Sunday, March 6, 2011

கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை

மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன் மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார். உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் கிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அவதூறு என இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்-குர்ஆன் மிகத்தெளிவாகவே எச்சரிக்கிறது.
இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இவ் விஷயத்தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.  அல்-குர்ஆன் (4 : 157)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.  அல்-குர்ஆன் (4 : 158)
குர்ஆனுடைய உண்மை விளக்கத்தின்படி சுருங்கக்கூறினால் THERE WAS NO CRUCIFIXION, SO NO CHRISTIANITY அதாவது ஏசு சிலுவையில் மரணிக்கவில்லை, கிருஸ்தவம் என்பதும் இல்லை. இதை முஸ்லிம்களாகிய நாம் குர்ஆனிலிருந்து விளக்கினால் கிருஸ்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா?. எனவேதான் ஏசு சிலுவையில் மரணித்தார் என்பது உண்மையல்ல கற்பனை, கிருஸ்தவமே ஒரு மாயை என்பதை பைபிளிலிருந்தே சுட்டிக்காட்டுகிறோம் - இன்ஷா அல்லாஹ்.
கிருஸ்தவ நண்பர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆக்கத்தை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் not to take things for granted.' - but "PROVE ALL THINGS!" (1 Thessalonians 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். (தெசலோனிக்கேயர் 5:21) என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ அன்பர்களும் எங்கள் மீது கோபப்படாமல் சங்கைக்குரிய ஏசுபிரான் சிலுவையில் உயிர்நீத்தாரா? கிருத்தவ மதம் உண்மையா? என்ற சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
யோனாவின் அற்புதமே ஏசுவின் அற்புதம்.
ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் தீனுஸ் இஸ்லாம் என்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்களாகிய யூதர்களிடம் பிரச்சாரம் செய்தபோது யூதர்கள் தொடர்ந்து மறுத்தனர். நபி ஏசு (அலை) அவர்கள் இறைகட்டளைபடி பல அற்புதங்களை செய்துகாட்டியும் அந்த யூதர்கள் நபி ஏசு (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ஒரு அத்தாட்சியை, அற்புதத்தை நபி ஏசு (அலை) அவர்களிடம் கேட்டனர். இதை மத்தேயு தான் எழுதிய சுவிசேஷத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"MASTER, WE WOULD SEE A SIGN FROM THEE". (Matthew 12:38).
அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். (மத்தேயு 12:38)
இதைக் கேட்ட ஏசு அவர்கள் கோபத்துடன் ஒரு பதிலைக் கூறியதாக பைபில் கூறுகிறது. அது என்ன பதில் கீழே பார்வையிடுங்கள்.
"AN EVIL AND ADULTEROUS GENERATION SEEKETH AFTER A SIGN; AND THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS: FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH." (Matthew 12:39-40).
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.  (மத்தேயு 12:39-40).
இதில் மூன்று விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும்.
