Friday, February 18, 2011

அழியும் நிலையில்... மாண்பு மிகு மனிதனின் மனிதாபிமானம்...!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 சகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம் காரணம் தவறு செய்கிறோம், தவறை உணர்கி றோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் இந்த அறிவுத் திறனை யார் வழங்கியது அல்லாஹ் தானே இதோ!
  வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாகஎன்று பிரார்த்திப்பார்கள். (அல்குர்ஆன் 3:191,192)
 மனிதனின் விடாமுயற்சிக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றிகள்
 
வானத்தில் பறக்கும் பறவையைக் கண்டோம் ஆனால் நமக்கு பறக்க இறக்கைகள் இல்லை என்று கவலைப்பட்டதில்லை மாறாக அறிவைக்கொண்டு ஆகாய விமானங்களைப் படைத்து பறவையின் வழித்தடங்களை விட உயரமான வழித்தடங்களில் பறந்து செல்கிறோம்.
 நீர் நிலைகளில் சுற்றித்திரியும் மீன்களை கண்டு நாம் அவ்வாறு தண்ணீரில் வாழமுடியாதே என்று வருத்தப்பட்டிருக்கிறோமா இல்லையே! மாறாக நம் மூளையைக் கொண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குகினோம் இதன் காரணமாக மீன்கள் செல்ல முடியாத ஆழ்கடலின் ஆளமான பகுதிகளில் நாம் நுழைந்து நீரின் அழகை ரசிக்கிறோமே.
 காடுகளை வசப்படுத்தினோம், நாடுகளை வசப்படுத்தினோம், வானம் மற்றும் கடல் மார்க்கங்களையும் வசப்படுத்தினோம் ஏன் தற்போது வால்நட்சத்திர கூட்டங்களையும் விண்மீன்களையும் வேட்டையாட கிளம்பிவிட்டோமே! இது எவ்வாறு கிடைத்தது நமது விடாமுயற்சியாலும் அறிவாற்றலாலும்தானே!
மனிதனுக்கு வெற்றி கிட்டியதும் ஆணவம் கூடுகிறது!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல். மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(புகாரி 7141 Volume:7 Book:93)
சகோதரர்களே நாம் மேற்கண்ட நபிமொழியை சிந்திக்கின்றோமா? இல்லையே மாறாக அல்லாஹ் நமக்கு அளித்த வெற்றியை நாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை ஏன் நமக்கு வழங்கப்பட்ட வெற்றியை நம்முடன் வாழக்கூடிய அனைத்து பகுதி மக்களுடனும் பரிமாறிக்கொண்டு ஆனந்தமான அமைதியான சமுதாயமாக வாழ நினைப்பதில்லை, மாறாக நான் என்ற ஆணவத்தை வளர்த்துக் கொள்கிறோம்! இதன் விளைவுகளால் ஒரு பகுதி மக்கள் அறிவாற்றலில் வளர்ந்த நிலையிலும் மறுபக்கம் அறிவாற்றலில் பின்தங்கியும் செல்லும் நிலை ஏற்படுகிறது ஆயுதங்கள் பெருகுகின்றன, வலிமை கூடுகிறது இறுதியாக அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கூறுவதாக இருந்தால் அமெரிக்காவின் அறிவுத்திறனும் மற்றும் இராக், நேபாளம், பூடான் போன்ற நாடுகளின் பின்தங்கிய நிலைகளையும் குறிப்பிடலாம்.
சவக்குழிக்குல் புதைக்கப்படும் மனிதாபிமானம்

நாம் வாழக்கூடிய இந்த உலகில் ஒருபுறம் செல்வச்செழிப்பில் மக்கள் மிதக்கிறார்கள். காலையில் தேநீர் அருந்துவது லண்டனிலும், மதிய உணவு ரோம் மற்றும் பாரிஸ் நகரங்கலிலும், இரவு உணவு அமெரிக்க நாடுகளிலும் மறுநாள் கண்விழிப்பது ஜப்பானிலும் என்று ஆகாய மார்க்கமாகவே பயணிக்கும் விஞ்ஞான வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் நாம் பெற்றுள்ளோம் ஆனால் அடுத்த வேளை உணவுக்கு தட்டுத்தடுமாரும் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களுக்காக நாம் எதையாவது கொடுக்கிறோமா?
 சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே! ஆப்ரிக்க நாட்டில் உணவுக்குப் போராடும் ஒரு 10 வயது குழந்தை நம்மை பார்த்து இவன் வாகனங்களிலெல்லாம் பயணிக்கிறானே இவனிடமிருந்து எதையாவது நமக்கு உணவு கிடைக்குமா என்று ஏங்கித்த விக்குமே! இதை நாம் உணர்கிறோமா?

