Sunday, November 14, 2010

இயேசு தேவகுமாரனா?

ஏசு தேவ குமாரன் என்று கூறுகிறார்களே இது உண்மையா? இதுபற்றி பைபிள் மற்றும் குர்ஆன் நடையில் விளக்கம்
தேவனுடைய விசுவாசியின் பதில்கள்
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசாயா 46:9)
தேவனாகிய அல்லாஹ் தனக்கு எவனும் சமம் இல்லை என்று பைபிளில் கூறுகிறான் எனவே ஏசு தேவகுமாரன் என்ற கொள்கை இந்த விளக்கத்தின் ஆரம்பத்திலேயே தரைமட்டமாகி விட்டது!  இதை அருள்மறை குர்ஆனும் மெய்ப்படுத்துகிறது!

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)

ஏசு தேவனுடைய குமாரன் என்று கிருத்தவர்கள் கூறுவது 100 சதவீதம் பொய் என்று கூறுவதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளது. இதைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை அலசுவோம் வாருங்கள்!
ஏசு தேவகுமாரன் கிடையாது என பைபிள் சான்றளிக்கிறது
ஆதாரம் 1 (குருடர்கள்)
(27) இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக் குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன் னார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
மேற்கண்ட சுவிஷேசத்தில் கூறப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில் ஏசு தாவீதின் குமாரன்தான் என்பது தெளிவாக விளங்கிறது.

ஆதாரம் 2 (குருடர்கள்)
(28) இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள் “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
ஆதாரம் 1 மற்றும் 2ன் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் கண் தெரியாத குருடர்கள் கூட ஏசுவை தேவகுமாரன் என்று அழைக்க வில்லை என்பதும் ஊர்ஜிதமாகிறது!
ஆதாரம் 3 (வேத போதகர்கள்)
(3) இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள். “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
ஒரு பக்கவியாதியஸ்தனை ஏசு குணப்படுத்தும் போது இந்த வசனத்தில் கூறப்பட்ட சம்பவம் நிகழ்கிறது அந்த நேரத்தில் ஏசுவுடன் குழுமியிருந்த அந்த வேத பேதாகர்கள் அனைவரும் ஏசுவை ஒரு மனிதன் என்றுதான் கருதினார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது!
ஆதாரம் 4 (பொதுமக்கள்)
(8) இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
ஏசு அந்த பக்கவியாதியஸ்தனை குணப்படுத்திதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைவரும் ஏசுவுக்கு உள்ள வல்லமையை பாராட்டுகிறார்கள் அப்போது கூட ஏசுவை தேவகுமாரன் என்று கூறாமல் இந்த மனிதனுக்கு தேவன் வல்லமையளித்து்ளளான் என்பதாக கூறி தேவனை மகிமைப் படுத்தி புகழ்கிறார்கள்!
இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷஙகள் விளக்குகிறோம்
  • குருடர்கள் தங்களுடைய உரத்த குரளில் ஏசுவை நோக்கி தாவீதின் குமாரனே என்று அழைக்கிறார்கள் இதை கேட்ட ஏசு தேவகுமாரனாகிய தன்னை அவ்வாறு அழைக்காதீர்கள் என்று கூறவில்லை ஏன்?
  • ஏசு குருடர்களிடம் பேசும் போது அந்த குருடர்கள் ஆம் போதகரே என்று பதிலளிக்கிறார்கள் இந்த இடத்திலும் கூட ஏசு அந்த குருடர்களிடம் இவ்வாறு கூறாதீர்கள் நான் தேவகுமாரன் என்று கூறவில்லை ஏன்?
  • இந்த மனிதன் ஏசு தேவனைப் போல் பேசுகிறார் என்று மதபோதகர்கள் விமர்சித்தார்கள் அந்த இடத்தில் கூட ஏசு நான் தேவனுடைய மகனாவேன் என்று கூறவில்லை!
  • பொதுமக்கள் அனைவரும் ஏசுவின் வல்லமையை பற்றி பாராட்டும்போது மனிதனுக்கு வல்லமையை கொடுத்த தேவனுக்கே புகழ் என்று கூறுகிறார்கள் இதைக் கேட்கும ஏசு கழ்கிறார்க்ள அப்போது ஏசு தேவகுமாரனாகிய தன்னை மனிதன் என்று அழைக்காதீர்கள் என்று கூறவில்லை!
மேற்கண்ட 4 அடிப்படை ஆதாரங்களும் ஏசு என்ற மனிதருடைய கண்ணெதிரே நிகழ்கின்றன இந்த இடத்தில் ஏசு இவர்களின் பேச்சுக்களை நிராகரிக்கவில்லை என்பது ஏசுவின் மூலமாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே ஏசு தேவனுடைய குமாரன் இல்லை என்பதற்கு இந்த பைபிள் ஆதாரமாக உள்ளது. எனவே ஏசு என்ற தீர்க்கதரிசியின் மீது உண்மையான விசுவாசம் கொண்ட எந்த கிருத்தவனும் ஏசுவை தேவகுமாரன் என்று கூறமாட்டான் மாறாக ஏசுவை தேவனுடைய தீர்க்கதரிசி என்றுதான் வர்ணிப்பான்.
ஏசு தேவகுமாரன் கிடையாது என குர்ஆன் சான்றளிக்கிறது