1) விபச்சார சந்ததியார் என்று ஏசு கோபப்படும் அளவிற்கு அந்த யூதர்கள் மோசமான முறையில் நடந்திருக்கவேண்டும். (இன்று இணையங்களில் இஸ்லாத்தைத் தூற்றுபவர்களைக் கூட நாம் இவ்வாறு பழிக்கவில்லை). காரணம் யூதர்கள் இறைச் செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் இறைத்தூதர்களைப் புறக்கணித்ததாலும், இறைத்தூதர்களை கொலை செய்ததாலும், இறை வேதங்களில் தங்கள் சுய கருத்துக்களை புகுத்தி அதில் கலப்படம் செய்ததினாலேயே ஏசுவால் இவ்வாறு பழிக்கப்பட்டனர். (அன்று ஏசுவால் பழிக்கப்பட்ட யூதர்கள் இன்று கிருஸ்தவர்களுக்கு நெருங்கிய கூட்டாளிகள் என்பது வேறுவிஷயம்).
2) ஏசுவிடம் யூதர்கள் அத்தாட்சியைக் கேட்டபோது நான் பிறவிக்குருடை போக்கவில்லையா? தண்ணீரை மதுவாக மாற்றிக்காட்டவில்லையா? (யோவான் 2:9) என்றெல்லாம் அவர்களிடம் வினா எழுப்பவில்லை. மாறாக யோனாவின் அத்தாட்சி மட்டுமே என்னுடைய அற்புதம்/அத்தாட்சி என்று ஏசு ஒரே வரியில் பதில் சொல்கிறார். THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை.
3) யோனாவின் அத்தாட்சியே என்னுடைய அத்தாட்சி என்ற இந்த வார்த்தையை வைத்துக்கொண்டுதான், ஏசு உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர் நீத்தார், பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மூன்று நாட்கள் மரணத்திற்குப் பிறகு அதிசய உயிர்த்தெழுந்ததின் காரணமாக ஏசு யோனாவைப் போன்றவர் ஆகிறார் என்று ஏசுவின் சிலுவை மரணத்தை கிருத்துவர்கள் நிறுவுகின்றனர். ஏசு யோனாவைப் போன்றவரா? ஏசு சிலுவையில் உயர்நீத்தாரா? என்பதை பார்ப்போம்.
அது என்ன யோனாவின் அற்புதம்?
யோனா என்ற நபி யூனுஸ் (அலை) அவர்களின் அத்தாட்சியை பற்றி விளங்குவதற்கு முன்னால். பைபிள் கூறும் நபி யோனா (அலை)அவர்களின் சரித்திரத்தை நினைவு கூறவேண்டும். இச்சரித்திரங்கள் ஒவ்வொரு முஸ்லிம், கிருஸ்தவ மற்றும் யூதக்குழந்தைகளுக்கும் தெரியும். அதுதான் JONAH ON THE WHALE  மீன் வயிற்றில் தீர்க்கதரிசி யோனா.
இறைவன் நபி யோனா (அலை) அவர்களை நினேவா (அல்லது நினிவா) நகரை நோக்கி இறைப்பிரச்சாரப் பணி செய்யுமாறும், நினேவா நகர் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாரும் கட்டளையிட்டான். ஆனால் நபி யோனா (அலை)அவர்களோ, இறைகட்டளைபடி நினேவா நகருக்கு செல்லாமல் ஜாப்பா என்ற ஊருக்கு படகில் பயணம் சென்றார்கள்.
அவ்வாறு நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது கடல் கொந்தளிக்கின்றது. அன்றைய மீனவர்களின் மூடநம்பிக்கைபடி இறைவனுக்கு குற்றமிழைத்த நிலையில் எவரும் கடல்பிரயாணம் செய்தால் கடல் கொந்தளிக்கும் என்று நம்பினர். அப்படி கடல் கொந்தளிக்கும் போது அந்த குற்றவாளியை கடலில் வீசி எறியவில்லையெனில் கடல் அலையின் சீற்றத்தால் அப்படகில் பிரயாணம் செய்யும் அனைவரும் அழிவர் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும். மக்களோடு மக்களாக ஜாப்பா நோக்கி நபி யோனா (அலை)அவர்கள் பிரயாணம் செய்த அந்த நாளிலும் அவ்வாறு கடல் கொந்தளித்தது. எனவே படகிலிருந்த அம்மீனவர்கள் குற்றமிழைத்தவரை கண்டுபிடிக்கும் முறையாக அவர்கள் நம்பியிருந்த (LOT SYSTEM )  சீட்டுக்குலுக்கள் முறைப்படி (அல்லது பகடைமுறைப்படி) சீட்டுப்போடவே, நபி யோனா (அலை)அவர்களின் பெயரே வந்தது.
“THAT WE MAY KNOW FOR WHOSE CAUSE THIS EVIL IS UPON US. SO THEY CAST LOTS, AND THE LOT FELL UPON JONAH." (Jonah 1:7).
அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.  (யோனா 1:7)