ஆனால் நாம் அவர்களைப்பார்த்தும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிவிடுவோம், அவர்கள் ஆசை ஆசையாக ஓடி வந்தால் நேரம் ஆகிவிட்டது கிளம்பனும் என்று கூறி அவர்களை நேசிக்க தவறுவோம். நம் ஏழை அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, உறவினரோ நம்மை பார்த்து நம் சகோதரன் உதவமாட்டானா? வசதியான இந்த சகோதரன் மூலமாக நமக்கு அல்லாஹ் ஒரு நல்ல வழியை காட்டமாட்டானா என்று மனதிற்குள் குமுறுவார் களே இதை நாம் உணர்கிறோமா? இப்படிப்பட்ட நம் சொந்த இரத்த பந்தங்களையே நாம் உதாசீணப்படுத்துகிறோம் ஆனால் பெருமையாக நம்மை அல்லாஹ் கைகொடுத்தான் என்று பேசிக்கொள்வோம் இந்த பெருமை எதற்கு? இந்த பகட்டு வேஷம் நமக்கு எதற்கு! அல்லாஹ் நாம் பெருமைப்படு வதற்காகத் தான் அறிவையும், செல்வத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்தானா? இதோ கீழ்கண்ட நபிமொழியை நினைவுகூறுங்கள்

ஆப்ரிக்காவை விடுங்கள் நம் அண்டை வீட்டில் வசிக்கும் ஏழை அல்லது நமது உடன்பிறந்த ஏழை சகோதரன் அல்லது ஏழை சகோதரியின் பச்சிளங் குழந்தைகள் பசியால் வாடும்போது நம்மை பார்த்து இந்த எங்கள் மாமா, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி நமக்காக எதையாவது சாப்பிட கொடுக்கமாடடார்களா? என்று ஏங்கமாட்டார்களா? இதை நாம் உணர்கிறோமா?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். (புகாரி 7138, Volume:7 Book:93)
 நம்முடைய சமுதாயம் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் எவ்வளவு அழகாக வர்ணிக்கின்றான் பாருங்கள்! நபிகளார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் படியுங்கள்!
 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களி லெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள்அல்லாஹ்வை நம்புகிறீர்கள். (அல் குர் ஆன் 3 : 110) 
 மக்களில் சிறந்தவர் யார்?”  என்று , அதற்கு நபி(ஸல்) அவர்கள் “மக்களில் குர் ஆனை நன்கு கற்றறிந்தவரும் , அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரும், அதிகமாக நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவரும், அதிகமாக உறவை பேணி வாழ்பவருமே சிறந்தவர் ஆவார் என்றார்கள். (கன்ரா பின் அபீலஹப்(ரலி) : முஸ்னத் அஹ்மத்.) 
  நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
  உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் மதிப்பு மிக்க சமுதாயம் ஆவீர்கள்.” (திர்மிதீ)
 
வசதி வாய்ப்புகளை பெறுக்கிக்கொள்ளும் நாம் மனிதாபிமானத்தை படிப்படியாக இழந்துக்கொண்டிருக்கிறோமே! நம்முடன் கூடப்பிறந்த ஏழை சகோதர, சகோதரிகளுக்கு கூட உதவாமல் வாழ்ந்துவருகிறோமே!  நன்மையை ஏவுவதற்கு பதிலாக தீமையை வளர்த்துக்கொண்டு வாழ்கிறோமே இது முறையா?

உங்கள் தவறுக்கு நீங்களே பொறுப்பு காரணம் நன்மை தீமைகளை இஸ்லாம் போதித்துவிட்டது! அதற்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான்!

