Saturday, March 5, 2011

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

எழுத்து விவாதங்களில் நம் முன்னால் வைக்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் பெரிய அளவில் சிரமம் இருக்காதென்றாலும் (அல்ஹம்துலில்லாஹ்) பல சமயங்களில் நமக்கெல்லாம் தோன்றுவது, 

சரி, இதையெல்லாம் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்? 

இணைய தளங்களில் அதிகம் உலா வருபவர் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இவர்கள் எங்கிருந்து இந்த கேள்விகளை கொண்டு வருகிறார்கள் என்று... 

பெரும்பாலான கேள்விகள் கீழ்காணும் ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட தளங்களாக தான் இருக்கும்,

  • a
  • j
  • f
  • t
  • d        

இந்த தளங்களில் வெளியாகும் தகவல்கள் பல, மனோத்தத்துவ ரீதியாக பாதிப்பை உண்டாக்குவதையே குறிக்கோளாய் கொண்டவை. உள்ளே உள்ள விஷயங்கள் என்றால் ஒன்றும் பெரிதாக இருக்காது. 

உதாரணத்துக்கு, ஒரு பதிவு துவங்கும் போதே இப்படி துவங்கும், "நிச்சயம் இந்த பதிவை முஸ்லிம்கள் படித்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள்" 

இதை படித்த உடனே சில முஸ்லிம்களுக்கு மனதில் ஒரு சிறு சலசலப்பு உண்டாகிவிடும். பின்னர் அவர்கள் அந்த பதிவை படிக்கும் போது, ஒரு வேலை இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகிவிடும். 

வேறு சில பதிவுகள் இன்னும் தமாசாக இருக்கும், அதாவது, "இந்த பதிவிற்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல முடியாது அல்லது பதில் இருக்காது" என்று தொடங்குவார்கள் அல்லது முடிப்பார்கள். 

இது போன்ற பதிவுகளிலும் விஷயம் பெரிதாக இருக்காது, முன்னரே கேட்கப்பட்ட கேள்விகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் ஒன்று, இந்த தளங்கள் முஸ்லிம்களுக்கு பெரும் உதவி புரிகின்றன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் இவற்றுக்கு பதில் தேடுவதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம், அவர்களுடைய உண்மை முகங்களும் தெரிய வரும், நம் ஈமானும் அதிகரிக்கும்...அல்ஹம்துலில்லாஹ்...

ஆக, நான் கூறிக்கொள்ள விரும்புவதல்லாம், இஸ்லாத்திற்கெதிராக சிலர் கொண்டுவரும் விமர்சனங்களை முடிந்தவரை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டாம் என்பதுதான். 

இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும், நான் பார்த்தவரையில்     இஸ்லாத்திற்க்கெதிரான வாதங்களுக்கு பதிலளிக்கும் பெரும்பாலான நம் சகோதரர்கள் மிகுந்த விவேகத்துடன் வாதங்களை கையாள்கிறார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.     

நான் சொன்ன இரண்டாவது சிறு உதவி இங்கேதான். நான் மேலே சொன்ன தளங்களின் வாதங்களை நம் சகோதரர்கள் எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டுமானால் கீழ்க்காணும் தளங்களை பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கெதிரான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் இந்த தளங்களில் பெறலாம்...இன்ஷா அல்லாஹ்...


இவை எனக்கு தெரிந்த, குறித்து வைத்த தளங்கள். இதுபோல ஏராளமான தளங்கள் இருப்பதாகவே தெரிகிறது. உங்களுக்கு இதுபோன்ற தளங்கள் தெரியுமானால் கமெண்ட் பகுதியில் தெரியப்படுத்தலாம். உபயோகமாக இருக்கும்..இன்ஷா அல்லாஹ்...
 .



சமீபகாலமாக, தமிழ் வலையுலகில் சிலர்,  Ibn Warraq அவர்களுடைய "Why I am not a Muslim (1995)" என்ற புத்தகத்தை பயன்படுத்தி எழுதி வருகின்றனர். இது ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அந்த புத்தகத்தின் தரம் அப்படி. எது எப்படியிருந்தாலும் சரி, அந்த புத்தகத்தின் அபத்தமான வாதங்களை அம்பலப்படுத்த பல இஸ்லாமிய தளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு...


நான் சமீபத்தில் பார்த்த ஒரு தளம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தளத்தை நடத்துபவர்கள் தங்களை அடையாள படுத்திக்கொள்ள விரும்பவில்லை, தாங்கள் ஆணா பெண்ணா என்பது உட்பட...அவர்களுக்கு பெயர் உண்டு, ஆனால் அந்த பெயரை வைத்து நாம் எதையும் யூகிக்க முடியாது. 

அந்த தளம்...http://www.loonwatch.com/ 

சரி அவர்கள் யாராயிருந்தால் நமக்கென்ன? அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் என்ன என்பதுதான் முக்கியம். 

அவர்களுடைய நோக்கம், இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதில் சொல்லுவது. 

இஸ்லாத்திற்கெதிராக செயல்பட்டு பிரபலமாக உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கி, அவர்களது கருத்துக்களுக்கு பதில் கூறுவது. 



