிப்புறாவாக மக்களிடம் காட்சியளித்த அன்றைய போப்பும் கிறிஸ்தவ புரோகிதர்களும்தான் சிலுவை யுத்தம் இறையாட்சியை பூமியில் உருவாக்கும் புனிதப் போர் என்று சிலுவை யுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து இலட்சகணக்கில் மனிதர்களைக் கொன்றொழித்த மாபாதச்செயலைச் செய்தன.

பைபிளின் மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜார்ஜ் புஷ் என்ற கிறிஸ்தவர் தான், ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்யுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக அறிக்கை விட்டார். ஈராக்கில் நசுக்கப்பட்ட இலட்சகணக்கான பிஞ்சுக் குழுந்தைகளும் பலவீனமான பெண்களும் முதியவர்களும் புஷ்ஷின் பார்வையில் இறைவனுக்காக பலியிடப்பட்டவர்கள்!

பைபிள் உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட பயங்கரமான செயல்களையெல்லாம் செய்யவேண்டியது இறைகட்டளையாகவே பைபிளில் உள்ளன என்று கூறினால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுவது இயல்புதான். எனினும் அதுவே உண்மை. 
“நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ?
பைபிளின் படி பல கடவுள்களை வணங்குபவர் கொலை செய்யப்படவேண்டும்

அன்பை, அகிம்சையையே பைபிள் போதிக்கிறது என்று மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்கள், “பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்” என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை. தங்கள் மதப் பிரச்சாரத்தில் அத்தகைய வசனங்களை உட்படுத்துவதும் இல்லை.

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். (உபாகமம் - 17: 2-5)

இஸ்லாம் வாளால் நிர்பந்தத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று உண்மைக்குப் புறம்பாக கூப்பாடு போடும் கிறிஸ்தவர்கள், மேற்கண்ட பைபிளின் கட்டளை குறித்து என்ன கூறப் போகிறார்கள்? அது பழைய ஏற்பாடு, அது செல்லாது என்று கூறினால் பழைய ஏற்பாட்டை இன்னும் வைத்துக் கொண்டிருப்பது ஏன்? அதையும் சேர்த்துத் தானே பரிசுத்த வேதாகமம் என்று கூறுகின்றனர்? ஒரு வாதத்துக்காக பழைய ஏற்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று கூறினால், “நீங்கள் உங்கள் ஆடைகளை விற்றாவது ஒரு ஆயுதத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று புதிய ஏற்பாட்டில் இயேசுவின் கட்டளையாகக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து என்ன விளக்கம் கூறுவார்கள்?

அதற்கு அவர், இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். (லூக்கா: 22:36)

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டும்” என்று கூறும் அதே பைபிள் தான், “உன் எதிரியிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள உன் ஆடையை விற்றாவது ஒரு வாளை வாங்கிக் கொள்” என்று கட்டளையிடுகிறது. அதாவது “நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ? 

கொலை மற்றும் கொள்ளைக்கு பைபிளின் வழிகாட்டல்:
படையெடுத்து செல்லும் இடங்கள் கைப்பற்றப்பட்டால் சிறை பிடிக்கப்பட்ட ஆண்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமாம்!
ஒரு நாட்டின் மீது படையெடுத்து அந்நாடு வெற்றி கொள்ளப்பட்டால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் அனைவரையும் வெட்டிப் படுகொலை செய்ய வேணடும் என்றும் பைபிள் உபதேசம் செய்கிறது.

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி.... (உபாகமம் - 20:13)

ஒரு நாட்டின் மீது அத்து மீறி படையெடுத்துச் சென்றால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஆண்களையும் வெட்டி சாய்க்க வேண்டும். இதுவே இறைகட்டளை என்றல்லவா மேற்கண்ட பைபிள் வசனம் குறிப்பிடுகிறது? மேற்கண்ட பைபிளின் வரிகளையும் சிலுவை யுத்தங்களில் நடைபெற்ற வன் கொடுமைகளையும் சற்று நினைவு கூறுங்கள்.

அது ஒரு புறம். ஈராக் மற்றும் ஆப்கானில் நடைபெற்ற ஈவு இரக்கமற்ற படு கொலைகளையும் சமீபத்தில் இஸ்ரேலில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும் மேற்கண்ட பைபிளின் வசனத்தையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்? இதைச் செய்தது யார்? அதே பைபிளை வேதமாகப் பின்பற்றும் பைபிளின் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுக்கும் அமெரிக்க, இஸ்ரேல் ஆதிக்க சக்திகள் தானே? இப்போது சொல்லுங்கள் பயங்கரவாதம் எங்கிருந்து உபதேசிக்கப்படுகிறது?