பிறகு நபி அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்” என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
மக்களே எச்சரிக்கையாக இருங்கள் நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள்!
இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)” (அல்குர்அன் 5:3) (ஸஹீஹ்ுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
இனியாவது திருந்த முற்படுவோம்! குறைந்தபட்சம் நம்மால் ஆன துவா (பிரார்த்தனை)யாவது செய்து ஏழைகளுக்கு உதவிடுவோம்!
அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி: Islamic Paradise

சீரழிந்த தமுமுகவின் சீமான் கூட்டணி (?)

தாளம் போடும் தகர டப்பாக்கள்.

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் தமுமுகவின் சுய நல சிந்தனை கொண்ட அரசியல் முறைமை பற்றி ஏற்கனவே நாம் எழுதியிருந்ததை வாசகர்கள் கவணித்திருப்பீர்கள்.

இந்தத் தொடரில் சீமானுடன் கூட்டு சேர்ந்திருக்கும் இந்த மன்மதர்களின் உண்மை முகத்தை இங்கு வெளிக்காட்டளாம் என நினைக்கிறோம்.

இலங்கை முஸ்லீம்களும்,ஆரம்பகால தமுமுகவும்.

தமுமுக வின் ஆரம்பகாலத்தில் இலங்கை முஸ்லீம்களுக்காக தமுமுக அன்றையை நிர்வாகிகள் குரல் கொடுத்தது அனைவரும் அறிந்ததே! 

இந்திய முஸ்லீம்களின் வரலாற்றில் இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினைக்காக முதன் முதலில் குரல் கொடுத்த ஒரு இந்திய இஸ்லாமிய இயக்கம் என்றால் அது ஆரம்பகால தமுமுகவாகத்தான் இருக்க முடியும்.

அன்றைய தமுமுகவின் நிர்வாகத்தில் இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் தான் இருந்தனர் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர;களை சரமாரியாக சுட்டு கொலை செய்தது விடுதலைப் புலிகள் இயக்கம். அந்த இயக்கத்தினருக்கு ஆதரவாக அன்றைய காலகட்டத்தில் இந்திய மற்றும் தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ இயக்கங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன.

அனைவரும் புலிகளுக்கு சாதகமான கருத்துக்களை வெளியிடும் போது தமுமுக என்ற இயக்கம் மாத்திரம் புலிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டது மாத்திரமன்றி குறிப்பிட்ட தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பிட்பட்ட காலத்தில் தமுமுகவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்றை தவ்ஹீத் ஜமாத்தின் நிர;வாகிகள் அனைவரும் அந்த இயக்கத்தை விட்டும் பிரிந்து வந்து ததஜ என்ற தற்போதைய இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அதன் பின் தமுமுகவின் செயல்பாடுகள் படிப்படியாக அரசியல்வாதிகளுக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது.அதன் உச்சகட்டம் இன்று அரசியல் சாக்கடையில் டீ குடிக்கும் நிலைக்கு தமுமுக தள்ளப்பட்டிருக்கிறது.

புலிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய தமிழக முஸ்லிம் இயக்கங்கள்.

வரலாற்றில் தனது தொப்புல் கொடி உறவுகளுக்கு வரலாறு காணாத தவறுகளை செய்த தமிழக முஸ்லிம் இயக்கங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பவையாக தமுமுக,முஸ்லீம் லீக்,பாப்லர் பிரன்ட் ஆப் இந்தியா (எம்.என்.பி) ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இலங்கை முஸ்லீம்களை அவா;களின் சொந்த மண்ணை விட்டும் விரட்டியடித்து,தொழுதுகொண்டிருந்த முஸ்லீம்களை கொலை செய்து பல இஸ்லாமியர;களை வதை செய்து கப்பம் என்ற பெயரில் முஸ்லீம் செல்வந்தர்களின் பணத்தை எல்லாம் பரித்து இலங்கை இஸ்லாமிய சமுதாயத்திற்கே துரோகத்திற்கு மேல் துரோகம் செய்த தீவிரவாத இயக்கமான புலிகள் இயக்கம்,இறுதிக் கட்ட யுத்தத்தில் தோழ்வியடைந்த போது அந்த இயக்கத்திற்கு,தீவிரவாதத்திற்கு ஆதரவாக அரசியல் காரணங்களை முன்நிருத்தி பல அரசியல் கட்சிகளும் போராட்டங்களையும்,பந்த் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது.