"AND HE SAID UNTO THEM TAKE ME UP, AND CAST ME FORTH INTO THE SEA; SO SHALL THE SEA BE CALM UNTO YOU: FOR I KNOW THAT FOR MY SAKE THIS GREAT TEMPEST IS UPON YOU." (Jonah 1:12)
அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும் என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.  (யோனா 1:12)
நபி யோனா (அலை)அவர்களும் தானே குற்றவாளி என்றும், இறைகட்டளைக்கு மாறுசெய்துவிட்டேன் என்றும் ஒப்புக்கொண்டு நடுக்கடலில் குதிக்க தயாரானார்கள். அவ்வாறு நடுக்கடலில் போடப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை ஒரு மிகப்பெரும் மீன் விழுங்கியது. மூன்று நாட்கள் மீன் வயிற்றில் உயிரோடு தங்கிய நபி யோனா (அலை)அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடினார்கள். பின்னர் அந்த திமிங்கலம் மீன் நபி யோனா (அலை)அவர்களை கடற்கரையில் உயிரோடு உமிழ்ந்தது. இதுதான் நபி யோனா (அலை)அவர்களின் மூன்றுநாட்கள் மீன்வயிற்றில் உயிரோடு தங்கிய அற்புத சரித்திரம்.
யோன உயிரோடிருந்தார்களா? மரணித்தார்களா?
இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் நபி யோனா (அலை)அவர்கள் தங்களின் குற்றத்தை தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டபடியால் மீனவர்கள் அவர்களின் கைகால்களை கட்டி துன்புறுத்தி குற்றுயிராக்கி கடலில் வீசி எறியவில்லை. மாறாக எந்த நிலையில் படகில் ஏறினார்களோ அதே உடல் நலத்துடனே கடலில் எறிப்படுகிறார்கள். அவ்வாறு கடலில் போடப்படும் போது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
அவ்வாறு வீசப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை அந்த மீன் முழுமையாக விழுங்கியது. மீனுக்கு ஒரு இரை கிடைத்தால் பற்களால் கடித்து குதறி விழுங்கும். அம்மீன் நபி யோனா (அலை)அவர்களை அவ்வாறு செய்யவில்லை. காரணம் அவ்வாறு கடித்து குதறி நபி யோனா (அலை)அவர்கள் மரணித்திருந்தால் அதற்குப் பெயர் அற்புதமல்ல. எனவே அம்மீன் இறைக் கட்டளைபடி நபி யோனா (அலை)அவர்களை முழுவதுமாக விழுங்கியது. இப்போது நாம் கேட்கிறோம், இவ்வாறு அந்த மீன் விழுங்கும் நிலையில் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
"JONAH PRAYED UNTO THE LORD HIS GOD OUT OF THE FISH'S BELLY?" (Jonah 2:1).  அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: (யோனா 2:1). இவ்வாறு மீனால் விழுங்கப்பட்ட நபி யோனா (அலை)அவர்கள் மூன்று நாட்கள் மீன் வயிற்றில் தங்கினார்கள். இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ததாக மேற்கண்ட பைபிள் வசனம் கூறுகிறது. மரணமடைந்து விட்ட ஒரு மனிதன், இறைவனிடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது தன்னுடைய குற்றத்தை வருந்தி அழுது புலம்பத்தான் இயலுமா? இப்போது சொல்லுங்கள் மீன் வயிற்றில் மூன்று நாட்கள் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
மூன்றாம் நாள் அந்த மீன் இறைக்கட்டளை படி நபி யோனா (அலை) அவர்களை கடற்கரையில் உமிழ்ந்தது. அவ்வாறு உமிழ்ந்தபோது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.
இவ்வாறு நபி யோனா (அலை) அவர் அந்த மூன்னு நாட்களும் Alive! Alive!! Alive!!!  உயிரோடு இருந்தார்கள்! உயிரோடு இருந்தார்கள்!! உயிரோடு இருந்தார்கள்!!! என்பது இவ்வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தெரியும்.