கொள்ளையடிக்க வேண்டும்

ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றால் அந்நாட்டு மக்களின் உடைமைகளை கொள்ளையிட வேண்டும் என்றும் அவ்வாறு கொள்ளையிடப்பட்ட பொருட்களை அனுபவிக்க வேண்டும் என்றும் பைபிள் உபதேசம் செய்கிறது.

பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக (உபாகமம் - 20:14)

ஃபலஸ்தீன் மண்ணை அக்கிரமமாக ஆக்கிரமித்ததுடன் இருக்கும் மிச்சம் மீதி இடங்களையும் ஆக்கிரமிக்கும் கொடுமையான எண்ணத்துடன் அம்மக்களை அடக்கி யுத்தம் செய்து, மக்களின் அடிப்படை தேவைகளான மின்சாரம், குடிநீர் போன்றவற்றைக் கூட அவர்களுக்குச் செல்ல விடாமல் தடைவிதித்து, பலஸ்தீனையே சிறைசாலையாக உருமாற்றி இனப்படுகொலைகள் நடத்தும் இஸ்ரேலின் ஈனச் செயலும் “பயங்கர ஆயுதங்கள் உள்ளன” என்ற பொய்க் காரணம் கூறி ஈராக்கை ஆக்கிரமித்து இப்போது இரானையும் சீண்டி முஸ்லிம் நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட நினைக்கும் ஆதிக்க சக்திகளின் செயலையும் பைபிளின் மேற்கண்ட உபதேசத்தையும் சற்று நினைத்துப் பாருங்கள். அந்தப் பைபிளின் மீது கை வைத்து தானே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்?
ஆடு, மாடு, ஒட்டகம், கழுதையைக் கூட விட்டுவைக்காமல் அனைத்தையும் கொன்றொழிக்கக் கட்டளையிடும் பைபிள், பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்லவா?. இதன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் "ஜனநாயக அமைதி தூதர்களாக" வேடமிட்டு வலம் வரும் மேற்கத்திய நாகரீகவாதிகள் அல்லவோ பயங்கரவாதத்தின் ஒட்டு மொத்த திரு உருவங்கள்?!
அன்றைய புரோகிதர்கள் தாங்கள் செய்த அட்டூளியங்களுக்கு மதச் சாயம் பூசினர். தங்கள் செயல்களைக் கடவுளின் பெயரால் நியாயப் படுத்தினர். புரோகிதக் கருத்துக்கள் வேதநூல்களாக மதிக்கப்பட்டன. சிலுவை யுத்தங்கள் முதல் இன்றைய ஈராக், ஃபலஸ்தீன் அடக்கு முறைகள் வரை வேதங்களின் பெயரால் நியாயம் கற்பிக்கப்படுகின்றன. மக்களிடம் தங்கள் மார்க்கம் அன்பைப் போதிக்கிறது என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்களாகட்டும், அல்லது கடவுளின் பிள்ளைகள் என்று தங்களை இனம் காட்டும் யூதர்களாகட்டும், இவர்கள் நடத்திய இனப படுகொலைகள் வரலாற்றின் வடுக்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கி்ன்றன. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மதவாதிகள் தங்களிடம் உள்ள வேதம் கூறும் பயங்கரவாதக் கருத்துக்களை மக்களிடம் மறைத்து விட்டு அதன் முலாம் பூசிய பகுதியை மட்டும் வைத்து பிரச்சாரம் நடத்தி மத வியாபாரம் நடத்தி வருகின்றனர். இவர்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டும் பொருட்டு பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் நான்கு தொடர்கள் வெளியிட்டிருக்கிறோம். தொடர்ந்து பைபிளின் பயங்கரவாதக் கருத்துக்களைப் பாருங்கள்:

ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசம் இன்றி உயிருள்ள அனைவரும் கொலை செய்யப்பட வேண்டும்!
இணைச்சட்டம் (உபாகமம்) 20 ஆம் அத்தியாயம் 16 ஆம் வசனம் கூறுகிறது.

