பெண்கள்சுதந்திரத்தைநாடி இயக்கங்களாக போரிடும் இவ்வேளையில் பெண்கள் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசிய இஸங்கள்யில் யாவும் புறமுதுகிட்டு விட்ட இவ்வேளையில் இஸ்லாம் வழங்கும் பெண்கள் சுதந்திரம் பற்றி நாம் ஒரு ஆய்வுக் கண்ணோட்டம் நிகழ்த்த கடமைப் பட்டுள்ளோம்.
ஒரு மனிதன் தன்னுடைய இயற்கை நியதிக்கேற்ப இறைவன் தனக்கு வழங்கியுள்ள உரிமைகளை சரிவரப் பயன்படுத்தலும், அவற்றில் வேறொருவரின் எந்த வித தலையீடும் இல்லாமல் இருத்தலுமே சுதந்திரம் ஆகும்.
இத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இக்காலத்திய பெண்ணியம் தன்னுடைய சுதந்திரத்தை உரிமைகளை பெறுவதை விட்டும் வெகுதூரம் விலகியும் விலக்கப்பட்டும் உள்ளது தெளிவாகப்புரியும்.
இன்றைய பெண்ணியம் சிறைப்பட்டுள்ள அடிமைத்தனத்தை நாம் இருவகையாகப் பிரிக்கலாம்.
1. உரிமை ரீதியிலான அடிமைத்தனம்.
2. சிந்தனை ரீதியிலான அடிமைத்தனம்.
1.உரிமை ரீதியிலான அடிமைத்தனம்
உரிமை ரீதியிலான அடிமைத்தனமானது பெண்களை அவர்களுக்கு இயல்பாக தரப்பட வேண்டிய பிரதிநிதித்துவத்தைத் தராமலிருத்தலும், ஒரு ஆணாதிக்க மேலாண்மையை சமுதாயத்தில் நிலவச் செய்து அதன் கொத்தடிமை நிலையில் பெண்ணினத்தை வைத்திருப்பதும் ஆகும்.
காலங்காலமாய் பெண்ணினம் இந்த உரிமை ரீதியிலான அடிமைத்தனத்தின் கீழ் அவதிப்பட்டுக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது இன்றைய பல்வேறு தரப்பட்ட ஷபெண் இயக்கங்கள் அதற்காகப் போரிட்டுக் கொண்டுள்ள போக்கே அதன் அடிமைத்தள வேர்கள் சமுதாயத்தில் எந்தளவு ஆழமாக வேறூன்றியுள்ளன என்பதை நமக்குக் காட்டுகின்றது.
பழைய காலத்திய பெண் அடிமைத்தன இயல்புகளை நாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நடைமுறை யுகத்திய விஞ்ஞான நூற்றாண்டு என்றழைக்கப்படும் அதிவேக அறிவியல் வளர்ச்சியைத் தன்னகத்தே கொண்டே நிகழ்காலத்துப் போக்கை கருத்தில் கொண்டாலும் கூட நடைமுறை நமக்குக் கொஞ்சமேனும் திருப்தி தருவதாய் இல்லை.
யாழ் இனிது குழல் இனிது என்பார் மழலை சொல் கேளாதார் என்கிறார் வள்ளுவர்.
ஆனால் பெண்ணின் அடிமைத்தனமானது அதன் மழலைப்பருவத்திலேயே கொடூரமாய்க் கொன்றொழிப்பது வரைஇட்டுச் சென்றுள்ளது.
எனவேதான் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பை விருப்பாக மாற்றும் விதத்தில் ஏதேனும் ஆண்டை ஷபெண் குழந்தைகள் ஆண்டாக அறிவிப்பது போன்ற செயல்களை சார்க் போன்ற உலகு தழுவிய அமைப்புகள் செய்கின்றன.
ஓராண்டின் ஒதுக்குதல் மற்றும் அறிவிப்பு மற்றும் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் சாதிக்கப் போவதில்லை.