யோனாவைப் போல் ஏசு இல்லை
கிருஸ்தவ நண்பர்களே இப்போது சற்று சிந்தியுங்கள் "AS JONAH WAS ..... SO SHALL THE SON OF MAN BE" LIKE JONAH  யோனா இருந்தததைப் போல்...மனுஷகுமாரனாகிய நானும் அதாவது யோனாவைப் போல என்று ஏசு கூறியதாக பைபிள் கூறுகிறது.
1. தீர்க்கதரிசி யோனா அவர்கள் படகிலிருந்து தூக்கி கடலில் இறக்கப்பட்டபோது அவர் உயிரோடு இருந்தார்.
2. மீன் யோனாவை விழுங்கியயோதும் அவர் உயிரோடே இருந்தார்.
3. மூன்று நாட்கள் யோனா மீன் வயிற்றில் இருந்தபோதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
4. மீன் அவரை கடற்கரையில் உமிழ்ந்த போதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
ஆனால் கிருஸ்தவர்களின் நம்பிக்கையைப் பாருங்கள். சங்கைக்குரிய தீர்க்கதரிசி ஏசுவை யூதர்கள் பிடித்து சிலுவையில் அறைந்ததாகவும், அவர் உலக மக்களின் பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் உயிர்நீத்தாகவும் கிருஸ்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மரணித்த ஏசு மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிருஸ்தவர்களின் நம்பிக்கை.
தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் உயிருடன் இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. யோனாவைப் போலத்தான் ஏசுவும் என்றும் கூறுகிறது. ஆனால் தீர்க்கதரிசி ஏசுவோ 3 நாட்கள் மரணித்துவிட்டதாக கிருஸ்தவர்கள் சொல்கிறார்கள். இந்த முரண்பாட்டின் மூலம் ஏசு, யோனாவைப் போல் அல்ல என்று நிரூபனமாகிவிட்டது. ஏசு, யோனாவைப் போல இல்லை என்று ஒப்புக்கொள்வதைத் தவிர இங்கு வேறு வழியுமில்லை. எனவே கிருஸ்தவர்கள் ஏசு உண்மை தீர்க்கதரிசி இல்லை என்ற முடிவிற்கு வரவேண்டும் அல்லது ஏசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு நிலையில் எதை ஒப்புக்கொண்டாலும் கிருஸ்தவம் என்பது ஒரு மாயை, ஏசுவின் சிலுவை மரணம் நடைபெறவில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகும். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் 4:157,158 வசனங்களில் தெளிவு படுத்துகிறது.
கிருஸ்தவர்கள் தேவகுமாரராக நம்பிக் கொண்டிருக்கும் ஏசு, யோனாவைப் போல இல்லை என்ற உண்மை கிருஸ்தவ மத கோட்பாட்டிற்கும், கிருஸ்தவ திருச்சபைகளுக்கும் விழுந்த பேரடியாக இருப்பதால், இதற்கு ஏதாவது சப்பைக் கட்டுகட்டி, பூசி மெழுகி, ஏசு சிலுவையில் மரணித்தார் என்பதை நிரூபிப்பதற்காக கிருத்தவச் திருச்சபைகள் சில குறுக்கு வழியை யோசித்தனர். அதன்படி மத்தேயு 12:39-40 வசனங்களை (வழக்கம்போல) திரித்தனர்.
FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH இதில் THREE என்று நான்கு முறை வந்துள்ளது எனவே 'மத்தேயு 12:39-40 வசனங்கள் ஏசு, யோனாவைப் போல் என்ற கருத்தைப் போதிக்கவில்லை மாறாக TIME FACTOR அது மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்கின்றனர். அதாவது தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (sepulcher) இருந்தார் என்று கூறுகிறார்கள். இதிலும் கிருஸ்தவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது.