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (3-59)
மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் ஏசுவின் பிறப்பு பற்றி தேவன் (அல்லாஹ்) கூறும்போது ஏசு என்ற தீர்க்கதரிசியின் பிறப்ப ஆதாமுடைய உதாரணத்தை போன்றது என்று கூறுகிறார்!  அதாவது
ஆதாம் எவ்வாறு தந்தையின்றி பிறந்தரோ அதே போன்று ஏசுவும் தந்தையின்றி பிறந்தார்
ஆனால் மேற்கண்ட இந்த உண்மையை ஏற்க மறுக்கும் கிருத்தவர்கள் ஏசுவை அல்லாஹ்வுடைய (தேவனுடைய) மகன் என்று வர்ணிக்க முற்பட்டனர் இதைப்பற்றி இறைவன் குர்ஆனில் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான்!
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (4-171)
ஏசுவின் பிறப்பை பற்றி விவரித்த உங்கள் தேவனாகிய அல்லாஹ் தன்னுடைய தீர்க்கதரிசியான ஏசு தன்னுடைய அடிமைதான் என்பதையும் உறுதிபடுத்துகிறார். இதோ உங்கள் தேவனுடைய வார்த்தைகளை சற்று கேளுங்கள்
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான். (4:172)
முடிவுரை
அன்பிற்கினிய கிருத்தவ சகோதர சகோதரிகளே  நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்ளும் பொருட்டு உங்கள் பாஷையிலேயே உங்களுக்கு அறிவுரைகளை வழங்கு கிறோம் சற்று காது  கொடுத்து கேளுங்கள்!
ஏசுவானவர் தேவனுடைய குமாரன் இல்லை மாறாக அவர் ஒரு சுத்தமான தீர்க்கதரிசியாவார். இதனை மெய்ப்படுத்தும் விதமாக  தேவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட தேவ வாக்குறுதிகள் அடங்கிய அருள்மறை குர்ஆன் உண்மைப்படுத்துகிறது!
எனவே அன்பிற்கினிய கிருத்தவ சகோதர சகோதரிகளே எவனொருவன் ஏசு என்ற தீர்க்கதரிசியை தேவகுமாரன் என்று கூறுகிறானோ அவன் ஏசுவை பொய்யாக்கிவிட்டான்! எவன் ஏசுவை பொய்யாக்குகிறானோ அவன் தேவனுக்கு துரோகத்தை செய்துவிட்டான்!
எவன் ஏசு எனும் தூதருக்கு பின் வந்த இறுதி தீர்க்கதரிசியான முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்களை பின்பற்றவில்லையோ அவன் தனது ஆத்துமாவுக்கு துரோகமிழைத்து விட்டான்!
தனது ஆத்துமாவுக்கு துரோகமிழைத்தான் என்றால் அவன் பாவியல்லவோ! பாவிகள் சுவர்கத்தில் பிரவேசிக்கப்பட மாட்டார்கள்! எனவே எனது கிருத்தவ சகோதர சகோதரிகளே உங்கள் ஆத்துமாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் ஏசு-வை உண்மையான தீர்க்கதரிசியாக ஏற்று சத்திய சன்மார்க்கத்தில் நுழைந்துவிடுங்கள் அதனால் நீங்கள் தேவனால் கிருபை செய்யப்படுவீர்கள்!
இதோ இறுதியாக தேவனுடைய வார்த்தைகளை கேளுங்கள்
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசாயா 46:9 – பைபிள்)
தேவனாகிய அல்லாஹ் தனக்கு எவனும் சமம் இல்லை என்று பைபிளில் கூறுகிறான் எனவே ஏசு தேவகுமாரன் என்ற கொள்கை இந்த விளக்கத்தின் ஆரம்பத்திலேயே தரைமட்டமாகி விட்டது!  இறுதியிலும் தரைமட்டமாக்க இதோ அருள்மறை குர்ஆன் வசனம்! (அல்லாஹ்வின் வார்த்தைகள்)

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)


இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)
நன்றி:இன்ஜீலிசம்

No comments:

Post a Comment