இன்று கூட தமிழகத்தின் உட்பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்குப் பின்னால் கொல்லைப்புறம், சுவரை ஒட்டிய சந்துகளிலும் பெண் சிசுக்கள் புதைக்கப்பட்ட சிறுமணல் மேடுகளும், நாய் தோண்டி இழுத்துப் போய் விடமாலிருக்க இலந்தை முள் போட்டு பெரிய கல்லைத் தூக்கி வைத்த சவக்குழிகளும் புதியன புதியனவாக நமக்குக் காட்சியளித்துக் கொண்டுள்ளன.
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிந்து கருவிலேயே தெரிந்து கொண்டு பெண் என்றால் கருவிலேயே அழித்து விடத்தான் இன்று விஞ்ஞானம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இப்படியாக ஒவ்வொரு வருடமும் உலகில் ஒன்றல்ல, இரண்டல்ல, இலட்சக்கணக்கான பெண் கருக்கள் கொல்லப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் காலங்காலமாய் பெண் மீது ஏவப்படும் சமூகக் கொடுமைகளும், பெண்ணினம் பற்றிய தவறான கருத்தோட்டங்களும் தான்.
கர்ப்பப்பையிலிருந்து வெளிவர அனுமதிக்கப்பட்டு விட்டால், பெண் குழந்தை என்றால் போதிய தாய்ப்பால் தரப்படுவதில்லை.
ஆண் குழந்தைகளுக்கே நீண்ட நாள் தாய்ப்பால் தரப்படுகின்றது.
பால், முட்டை போன்ற சத்துள்ள உணவுப் பொருட்களும் ஆண் குழந்தைகளுக்கே தரப்படுகின்றன.
ஒருபெண் குழந்தைக்குக் கொடுக்கப்பட வேண்டிய சத்துணவில் மூன்றில் இரண்டு பங்கு கூட அவளுக்குக் கிடைப்பதில்லை.
உணவில் ஆரம்பிக்கும் இந்த விஷம், அவளுடைய ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் ஊட்டப்படுகின்றது.
சத்துணவின்மை, போதிய அளவு கவனிப்பின்மை, இதனால் உடல் நலக்குறைவு, உடல் நோயுறுகின்ற போது கூட ஆணுக்கு தனி கவனிப்பு, பெண் குழந்தைகள் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதே இல்லை.
புதுடெல்லி போன்ற பண்பாட்டு வளர்ச்சி அடைந்த தலைநகரங்களிலேயே ஒரே நோயால் ஒரே மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகளில் 1000 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படுகிறார்கள் எனில், பெண் குழந்தைகள் 600 பேர் மட்டுமே சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படுகிறார்கள்.
இந்தியாவில் ஓராண்டில் சுமார் ஒரு இலட்சம் பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். எனில்
அவர்களில் 15 ஆயிரம் குழந்தைகள் ஒரு வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே மரணத்தின் மடியில் வீழ்ந்து விடுகிறார்கள்.
5 வயது நிறைவடைவதற்குள் மேலும் 35,000 பெண் குழந்தைகள் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறக்கிறார்கள்.
மருத்துவ, உணவு வசதியையே தராதோர் கல்வியை மட்டும் தந்துவிடவா செய்வார்கள்?
மொத்தப்பெண் குழந்தைகளில் இருபத்;தைந்து சதவிகிதத்தினரே கல்வி பெறுகின்றன.
அதேசமயம், ஆண் குழந்தைகளில் ஐம்பது சதவிகிதம் பேர் கல்வி பெறுகின்றன.
கிராமப் புறங்களிலோ நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
கிராமப் புறங்களில் வாழும் பெண் குழந்தைகளில் பத்து அல்லது பதினைந்து சதவிகிதத்தினரே பள்ளிக் கூடங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
ஒருசில கிராமங்களில் பெண்களை வேலைக்கு அனுப்பி, கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு ஆண் குழந்தைகளைப் படிக்கவைக்கும் கொடிய நிலைமையையும் காணப்படுகின்றது.
இஸ்லாமிய அடிப்படைகளினுள் தலையானது நம்பிக்கை.
உலகில் நம்பிக்கை இஸ்லாத்தில் காணப்படும் அளவு அதிக அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எங்கும் காணப்படாது.
இறைநம்பிக்கை மற்றும் மறுவாழ்வு (மறுமை) நம்பிக்கையைக் கொண்டே இஸ்லாமியச் சட்டங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இந்த ரீதியில் தான் இஸ்லாம் ஒவ்வொரு பிரச்சனையையும் அணுகுகின்றது.