இதில் ஆளும் திமுக அரசுடன் அந்நேரத்தில் இணைந்திருந்த தமுமுகவும் இந்தப் போராட்டங்களில் புலிகளுக்கு ஆதரவாக கலந்து கொண்டது.

பாப்லா் ப்ரன்ட்,முஸ்லீம் லீக் போன்றவையும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

முழு இஸ்லாமிய சமுதாயத்தினதும் எதிரி வீழ்த்தப் பட்டிருக்கிறான்,நியாயத்திற்கு காலம் பிறந்திருக்கிறது அந்நேரத்தில் தங்களுடைய வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காக இந்த சமுதாய இயக்கங்கள்(?) அனைத்தும் அவா;களுக்காக குரல் கொடுத்து அன்றே இலங்கை முஸ்லீம்களின் மனதில் கல்லைப் போட்டுவிட்டன.

அதனைத் தொடர;ந்தும் இந்த இயக்கங்கள் தங்கள் பத்திரிக்கைகளிலும்,நிகழ்ச்சிகளிலும் புலிகளுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வந்தனர; இன்றும் அதனை நடைமுறைப்படுத்துவதின் மூலம் வெந்த புன்னில் வேல் பாய்ச்சும் வேலையைப் பார்க்கின்றர்.

சீமான் கூட்டணியும், தமுமுகவின் தொடர் மோசடியும்.

தொடர்சியாக பல துரோகங்களை செய்து வந்த தமுமுக தற்போது தேர்தல் கூட்டணியாக தன்னுடன் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசித்திரிவதினால் பல தடவைகள் கைது செய்யப்பட்ட தமிழக தீவிரவாதியாக பலராலும் வர்ணிக்கப்படும் சீமான் அன்மையில் சிறையிலிருந்து வெளியில் வந்தார;.

தான் சிறையில் இருக்கும் போது தனக்காக குரல் கொடுத்த இயக்கங்களுக்கு நன்றி சொல்வதற்காக வைக்கோ தமுமுக போன்றவர்களை சந்தித்தார் சீமான்.

தமுமுகவுடன் சீமானின் சந்திப்பு நிகழ்ந்த நேரம் சீமானுடைய கருத்துக்களின் ஒன்றிப் போன இந்த சமுதாயத் துரோகிகள் சீமானையும் ஆதரித்து அவர் ஆதரித்த விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது புலிகள் தமது வரலாற்றில் முஸ்லீம்களுக்கு பல துரோகங்களை செய்திருப்பதை சீமான் ஒத்துக் கொண்டதாகவும் அவா்கள் சார்பாக சீமான் தமுமுகவிடம் மண்ணிப்புக் கோரியதாகவும் அதனால் சீமானின் கோரிக்கைக்கு இணங்க விடுதலைப் புலிகள் செய்த அத்தனை துரோகத்தையும் முஸ்லீம்கள் சார்பாக இவா்கள் மண்ணிக்கிறார்களாம். 

மண்ணித்த காரணத்தினால் அவருடன் கூட்டணி வைக்கிறார்களாம்.

இப்படி தமுமுகவின் முக்கிய நிர்வாகிகளான வாத்தியார் ஜவாஹிருல்லாஹ்,ஹைதர் அலி,தமீமுன் அன்சாரி போன்றவா்கள் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் முஸ்லீம்களுக்கு துரோகம் செய்தவர்கள் புலிகள் அவா்கள் இலங்கை முஸ்லீம்களிடம், பாதிக்கப்பட்டவர்களிடம் மண்ணிப்புக் கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் புலிகளை மண்ணித்ததாக அறிவித்தால் அது நியாயம்.

ஆனால் புலிகள் சார்பாக சீமான் மண்ணிப்புக் கேட்பாராம் , இந்த கேடு கெட்ட ஜன்மங்கள் அதற்கு மண்ணிப்புக் கொடுப்பார்களாம்.

கேட்பவன் கேணயன் என்றால் கினற்றிற்குள் திமிங்கிலம் என்பார்களாம்.

வாத்தியார் இந்த லாஜிக்கை எந்தக் கல்லூரியில் படித்தாரோ தெரியவில்லை. 

இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் ஒரு டாக்டர் பட்டம் வேறு.

இலங்கையில் புலிகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களில் ஒருவர் கூட அந்த தீவிரவாதிகளை மண்ணிக்கமாட்டார்கள் ஆனால் இந்த கழிசடைகள் தங்கள் சுய இலாபத்திற்காக வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காக இஸ்லாம் மண்ணிக்கும் படி சொல்கிறதாம் அதனால் புலிகளை மண்ணித்தார்களாம்.

இஸ்லாம் மண்ணிக்கும் படி சொல்கிறது என்பது உண்மை அதனை யார் செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவன் மண்ணிப்பதா? அல்லது தமுமுக போன்ற கழிசடைகள் மண்ணித்தால் போதுமானதா?

பாதிக்கப்பட்டவன் மண்;ணிக்காத வரை இறைவன் மண்ணிக்க மாட்டான் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு இனி எப்படி விடுதலைப் புலிகளின் துரோகத்திற்கு இந்த சமுதாய துரோகிகள் மண்ணிப்பு கொடுப்பது?

உங்கள் சார்பாக விடுதலைப் புலிகளை நாம் மண்ணித்து விட்டோம் என்று அந்த மக்களிடம் வாத்தியாரை வந்து சொல்லச் சொல்லுங்கள் பார்க்களாம்.

பாதிப்பை உண்டாக்கிய கருணா அம்மான் (விநாயக மூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் தற்போது இலங்கையில் பாராளுமன்ற அமைச்சராக இருப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னால் கிழக்குத் தளபதி) குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டு அடையாளத்தை மறைக்கும்படியும் அதற்கு தான் நிதியுதவி செய்வதாகவும் தெரிவித்த நேரத்தில் கூட அதனை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவா்களினால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க இந்த சுயநலவாதிகள் எப்படி அவா்களை மண்ணிப்பது? 

மண்ணிப்பதற்கு இந்த வாத்தியாரும் அவருடைய பக்கவாத்தியங்களும் யார்?

மாமனார்களா? மச்சான்களா? மானம் கெட்டவர்கள்.

தமிழக மக்களே உங்களைத் தான்.

தமுமுக என்ற இந்த கேடு கெட்டவர்களின் மாமா கட்சி மீண்டும் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நமது தொப்புல் கொடி உறவுகளான இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் செய்த இந்த சமுதாய துரோகிகளுக்கு இந்தத் தேர்தலிலும் நீங்கள் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

சென்ற தேர்தலில் டெப்பா சீட்டையே இழந்ததைப் போல் இந்தத் தேர்தலிலும் இவா்களை ஓட ஓட விரட்ட வேண்டும். அப்போதாவது இந்த குள்ள நரிகளுக்கு புத்தி தெளிவாகிறதா என்று பார்ப்போம்.

இறைவன் தான் இவா்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.        
நன்றி :RASMIN M.I.Sc
 

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு. ஓர் அவசர அலசல்.


உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் மிகவும் பரபரப்பாகவும், மும்முரமாகவும் உலகம் முழுவதும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது.

இந் நிகழ்கால நிகழ்வுகளில் கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக இந்த கட்டுரை வரையப் படுகிறது.

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு.

ஒரு விளையாட்டாக இருந்தால் அந்த விளையாட்டை விளையாடுவதின் மூலம் உடலுக்கு ஒரு பயிற்சி கிடைக்க வேண்டும். ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அந்த விளையாட்டு ஒரு நன்மையைத் தர வேண்டும் எந்த நன்மையும் இல்லாத விளையாட்டை விளையாட்டுக்கள் பட்டியலில் சேர்பதே ஒரு சிறந்த சிந்தனையாளரின் பண்பாக இருக்க முடியாது.

11 பேர்கள் விளையாட பல கோடி மக்கள் அந்த விளையாட்டை பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள்(?) விளையாடுவது 11 பேர்தான் அதிலும் அவர்களுக்குக் கூட அந்த விளையாட்டினால் எந்த நன்மையும் இல்லை இதே நேரத்தில் அதைப் பார்க்கும் பல கோடி மக்களும் தங்கள் நேர காலத்தை வீனாக்கி தீமையை சம்பாதிப்பதுதான் கவலையான விஷயம்.