நான் மேல குறிப்பிட்ட இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களின் தலையாய குரு யாரென்றால், ராபர்ட் ஸ்பென்சர் (Robert Spencer) என்பவர்தான். இவர் தான் 'J' என்று தொடங்கும் தளத்தை நடத்துபவர், அதுபட்டுமல்லாமல் இவரது உதவியை/வாதங்களை மற்ற தளங்களும் நிறையவே பயன்படுத்தி கொள்ளும்.

இவரது நூல்களை/கருத்துக்களை அம்பலப்படுத்தி இவரை சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது இந்த தளம். அதுமட்டுமல்லாமல், ராபர்ட் ஸ்பென்சரை எழுத்து விவாதத்துக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.                

நான் மேல குறிப்பிட்டுள்ள முஸ்லிம்களுடைய தளங்கள் ராபர்ட் ஸ்பென்சருடைய வாதங்களுக்கு தெள்ளத்தெளிவாக பதிலளித்து வந்தாலும், இவர்கள் செய்வது சிறிது வித்தியாசமானது. ஏனென்றால் இவர்களுடைய வாதங்களில் நகைச்சுவை ததும்பும். 

ஆக, உங்கள் முன் யாராவது ராபர்ட் ஸ்பென்சருடைய புத்தகங்களை/கருத்துக்களை முன்வைத்தால் நீங்கள் இவர்களுடைய தளத்தையும் ஆவணச்செய்யலாம்.        

இந்த தளத்தில் நான் மிகவும் ரசித்த இரு பதிவுகள்... 
  • All terrorists are Muslims...except the 94% that aren't...
  • Fathima Bary needs to read her Bible...  


நிச்சயமாக உங்களிடம் நீங்கள் கேள்விப்படாத வித்தியாசமான ஒரு கருத்தை நம் முஸ்லிமல்லாத சில சகோதரர்கள் முன்வைத்தால் அவை பெரும்பாலும் இந்த Anti-Islam தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். அந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க நாம் மேலே பார்த்த இஸ்லாமிய தளங்கள் உதவியாய் இருக்கும், இன்ஷா அல்லாஹ்... 

ஆக, இந்த பதிவின் மூலமாக நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான், 

இஸ்லாத்திற்கெதிராக கேள்விகள் வைக்கப்படும்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மால் சுலபமாக பதிலளித்து விட முடியும் (இன்ஷா அல்லாஹ்). அப்படி அதில் சிரமமிருந்தால் நாம் மேலே பார்த்த தளங்களை நீங்கள் பரிசீலனை செய்யலாம் என்பதுதான். 

என்னதான் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் அதிகளவில் வைக்கப்பட்டாலும், இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. இஸ்லாத்திற்க்கெதிரான அவர்களது திட்டங்கள்/சூழ்ச்சிகள் பலிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்வதில் மிகச் சிறந்தவன் ஆவான் --- Qur'an 3:54      
 And they planned and Allah too planned, and Allah is the best of planners --- Qur'an 3:54

குரானின் இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது சிலரை நினைத்தால்...

முடிப்பதற்கு முன் ஒரு சிறு யோசனை. இது விதண்டாவாதம் புரியும் சில முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது. 

நான் நினைப்பதுண்டு, அவர்கள் மட்டும்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? 

நம்மிடம் கேள்வி கேட்கும் பெரும்பாலானோர், நாம் தவறான கொள்கையில் இருப்பதாகவும், அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதாகவும் நினைத்துதானே நம்மிடம் இஸ்லாத்தை பற்றி கேட்கின்றனர், வாதம் புரிகின்றனர்?

நம்முடைய நிலையும் அதுதானே?, அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதாக தானே நாமும் நினைக்கிறோம்?

ஆக,விவாதம் என்று வரும்போது, நம் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை அவர்களும், அவர்கள் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை நாமும் ஏன் கேட்கக்கூடாது? அவர்கள் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும்,

  • மற்ற மதங்களை சேர்ந்தவர்களாக,
  • நாத்திகர்களாக,
  • இறைவன் இருக்கிறான், ஆனால் மதங்களை/மார்க்கங்களை நம்ப மாட்டோம் என்று சொல்லுபவர்களாக,

என்று யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு கேள்வி நீங்கள், ஒரு கேள்வி நான் என்று ஏன் உடன்பாடு வைத்துக்கொள்ள கூடாது?

அவர்களிடம் பதிலில்லையென்றால் அவர்களை புண்படுத்தாமல் அடுத்த கேள்விக்கு சென்று விட வேண்டியதுதான்.

இது இஸ்லாத்தை பற்றி உண்மையிலேயே அறிந்து கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கு பொருந்தாது. விதண்டாவாதம் புரிபவர்களுக்கு மட்டுமே.  

இது என் தனிப்பட்ட கருத்து. மாற்றுக் கருத்து உடையவர்கள் தங்கள் கருத்துக்களை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்...


இறைவன் நம் எல்லோரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;
என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும்,நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170        

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....
நன்றி: எதிர்க்குரல்

No comments:

Post a Comment