ஏசு மூன்று நாட்களா பிணஅறையில் இருந்தார்?
பைபிளை படித்த கிருஸ்தவ நண்பர்களிடம் ஏசு சிலுவையில் அறையப்பட்டது எப்போது? எந்தக்கிழமையில்? என்று வினவுங்கள். அது வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னர் என்பார்கள். நியூஜிலாந்திலிருந்து அமெரிக்காவரை, ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா வரை அனைத்து கிருஸ்த்தவ நாடுகளும் ஒத்துக்கொண்ட ஒரு விஷயம்;. அதனால்தான் ஈஸ்டர் பண்டிகை என்ற GOOD FRIDAY  புனித வெள்ளியை கிருஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
சரி அப்படி சிலுவையில் மரணமடைந்த ஏசு எப்போது உயிர்த்தெழுந்தார் எனக் கேட்டால் மூன்றாம் நாள் ஞாயிறு காலை சூரியன் உதிக்கும்முன் என்று பதிலளிப்பர். காரணம் ஞாயிற்றுக் கிழமை (வாரத்தின் முதல் நாள்) சூரியன் உதயமாகும் முன் மேரிமெக்டலின் ஏசு வைக்கப்பட்டிருந்த பிணஅறையை (Tomb) பார்த்தார், பிணஅறை (Tomb) காலியாக இருந்தது.  We must not forget that the Gospels are explicit in telling us that it was "before sunrise" on Sunday morning (the FIRST day of the week), that Mary Magdalene went to the tomb of Jesus and found it empty.
யூதர்களின் நம்பிக்கைபடி பாவம் செய்தவர்களையும், குற்றம் இழைத்தவர்களையும் சிலுவையிலேற்றிக் கொள்வர். காரணம் அந்த பாவி மரண வேதனையை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்பதற்காக. சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் உடலிலிருந்து குருதிகள் அனைத்தும் வெளியேறி உயிர் பிறிவதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரங்களாவது ஆகும். யூதர்களின் பார்வையில் அன்று ஏசு சாபத்திற்குள்ளானவர். அடுத்தநாள் சனிக்கிழமை யூதர்களின் புனித நாளாக இருந்ததால் வெள்ளிக்கிழமை மாலையே அவசர அவசரமாக ஏசு சிலுவையில் அறையப்படுகிறார்.
எனினும் கிருத்துவர்களின் நம்பிக்கைப்படி ஏசுவின் உடல் மூன்று நாட்கள் பிண அறையில் (வழஅடி) இருந்ததா என்பதை பார்ப்போம்.
ஈஸ்டர் வாரம்