இந்த உலகில் அணு அளவே ஒருவர் நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய நற்கூலியை அவர் கண்டு கொள்வார்.
இந்த உலகில் ஒருவர் அணு அளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனையை அவர் பெற்றுக் கொள்வார். (அல்குர்ஆன் 99:7-8) என்று இஸ்லாம் கூறுகின்றது.
அந்த மறுமையில் (அங்கே) ஒவ்வொரு பெண் குழந்தையும் கொண்டு வரப்பட்டு அவர்கள் ஏன் கொலை செய்ப்பட்டார்கள் என்று வினவப்படுவார்கள். (அல்குர்ஆன் 81:8-9)
இவ்வாறு வாழும் உரிமையை வழங்கிய இஸ்லாம் வரதட்சணையை ஒழித்து பெண்ணிற்கு மஹர் (திருமணக்கொடை) வழங்கினால் தான் திருமணம் நடைப்பெறும் என்று கூறுவதன் மூலம் வரதட்சணைக்குப் பயந்து ஏழைப் பெண் சிறுபிராயத்தில் இழிவுக்கு ஆளாக்கப்பட்டு தன்னம்பிக்கை இழந்து போவதையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஒரு தனியிடத்தினை சமூகத்தில் பெற்றுத் தந்துள்ளது.
இந்நூற்றாண்டில் பல்வேறு கொள்கைகள் பெருகிவிட்ட வேளையிலும் கூட இன்னும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதானது இஸ்லாம் ஓர் இறைமார்க்கம், அதில்தான் எல்லா பிரச்சனைகளுக்குரிய சரியான தீர்ப்புகள் உள்ளன என்பதை நிரூபிக்கின்றன.
ஏனென்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை மட்டுமல்லாது அவர்களுக்கு சமூக அந்தஸ்தையும், கௌரவத்தையும் பெற்றுத் தந்தது.
2. சிந்தனை ரீதியிலான அடிமைத்தனம்
தன் ஆளுமைக்குட்படுத்திய காலனி நாடுகளிலும் தன் குடியேற்ற நாடுகளிலும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகப்பெரும் அளவில் வேரூன்றியுள்ளது.
ஒரு புறத்தில் அதன் சொந்த நாடுகளிலேயே அதன்மீதான விமர்சனங்கள் அதிகரித்து வந்தாலும் கூட வளர்நாடுகள் மற்றும் கீழை, கிழக்காசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது..
மேற்கத்திய கலாச்சாரத்தின் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வெற்றி உண்டென்றால் அது சிந்தனையில் தன் சுவடுகளைப் பதித்து செயல் ரீதியில் வெளிப்படுத்த வைப்பதாகும்.
ஆம் மூளைச்சலவை செய்து மேற்கத்திய கலாச்சாரமே மாண்பளிக்கும் கலாச்சாரம் எனும் எண்ணத்தை அது அதன் பின்பற்றுவோரிடையில் தோற்றுவித்துள்ளது.
உரிமை ரீதியில் அடிமைப்பட்டவர்களுக்கு தாம் தமது உரிமைகளை என்றாவது மீட்டு அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணக் கிளர்ச்சியாவது இருக்கும்.
ஆனால் சிந்தனை அடிமைப்பட்டவர்களுக்கு தாம் அடிமைப்பட்டுள்ளோம் என்கிற உணர்வு கூட இருக்காது.
மாறாக தாம் கொண்ட கொள்கைகள் தலை சிறந்தவை என்று எண்ணி அவர்கள் அதனை வளர்ப்பதில் துணை சென்று கொண்டிருப்பார்கள்.
இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அவசியமற்ற கட்டுக்கோப்புகளில் ஏற்கனவே சிக்குண்டு வீழ்ந்துவிட்ட இந்தியப் பெண்ணினத்தை மேற்கண்ட சிந்தனை அடிமைத்தனம் மேலும் மேலும் தாழ்மைப்படுத்தியது.
அவர்களை ஆபாசப் பொருள்களாக்கி காட்சிக்கு வைப்பதில் பேருதவி புரிந்தது.
