Thursday, November 18, 2010

ஏமாறாதே!

சில கிருஸ்தவ மதபோதகர்கள் பொதுக்கூட்டத்தை கூட்டி ஜெபத்தினால் முடவனுடைய கால்களை குணமாக்குகிறோம், பிரவிக் குருடனுக்கு பார்வை வரவழைக்கிறோம், ஊமையை பேச வைக்கிறோம், பிசாசு பிடித்தவனை குணமாக்குகிறோம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா?
தேவன் அல்லாஹ்வுடைய விசுவாசியின் பதில்கள்
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவனும் தான் எந்த மதத்தை சார்ந்து வாழ்கிறானோ அந்த மதம்தான் தலைசிறந்த மதம் என்றும் அதுதான் தன்னை சுவர்கத்திற்கு இட்டுச்செல்லும் என்றும் தீர்மானிக்கிறான் இந்த குருட்டு நம்பிக்கையின் பிரகாரம் தன் வாழ்க்கை அமைத்துக்கொண்டு தன் மதத்தை பரப்புகிறான். ஆனால் மக்கள் இந்த மதங்களை விரும்புகிறார்களா? என்றால் இல்லை மாறாக அவர்கள் ஏதாவது ஒரு அதிசயத்தை கண்களால் கண்டால்தான் அந்த மதம் உண்மை சொல்கிறது என்று நம்புவார்கள்.
மக்களை திசை திருப்ப மத நாடக கூட்டங்கள்
கிருத்தவர்கள் பொதுமக்களை திசை திருப்பி தங்கள் மதத்தை பரப்ப தங்களுடைய மதத்தின் பெயராலும், ஏசு என்ற தீர்க்க தரிசியின் பெயராலும் அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுகிறோம் என்று பொய்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். அதோடு மட்டும் நின்றுவிடாமல் பொதுமக்களிடமிருந்து தேவ ஊழியங்களுக்கு காணிக்கை செலுத்துங்கள் என்று கணிசமான தொகையை சுரண்டவும் வழிவகை செய்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருடத்திற்கு 3 பொது கூட்டங்கள் குறையாமல் போடுவார்கள் அந்த கூட்டத்தில் பிறவிக்குருடனுக்கு பார்வை வரவழைக்கிறோம்! சப்பானியின் கால்ககளை குணமாக்குகிறோ்ம! உமையை பேச வைக்கிறோம், பிசாசு பிடித்தவனை குணமாக்குகிறோம் என்று கூறி ஜெப கூட்டங்கள் நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களில் பெரும்திரளாக உடல் ஊணமுற்ற மக்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துக் கொண்டு ஏமாற்றப்படுகிறார்கள் இதை மனித உரிமை அமைப்பும் வேடிக்கை பார்க்கிறது!
அப்பாவிகளை ஏமாற்றும் ஜெப ஆராதணை கூட்டங்கள்
ஜெபத்தால் உடல் குறைகள் குணமாக்குவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கண்பார்வையற்ற, கால்கள் முடமான, வியாதிகளால் அவதிப்படக்கூடிய மற்றும் புத்திசுவாதீனமற்ற குழந்தைகளுக்கு சுவரொட்டிகள் மூலமாகவோ, மீடியாக்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இந்த அப்பாவி குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் ஏதோ நல்லது நடந்தால் போதும் என்று எண்ணி லட்சம்பேர் பங்கேற்கும் அந்த பொதுக்கூட்டங்களில் தட்டுத் தடுமாறி அடி உதைபட்டு கூட்டத்தின் நடுவே புகுந்து நம்மை இந்த பாதரியார் எப்போது அழைத்து குணமாக்குவார் என்று ஏங்கித் தவிப்பார்கள் இந்த கோர காட்சிளை காணும்போது எறிச்சல்தான் வரும்! ஊணமுற்ற நபர்களும் அவர்களது பெற்றோரும் நமது நேரம் எப்போது வரும் என்று அழுவார்கள், தவிப்பார்கள், ஏசுவே ஏசுவே என்று சப்தமாய் புலம்புவார்கள்! இந்த புலம்பல்களை மேடையில் அமர்ந்திருக்கும் கிருஸ்தவ பாதரியார்கள் ரசித்துக்கொண்டே அல்லேலூயா என்ற கத்துவார்கள் பிறகு தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு அழைத்து வந்திருக்கும் அறைகுறை ஊணமுள்ள நபர்களை மேடையில் ஏற்றிவிட்டு ஜீஸல் காப்பாத்துங்கோ என்று ஒப்பாரி வைப்பார் உடனே அந்த மேடையில் நடிக்க வந்திருக்கும் அறைகுறை சப்பானியோ கால் வந்துவிட்டது என்று துள்ளி குதித்து நாடகமாடுவான் இதை காணும் கூட்டத்தார் அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று கருதும் வேளையில் அந்த அல்லேலுயா பாடிய பாதரியாரோ இயேசு வந்து தன்னிடம் பேசினார் நான் அவரை பார்த்தேன் அவர் என் மீது ஆசிர்வாதமாய் இறங்கினார் என்று பொய்யை இட்டுக்கட்டுவான்! அங்கேயே ஒப்பாரிகளி்ன ஓலங்கள் அரங்கேறும்.
இப்படி ஊரை ஏமாற்றும் போலி பாதரியார்களை பற்றி பைபிள் என்ன கூறுகிறது!
சுத்தமான இருதயமுள்ள கிருத்தவ சகோதர சகோதரிகளே சற்றே சிந்தித்துப்பாருங்கள் முடவர்களை ஏமாற்றுவது இயேசு கற்றுத் தந்த வழியா இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களே இது கூடுமா? இதோ உங்கள் பைபிளின் இந்த வசனம் என்ன போதிக்கிறது என்று சற்று கூர்ந்து கவனியுங்கள்!