வாழ்க்கையாகிவிட்ட கிரிகெட் விளையாட்டு(?)

ஒரு விளையாட்டென்ரால் அது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாக இருக்களாம். அதனால் உடலுக்கும் உள வளத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்களாம்.

வியர்வை வெளியாகுதல், ஓடி ஆடித் திரிவதின் மூலம் இரத்த ஓட்டம் சீராக அமைதல் போன்றவற்றால் மிகப் பெரிய உடலியல் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்களாம்.

ஆனால் இந்த கிரிகெட் விளையாட்டைப் பொருத்த வரையில் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு பகுதி என்பது போய் வாழ்க்கையே விளையாட்டாகிவிட்டதுதான் கவலையான செய்தியாகும்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் தொழிலாக கிரிகெட் இருக்கிறது.

அவர்கள் விளையாடினால் அவா்களுக்கு பணம் கிடைக்கிறது.

இதே நேரம் அதை இரவு, பகலாக கண் விளித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன கிடைக்கிறது? நோய் தான் மிச்சமாகிறது.

இன்றைக்கு கிரிகெட்டே பலருடைய வாழ்க்கை என்றாகிவிட்டது.

இதனால் சமுதாயத்தில் பொது மக்களுக்கு மத்தியில் பலதரப் பட்ட பிரச்சினைகளும் சிக்கள்களும் உருவெடுத்துள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.

நேரத்தை விரயப் படுத்தும் வீன் விளையாட்டு.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நேரம் என்பது மிகவும் முக்கியமானது.அதிலும் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையில் நேரம் என்பது அவனுடைய உயிருக்கு நிகரானது. காலம் பொன் போன்றது என்பார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தவரை காலம் பொன்னை விட மேலானது உயிரைப் போன்றது.

உயிர் போனால் எப்படி திரும்பப் பெர முடியாதோ அது போல் காலம் கடந்து விட்டால் அதனை நாம் திரும்பப் பெற முடியாது. பொன்னை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் நேரத்தை சம்பாதிக்க முடியாது.

கடைசி நேரத்தில் பரீட்சையை தவர விட்டவனிடம் நேரத்தின் மகிமையைக் கேட்டுப் பார்க்கச் சொல்வார்கள் நேரம் என்பது எவ்வளவு தேவையான முக்கியமாக விஷயம் என்பதை அவன் சொல்லுவான்.

ஆனால் இந்த கிரிக்கெட் விளையாட்டினால் எந்தளவுக்கு நேர விரையம் ஏற்பட்டாலும் நம் சகோதரர்கள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

ஒரு நாள் ஆட்டம், மூன்று நாள் முக்கோணத் தொடர், டெஸ்ட் ஆட்டம், உலகக் கிண்ணம், ஆசியாக் கிண்ணம், என்று எத்தனையோ பெயர்களின் கால விரையம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆட்டம் என்று சொல்லி அந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு ஒரு நாள் ஆட்டத்தில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அதனைப் பார்ப்பதற்காக டி.விக்கு முன் குந்தியிருப்பவர்களுக்கு என்ன பயன் ஏற்படுகிறது? நேர, கால, மின்சார , உடல் சக்தி விரையம் இதுதான் மிச்சம்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இவ்வாறு பேசுகிறான்.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் இழப்பில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(103 - 1-3)

இறைவன் ஒரு பொருளின் மீது அல்லது ஒரு விஷயத்தின் மீது சத்தியமிட்டால் அந்த விஷயத்திற்கு அல்லது அந்தப் பொருளுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் உண்டென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட திருமறை அத்தியாத்தின் முதல் வசனத்திலேயே இறைவன் காலத்தின் மீது சத்தியம் செய்கிறான். காலத்தின் மீது இறைவனே சத்தியம் செய்து சொல்கிறான் என்றால் நேர காலம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் காலத்தின் மேல் சத்தியம் செய்துவிட்டு. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறான்.

நேரத்தை நமது இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டுமே தவிர பாழாக்கக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது.