ஏற்கனவே இந்தியப் பண்பாடு, கலையும் ஒரு மாதிரியான அடிமைத்தனத்தை வளர்ந்து வந்துள்ளன.
இதில் ஆட்சியாளர்களின் பங்கும் ஆதிக்கஜாதிகளின் பங்கும் மகத்தான அளவில் உள்ளது.
ஒருபெண் வளரும்போது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் போன்ற கருத்துக்களை வளர்ப்பதன் மூலம் அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடுவதிலும் நடனங்கள் மற்றும் கலைகளின் பெயரால் பெண்ணை ஆபாசப் பொருளாக்கி நடனமென்று உடல் அங்க அசைவுகளைக் கூத்தாக்கி பலரும் பார்த்து மகிழும் வண்ணம் அவளை நடுச்சந்திப் பொருளாக்கியதை அறிவோம்.
இதைவிட ஒருபடி மேலேபோய் மேற்கத்திய நாகரீகம் பெண்ணுக்கு அநீதி இழைத்தது.
சமஉரிமை தருகிறோம் என்கிற பெயரில், சரிபாதிக் கோட்பாட்டை திணித்து இயற்கை அமைப்புக்கு விரோதமாய்ப் பெண்ணைப் பயன்படுத்த முன்வந்தது.
கட்டற்ற சுதந்திரத்தை வழங்கி கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையைத் தோற்றுவித்தது.
உடை, உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் அது இடம் பெற்றது தான் அதன் தனித்தன்மையாகும்.
ஆம்! அதன் பிடியில் தான் அடிமைப்பட்டு இறைவன் தனக்கு வழங்கியுள்ள இயற்கை நியதிகளை ஷபுரியாத கட்டற்ற சுதந்திரத்தின் பேரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொணடிருப்பதை அறியாத பெண்ணினம் மாறாக தானாக அவற்றைக் கேட்டு பெறும் நிலைமைக்கு ஆளானது.
எந்த அழகலங்காரத்தை கொண்ட கணவன் மட்டும் காண வேண்டுமோ அதனைப் பெண்ணினம் காட்சிப் பொருளாக்கி அனைவர் பார்வையிலும் வைத்தது.
எந்தவொரு தாம்பத்ய இன்பத்தை பெருங்குறிக்கோளாக எண்ணி திருமணங்கள் நடைபெறுகின்றனவோ அது திருமணமாகும் முன்பே வெகு மலிவாகக் கிடைக்க வழிவகுத்தது.
இன்னும் பருவமே அடையாத பாலகர்களுக்கு இக்கலாச்சாரம் மீசை முளைக்க வைத்தது.
இதன் விளைவாக மேலை நாடுகளில் அவர்கள் பயப்படும் அளவிற்கு ஒழுக்கச் சீர்கேடுகள் விரைவாகப் பரவின.
கற்பழிப்புகள் அதிகமாயின.
அதைவிட அதிகம் போய் இன்று குடும்ப வாழ்வு சீரழிந்து சமூகமே ஸ்தம்பித்து நிற்கின்றது.
அனாதை இல்லங்கள் பெருகிவிட்டன.
ஆண், பெண் கவர்;ச்சி குறைந்து ஓரினப் புணர்வுமுறை அதிகமானது.
முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன.
ஆயினும் கூட இன்னும் நம் இந்தியா போன்ற கீழை நாடுகளில் மேற்கத்திய கலாச்சாரத்தை நாகரீகமானது என்று இளைஞர்கள், குறிப்பாக யுவதிகள் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, எத்தகையோ சீர்திருத்தவாதிகள், எத்தனையோ இயக்கங்கள், போராட்டங்கள் ஷபெண் விடுதலைக்காகப் போரிட்ட போதிலும் அவர்களால் அதனைப் பெற்றுத்தர இயலவில்லை.
ஏனெனில் பெண்ணின் இயற்கைக்கேற்ப புனையப்பட்ட ஒரு சமச்சீரான கொள்கையை அவர்களால் உருவாக்க இயலவில்லை.
இன்று அத்தகையதொரு மகோன்னதமான கொள்கை இஸ்லாமில் மட்டும் உள்ளது. ஏனெனில் அதுதான் இறைமார்க்கம்.
No comments:
Post a Comment