”ஆனால் இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே”
பாருங்கள்- உயிர் வாழும் ஒன்றையும் விடக் கூடாதாம்! அதாவது குழந்தைகளாகட்டும் பெண்களாகட்டும், முதியவர்களாகட்டும் ஏன் விலங்கினங்களாகட்டும் ஒன்றையும் உயிரோடு விட்டு வைக்காமல் கொல்ல வேண்டும். இது கடவுளின் கட்டளையாம்(?!) கிறிஸ்தவர்களே! தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை உள்ளது? பள்ளிக் கூடங்களைக் குறிவைத்து குழந்தைகளை மிகக் கொடூரமான முறையில் இஸ்ரேல் கொலை செய்தது தம்மிடம் தல்மூது என்ற பெயரில் இருக்கும் பைபிளின் பழைய ஏற்பாடு செய்த இவ்வுபதேசத்தின் அடிப்படையில் தானே?

இன்னும் இதே பகுதியின் 20 ஆம் வசனம் கூறுவதைப் பாருங்கள்

”உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும் வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்”
கர்த்தரின் கட்டளைப்படி பெண்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இது கர்த்தரின் கட்டளையாம்! ஆடு மாடுகளும் விட்டு வைக்கப்படவில்லை!

சாமுவேல் என்பவர் இறைவனி்ன் கட்டளையாகக் கூறுகிறார்

ஆகவே சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடமைகள் அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடும் சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தொலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்” (1 சாமுவேல் 15: 3,4)
இந்த அக்கிரமத்தைச் செய்ய படைகளின் கடவுள் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தாராம்! தாங்கள் செய்யும் அக்கிரமத்துக்கு நியாயம் கற்பிக்க அக்கிரமத்தை இறைவன் மீது சாட்டும் புரோகிதர்களின் இழி செயலை இது காட்டவில்லையா?

ஆடு, மாடு, ஒட்டகம், கழுதையைக் கூட விட்டுவைக்காமல் அனைத்தையும் கொன்றொழிக்கக் கட்டளையிடும் பைபிள், பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்லவா?. இதன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் "ஜனநாயக அமைதி தூதர்களாக" வேடமிட்டு வலம் வரும் மேற்கத்திய நாகரீகவாதிகள் அல்லவோ பயங்கரவாதத்தின் ஒட்டு மொத்த திரு உருவங்கள்?!


குழந்தைக் கொலையை நியாயப் படுத்தும் பைபிள்!

இனவெறியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற புரோகித வர்க்கம் தம் ஈனச் செயல்களை நியாயப் படுத்த அவற்றை வேத உபதேசங்களாக்கி மக்கள் மன்றத்தில் வைத்தன. இவர்களின் வெறிச் செயலை படம் பிடித்துக் காட்டும் இன்னொரு சம்பவம் தான் அன்றைய பாபிலோன் மக்கள் மீது கொண்ட வெறுப்பில் அவர்களின் குழந்தைகளைக் கூட கல்லாலடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம். சங்கீத புஸ்தகம் கூறும் உபதேசம் பாருங்கள்.

உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் (சங்கீதம் 137:9)

அக்கிரமத்துக்குப் பழி தீர்க்க வேண்டுமெனில் அக்கிரமம் இழைத்தவர்களைத் தண்டித்தால் நியாயம். அவர்களின் குழந்தைகளையும் பிடித்து பாறை மேல் மோதி அடித்து கொடுமையாக கொலை செய்யும் வன்செயலை பைபிள் போதிக்கிறதே? இது பயங்கரவாதம் இல்லையா?

பச்சிளம் குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் நரவேட்டையாடக் கட்டளையிடும் பயங்கரவாதத்தின் மொத்த உருவம் பைபிள், இவ்வுலகைப் படைத்துப் பரிபாலித்து வரும் படைத்தவனின் வேதம் ஆகுமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்!
 

குழந்தைக் கொலைகள் பைபிளில்!
பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம் நிச்சயமாக கடவுளின் உபதேசமாக இருக்க முடியாது. இனவெறி கொண்ட புரோகிதர்களின் கைச்சரக்காகவே இதனைக் கருத முடியும்.

மோசே என்னும் தீர்க்கதரிசிக்கு கர்த்தர் கட்டளையிட்டதாக பைபிளில் இடம் பெற்றுள்ள வன்முறைகளை இத்தொடரில் காண்போம்.