மறுமை நாளில் இறைவனின் விசாரனையைப் பற்றி நபியவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

வாழ்நாளைக் கழித்த விதம், கற்ற கல்வியின் படி நடந்த விதம், பொருளைச் சம்பாதித்து அதனை செலவு செய்த விதம், உடலை அழித்த விதம் ஆகியவை பற்றி ஓர் அடியான் மறுமையில் விசாரிக்கப் படாத வரை அவனுடைய கால்கள் அவ்விடத்தை விட்டும் நகராக என்று நபியவர்கள் கூறினார்கள். ( திர்மிதி – 2341 தாரமீ – 536 )

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் வாழ்நாளைக் கழித்த விதம் பற்றி விசாரிக்கப்படும் போது நல்ல முறையில் கழித்ததாக பதில் சொல்லிவிட்டால் அவன் மறுமையில் வெற்றி பெற்றவனின் பட்டியலில் சேர்ந்து விடுவான். ஆனால் இந்த கிரிக்கெட் மோகத்தினால் நிறையைப் பேர் அவா்களுடைய வாழ் நாளை வீனாக கழிக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் மறுமையில் தங்கள் நிலை என்னவாகப் போகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள் வேண்டும்.

நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் தரி கெட்ட விளையாட்டுக்களிலும் வீன் பொழுது போக்கான அம்சங்களிலும் ஈடுபடுபவர்கள் மறுமை நாளின் எந்த நிலையில் இருப்பார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா நான் விட்டு வந்ததில் (வாழ் நாளில்) நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாரில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான்.அவா்கள் உயிர்பிக்கப் படும் நாள் வரை அவா்களுக்குப் பின்னால் திறை உள்ளது. (23 – 99-100)

உலகத்தில் உள்ள வீனான காரியங்களில் நாம் வாழும் காலத்தில் மூழ்கி இருந்துவிட்டு மரணித்ததின் பின்னால் இறைவனிடம் மன்றாடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

முஃமின்கள் எப்படி இருப்பார்கள்?

உண்மையான ஒரு முஃமின் தனது வாழ்க்கையில் வீனான காரியங்களில் ஈடுபடாமல் தன்னைக் காத்துக் கொள்வான். வீனான காரியங்களில் ஈடுபடுபவர்கள் உண்மையில் முஃமின்களாக இருக்கவே முடியாது.

இறைவன் முஃமின்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவா்கள் வீனானதைப் புறக்கணிப்பார்கள்(23-3) என்று குறிப்பிடுகிறான்.

உண்மையில் கிரிகெட் போன்ற இந்த வீனான விளையாட்டுக்களை புறக்கணிப்பவர்கள் மாத்திரம் தான் உண்மையான முஃமின்களாக இருக்க முடியும் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டும், முஸ்லீம்களின் வணக்க வழிபாடுகளும்.

கிரிக்கெட் மீது ஆழ்ந்த விருப்பமும், ஆசையும் கொண்டு கிரிக்கெட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அவா்களின் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

விளையாட்டு என்று வந்து விட்டால் தொழுகைக்கும் அவா்களுக்கும் தொடர்பின்றிப் போய்விடுகிறது. இரவு, பகலாக விளையாட்டில் மூழ்கியிருப்பார்கள் லுஹர் இல்லை, அசர் இல்லை, இரவு ஆட்டமாக இருந்தால் மஃரிப் இல்லை, இஷா இல்லை கேட்டால் விளையாட்டில் மும்முறமாம்?

என்னே விளக்கம் ?????????

தரி கெட்ட இந்த விளையாட்டை நேசித்து நாளை சுவர்க்கத்தை இழக்கும் நிலை தேவை தானா?

சில நேரங்களில் சிலர் சொல்லுவார்கள் முஸ்லீம் கிரிக்கெட் வீரர்கள் என்றால் அவா்கள் வணக்க விஷயத்தில் சரியாக இருப்பார்கள் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் உடனே அல்லாஹ்வைப் புகழ்வார்களாம்.