பிணஅறையில் ஏசுவின் உடல் இருந்த கால அளவு
 
காலை
இரவு
வெள்ளிக் கிழமை மாலை (சூரியன் மறையும்முன்)
இல்லை
ஒரு இரவு

சனிக்கிழமை (பிணஅறையில் இருந்திருக்கலாம்)
ஒரு பகல்
ஒரு இரவு
ஞாயிற்றுக் கிழமை (சூரியன் உதிக்கம் முன் உடல் காணவில்லை)
இல்லை
இல்லை
மொத்தம்
ஒரு பகல் இரண்டு இரவுகள்
 
வெள்ளிக்கிழமை மாலைதான் (சூரியன் மறையும் முன்னர்) ஏசு சிலுவையில் அறையப்படுகிறார் எனவே வெள்ளிக்கிழமை காலை அவர் உடல் பிணஅறையில் இருந்ததற்கு சாத்தியமில்லை. அன்று வெள்ளி இரவு பிணஅறையில் அவர் உடல் இருந்திருக்கலாம்.
அடுத்தநாள் சனிக்கிழமை காலையும், அன்று இரவும் ஏசுவின் உடல் பிணஅறையில் இருந்திருக்கலாம்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரியன் உதயமாவதற்கு முன்னர் மேரிமெக்டலின் பிணஅறையைப் பார்த்தார் அதுகாலியாக இருந்தது. எனவே இது வரை ஒரு பகலும் இரண்டு இரவுகளும் பிண அறையில் ஏசுவின் உடல் இருந்திருக்கிறது.
இந்நிலையில் தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (Tomb) இருந்தார் என கிருத்துவ திருச்சபைகள் அப்பாவி கிருஸ்தவர்களின் காதில் பூசுற்றியது என்னாயிற்று?
JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY;  யோனா 3 பகலும் 3 இரவுகளும் மீன்வயிற்றில் இருந்தார். ஆனால் ஏசுவோ 1 பகலும் 2 இரவுகள் மட்டும்தானே பிணஅறையில் (வழஅடி) இருந்துள்ளார்? 3 பகல் 3 இரவுகளும், 1 பகல் 2 இரவுகளும் சமமாகுமா?
IS 3+3  and  1+2 are equal ?
3 +3 ம்,  1 +2 ம்  சமமாகுமா?
அணுவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ அல்லது கணிதமேதை இராமானுஜமோ வந்தால்கூட இதை சமப்படுத்தி காட்ட இயலாது.
எனவே யோனாவைப் போல ஏசு உயிரோடு இருக்கவில்லை என்று முன்னர் நிரூபனமாகியதைப் போல, இப்போது (TIME FACTOR) மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்று கூற்றும் பொய்யாகி விட்டது.
இதை உணர்ந்து கொண்ட ராபர்ட் பஹே என்ற கிருஸ்தவ அறிஞர் ஏசு வெள்ளியன்று சிலுவையில் அறையப்படவில்லை மாறாக புதன் கிழமைதான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும் என்றார். இதை டர்பன் (South Africa-Durban)  நகரிலுள்ள ஹோலிடே இன் (Holiday Inn) நட்சத்திர ஹோட்டலில் கருந்தரங்கமாக நடத்தியது மட்டுமல்லாது இக்கருத்தை ப்லைன் ட்ரூத் (Plain Truth)  இதழிலும் வெளியிட்டார். காரணம் வெள்ளிக் கிழமையிலிருந்து கணக்கிட்டால் 3 பகல் 3 இரவுகள் வரவில்லை என்பதால் அவர் புதன் இரவிலிருந்து கணக்கிடச் சொன்னார்.
என்ன விளையாட்டு இது? கடந்த 2000 வருடங்களாக புனித வெள்ளி, புனித வெள்ளி என்று கூப்பாடு போடுவது வெற்றுக்கூச்சலா என்று கேட்கத் தோன்றுகிறது. பைபிள் பழைய ஏற்பாட்டின் 300க்கும் மேற்பட்ட தூத்துச் செய்திகள் ஏசு சிலவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்றுதான் பரிபூரனமானது என்ற கிருத்தவ நம்பிக்கை என்ன ஆயிற்று? இவ்வுலகின் 200 கோடி கிருஸ்தவர்களும் தங்கள் மதத்தின் அஸ்திவாரமாக நம்பும் தங்கள் கடவுளின் சிலுவை மரணத்தைப் பற்றிய 2000 வருடங்கள் அறியாமையை வெளிக்கொண்டு வந்ததற்கு ராபர்ட் பஹே அவர்களை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். அறிஞர் ராபர்ட் பஹேயின் ஆய்வின்படி புனித வெள்ளி என்பதல்ல புனித புதன் என்பதே கிருத்துவர்களின் புனித நாள். ஈஸ்டர் பண்டிகை, புனித வெள்ளி என்று கிருஸ்தவர்களை கடந்த 2000 வருடங்களாக சைத்தான் வழிகெடுத்து விட்டானா?
ஆகையால் மக்களே! கிருஸ்தவர்கள் யாரை தேவகுமாரன் என்று நினைத்துக் கொண்டும், அவர் சிலுவையில் மரணித்தார் என்றும் நம்புகிறார்களோ அவருக்கும் அல்லாஹ்வின் சங்கை மிக்க இறைத்தூதர்களின் ஒருவரான ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஏசு என்ற ஈஸா (அலை) அவர்கள் இறைவனோ அல்லது தேவகுமாரரோ அல்ல மாறாக இறைவனின் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களை எவரும் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அந்த யூதர்களுக்கு நபி ஈஸா (அலை) அவர்களைப் போன்ற ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. அல்லாஹ் அவர்களை தன் அளவில் உயர்த்திக் கொண்டான். இதுவே சத்தியமான உண்மை. இதை விசுவாசங்கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தகுதியான ஒரே கடவுளாகவும், நபி முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும், பரிசுத்த குர்ஆனை இறைவனின் இறுதி வேதமாகவும் நம்பி, தூய இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாததுவரை எந்த கிருஸ்தவருக்கும் பரலோக ராஜ்யத்தில் வெற்றியுமில்லை, ஈடேற்றமுமில்லை. கிருஸ்தவ நண்பர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
நன்றி :இஸ்லாமிய இணைய பேரவை

5 comments:

  1. Jesus is the way, truth and life. Follow Him.

    ReplyDelete
  2. பிறகு எதற்க இயேசு அவர்கள் யோனாவின் எடுத்துக்காட்டை காட்டினார்?? சகோ

    ReplyDelete
  3. சாத்தானின் கிரிகைகள் சிலுபையின் மறணத்தை மறுதலித்து மக்களை நித்திய அக்க்னிக்குள் இழுப்பதே அவன் மிக்குறியாயிருக்கிறான்.. இவ்வித ஆக்கினைப்புக்கு தப்பிவிட சிந்தியங்கள் நன்பர்களே...

    ReplyDelete