மிதியான் என்ற நகரத்து மக்களைப் பழிவாங்குமாறு மோசேயிடம் கர்த்தர் கூறினாராம். அதைத் தொடர்ந்து நடை பெற்ற நடவடிக்கைகளாக பைபிள் கூறுவதாவது:


எண்ணாகமம்: அதிகாரம்: 31
பன்னிரண்டாயிரம் படைவீரர்களைத் திரட்டிக் கொண்டு மிதியான் மீது யுத்தம் நடக்கிறது. (31:5)
அப்படை வீரர்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொலை செய்தார்கள் (31:7)
பெண்களையும் குழந்தைகளையும் சிறை பிடித்தார்கள்; ஆடு மாடுகளையும் மற்ற மிருகங்களையும் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையிட்டார்கள் (31:9)
அவர்களின் ஊர்களையும் குடியிருப்புகளையும் தீக்கிரையாக்கினார்கள் (31:10)
இவற்றைச் செய்த பின்னரும் மோசே க்கு படைவீரர்கள் மேல் திருப்தி ஏற்படவில்லையாம்! ஏன் தெரியுமா? மேற் கொண்டு படியுங்கள்:

(மோசே)அவர்களை நோக்கி, ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே (31:16)

இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு மாறு செய்யத் தூண்டியவர்கள் பெண்கள்(?!) அதனால் இது சரிதான் என்று கிறிஸ்தர்வகள் ஒருவேளை இதற்கு நியாயம் கூறலாம். அட! குழந்தைகள் என்ன பாவம் செய்தன? பின் வரும் கட்டளையைப் பாருங்கள்:

ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். (31:17)
உடலுறவில் ஈடுபட்டு கன்னி கழிந்த பெண்கள் அனைவரையும் கொன்று விட்டு கன்னி கழியாத பெண்களை (குழந்தைகளையும்) உயிரோடு விட்டு வைக்க வேண்டுமாம். எதற்குத் தெரியுமா?

ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். (31:18)
“உங்களுக்காக” அதாவது நீங்கள் அவர்களை அனுபவிப்பதற்காக

போரில் அடிமைகளாக்கப் பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதித்ததைக் கொச்சைப் படுத்தி விமர்சிக்கும் கிறிஸ்தவர்களே! இதோ பச்சிளம் பெண் குழந்தைகளைக் கூட அனுபவிப்பதற்கான லைசன்சை பைபிள் வழங்கியுள்ளதே?! மல்லாந்து படுத்துக் கொண்டு நீங்கள் காரி உமிழ்ந்தால் அது உங்களின் முகத்துக்கே திரும்பி வரும் என்பதை அறியாமல் இருந்து விட்டீர்களே?

இவ்வாறு கர்த்தரின் கட்டளையால்(?) படைவீரர்களுக்கு விருந்தாக அளிக்கப்பட்ட (கிறிஸ்தவர்களின் பாணியில் கற்பழிக்கப்பட்ட) பெண்கள் எத்தனை பேர் தெரியுமா? பைபிளே சொல்லட்டும்

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். (31:35)

முடிவுரை:
அநியாயமாக மனித உயிர்கள் பறிக்கப்படுவது பயங்கரவாதம் ஆகும். இறைவனிடத்தில் இதற்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.


அநியாயமாக ஒரு உயிரைக் கொல்பவன் மனித சமூகம் முழுவதையும் கொலை செய்ததற்குச் சமமாவான் என்கிறது திருக்குர்ஆன் (5:32)

தாம் செய்த அக்கிரமச் செயல்களை நியாயப் படுத்த இனவெறி கொண்ட புரோகிதர்கள் சேர்த்த கைச்சரக்குகளே பைபிளில் நியாயம் கற்பிக்கப்படும் பயங்கரவாதக் கருத்துக்கள். இதற்கு கடவுளின் அங்கீகாரம் ஒருபோதும் இருக்க முடியாது. இவ்வாறிருக்க பச்சிளம் குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றி கொலை செய்யவும் கொள்ளையிடவும் அழிச்சாட்டியம் செய்யவும் ஆணையிடும் உபதேசங்களை எங்ஙனம் இறைநூல் என்று கூற இயலும்? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.
நன்றி :கிறிஸ்டியன்பார்வை

1 comment:

  1. As salamu alaikum Font color change pannunga... vilakam miga arumaiya iruku Alhamdhuillah

    ReplyDelete