தொழுகையையே வேண்டுமென்று புறக்கணிக்கும் இவா்கள் மற்ற விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

ஒரு பவுன்டரி அடித்துவிட்டு அதற்காக மைதானத்தில் சுஜுது செய்துவிட்டால் நமது இஸ்லாமிய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீரனை தனது ஆத்மீக குருவாகக் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஐந்து வேலைத் தொழுகைக்கு அவன் சுஜுது செய்யவில்லை என்பது அவா்களுக்குத் தெரியாது கடமையான ஜும்ஆவை அவன் விட்டு விட்டான் என்பது அவா்களின் கண்களுக்கு தென்படுவதில்லை.என்றாவது ஒரு நாள் மைதானத்தில் அவன் செய்த சுஜுதுக்காக மாத்திரம் அவனை தூக்கி தலையில் வைத்துக் கொள்கிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(62-9)

இறை இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ வர்த்தகமோ அவா்களை அல்லாஹ்வின் நினைவைவிட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதைவிட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவா்கள் அஞ்சுவார்கள்.(24- 37)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள் (63-9)

மேற்கண்ட வசனங்களை ஒன்றுக்குப் பல முறை மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள். அந்த வசனங்கள் எவ்வளவு ஆழமான, அழகான அறிவுரைகளைக் கூறும் என்பது புரியும்.

இறைவனை நாம் எப்படி நினைக்க வேண்டும், இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தடுக்கக் கூடியது எது என்பவைகளைப் பற்றி தெளிவான, அழகான, ஆழமான கருத்துக்களை இறைவன் அதிலே படித்துத் தருகிறான்.
நாம் எந்தக் காரணம் கொண்டும் இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தூரமாக்கிக் கொள்ளக் கூடாது.

சூதாட்டமான கிரிக்கெட் விளையாட்டு (?)

விளையாட்டு என்ற பெயரில் ஆரம்பமான கிரிக்கெட்டின் இன்றைய நிலை என்னவெனில் முழுக்க முழுக்க சூதாட்டத்துடன் அது தொடர்பாக இருக்கிறது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பேசப்படாத நாளே இல்லை. கிரிக்கெட் சூதாட்டம் இல்லாத நாடே இல்லை இதுதான் இன்றையை கிரிக்கெட்டின் லட்சனமாக இருக்கிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட ரசிகர்கள் வரை அனைவரும் இந்த சூதாட்டத்தில் பங்கெடுப்பதை யாரும் மறுக்க முடியாது.

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விளகிக் கொள்ள மாட்டீர்களா? (5-91)

கிரிக்கெட்டைப் பொருத்தவரை மேற்கண்ட அனைத்துத் தீமைகளும் கிரிக்கெட்டில் இருப்பதைப் பார்க்களாம்.

கிரிக்கெட் வீரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும், அதனோடு தொடர்பு படும் பெரும்பாலானவர்களும் மேற்கண்ட தீமைகளில் தங்களை இணைத்துக் கொள்வதை யாரும் மறுக்க முடியாது.

கிரிக்கெட் வீரர்களுக்காக மது பரிமாறப்படுகிறது. மதுவோடு அவா்கள் தொடர்புபடுகிறார்கள்.

சூதாட்டத்தில் தாராளமாக அவா்கள் பங்கு கொள்கிறார்கள். ரசிகர்களில் பெரும்பகுதியினரும் சூதாட்டத்தில் பங்கு கொள்கிறார்கள்.

இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களும், இதனை ஆதரிப்பவர்களும் தொழுகை விஷயத்தில் பொடுபோக்காகவே இருக்கிறார்கள் ( இது பற்றி முன்னனரே விபவரிக்கப்பட்டுள்ளது. )

அன்பின் சகோதரர்களே !

பெரியவர்களே !

இளைஞா்களே !

கல்வியாளர்களே !

இந்த வழிகெட்ட கிரிக்கெட் மோகத்தைவிட்டும் விலகி தூய்மையான, மார்க்கம் சொல்லித் தருகின்ற மார்க்கத்திற்கு முரனாகாத, உடல் அளவில் நன்மை தரக்கூடிய விளையாட்டுக்களை விளையாட்டாக குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் செயல்படுத்தி இம்மை, மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக!  
நன்றி:RASMIN M.I.Sc

Monday, February 7, 2011

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக! அவர்களே வெளியிட்ட ஆதாரத்தோடு!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம்.



மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம்: 5)

மவ்லித்’ என்பதின் பொருள்?

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 8)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்

உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டி ருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி

மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள். தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப் படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்

அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.

”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி

எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை

”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
நன்றி :தர்கா வழிகேடு