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். (நீதிமொழிகள் 14:05)
ஆம் சுத்தமான இருதயமுள்ளவர்கள் இந்த பித்தலாட்டங்களை எதிர்ப்பார்கள் ஆனால் இப்படிப்பட்ட எதிர்ப்பாளர்கள் கிருத்தவ மதத்தில் எத்தனைபேர் உள்ளனர். இந்த பித்தலாட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் கிருத்தவர்களே உங்கள் போலி பாதரியார்கள் ஊணமுற்றோரை குணமாக்குகிறேன் என்று பொய்களை அவிழித்து விடுகிறார்களே அப்போ மேலே உள்ள பைபிள் வசனத்தில் உள்ள நீதிமொழியான பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான் என்ற வார்த்தை உங்களால் 100க்கு 100 உண்மையாகிவிட்டதே! இதற்கு உங்கள் பதில் என்ன? மேலும் இந்த பொய் பித்தலாட்டங்களை நீங்கள் எதிர்க்காமல் இருப்பதனால் நீங்களும் பொய்யர்களின் ஆதரவாளர் களாக மாறிவிட்டீர்கள் எனவே இதோ உங்கள் தேவனாகிய (அல்லாஹ்) கீழ்கண்டவாறு பைபிளில் கூறுவது பற்றி சற்றே செவிதாழ்த்தி கேளுங்கள்!
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)
இனிமேலாவது ஜீஸல் காப்பாத்துங்கோ! அல்லேலுயா! என்று மேடை ஏறி ஒப்பாரி வைக்கும் போலிப் பாதரியார்களை எதிர்த்து நில்லுங்கள்!
இந்த ஜெப ஆராதனை கூட்டம் மோசடி என்பதற்கு ஆதாரம்
நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
ஈரோடு (மே 07, 2010)
தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன்(35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி(28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி(10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள ‘புது சிருஷ்டி சபை’ என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். ‘சபைக்கு வந்து ‘ஜெபம்’ செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்’ என, கூறியுள்ளனர். சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார்.
ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, ‘சிறிது நேரத்தில் சரியாகி விடும்’ என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார்.
சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது:
சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், ‘சுமதிக்கு நோய் சரியாகி விடும்’ என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், ‘சுமதிக்கு ‘பேய்’ பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்’ எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. ‘மாத்திரை கொடுக்கலாம்’ என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர்.
கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ”கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,” என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி- தினமலர்
முடிவுரை
சுத்த இருதயமுள்ள கிருத்தவர்களே சற்று கீழ்கண்ட வசனத்தை படித்துப்பாருங்கள் இந்த வசனத்தில் ஊணமுற்றோர் இயேசு என்ற தீர்க்கதரிசியின் மூலம் குணமாக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது ஆனால் அந்த இயேசுவுக்கு வல்லமை கொடுத்தது யார்? தேவன் (அல்லாஹ்)தானே!
குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. (மத்தேயு 11:5)

மேற்கண்ட இந்த வசனத்தை படித்துக்கொண்டு தாங்களும் ஊணமுற்றோரை குணப்படுத்துவோம் என்று கூறும் உங்கள் போலி பாதரியார்கள் எல்லோரும் இயேசுவின் அவதாரமாகி விட்டார்களா? அல்லது தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்களா? அப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றால் பைபிளில் உள்ள தேவனுடைய அதிகாரம் கொண்ட தேவ வார்த்தைகளை காட்டுங்கள்.
இதோ ஊணமுற்றோரை இயேசு குணமாக்கினாலும் அக்கால மக்கள் இயேசுவை பாராட்டினார்களா? ஆதாரம் இதோ
இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர்.
இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9:8)
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! (நீதிமொழிகள் 16:16)
அன்புக் கிருத்தவர்களே இயேசு என்பவர் தேவகுமாரனில்லை அவர் முஸ்லிம் அவர் நபிமார்களில் (இறைதூதர்கள்) ஒருவர் எனவே ஏசுவின் மார்க்கமான இஸ்லாத்திற்குள் வாருங்கள்!
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16)
நன்றி:இன்ஜீல்இஸ்லாம்

No comments:

Post a Comment