Friday, January 7, 2011

வசீலா என்றால் இடைத்தரகரா?

இறைவனை அடைவதற்கு இடைத்தரகர்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்  என்பதற்கு ஆதாரமாக ஒரு குர் ஆன் வசனத்தையும் ஹதீஸ் ஒன்றையும் சிலர் ஆதாரமாக காட்டுகின்றனர்.


'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக்கொள்ளுங்கள்.
(5 : 35)

என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.
வஸீலாவுக்கு மகான்கள் அல்லது இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
வசீலா என்றால் என்ன என்பதை அறிய இங்கே சொடுக்கவும்..  வஸீலா என்றால் என்ன?

இவ்வசனத்தின் துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே! என்று அழைக் கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். 'மகான்களும் வஸீலா தேட வேண்டும்' என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முத­ல் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன.

  • இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
  • அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்.
  • அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்.

இறைவனை அஞ்சுவதும் அவனது பாதையில் அறப்போர் செய்வதும் எப்படி நம்மீது கடமையானது போல  நபி(ஸல்) அவர்களுக்கும் கடமையோ அதைப் போன்றுதான் அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்வதும் அவர்கள் மீதும்  கடமையாகும்.
எனவே, நபி(ஸல்) அவர்கள் வஸீலா தேடுவதற்கு எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி உளற மாட்டார்கள்.

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று பின்வரும் வசனம் தெளிவாகவே கூறுகிறது.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
(திருக்குர்ஆன் 17:57)

மகான்களே அல்லாஹ்விடம் நெருக்கத்திற்காக வஸீலாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது அவர்களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனமாகும். தன்னுடைய வயிற்றுக்கே சோறு இல்லாதவனிடம் எனக்கு பிச்சை போடு என்று கேட்பது போன்றதாகும்.



இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றார்கள்.

அனஸ்(ர­) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும்போது உமர்(ர­), அப்பாஸ்(ர­)லி அவர்கள் மூலம்(அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக! என்று உமர்(ரலி­) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.
நூல் : புகாரி(1010, 3710)

இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ அல்லது மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான கருத்தாகவே அமைந்துள்ளது .

அதாவது, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவேதான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள்தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.

அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி(ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்ளவில்லை.
இவர்கள் வாதப்படி, இந்த ஹதீஸ் தான் வசீலா தேடுவ்வதற்கு ஆதாரம் என்றால், சஹாபாக்கள் அனைவரும், ரசூல் (ஸல்) அவர்கள் இறந்த பின்னரும் கூட அவர்களையே அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இதி­ருந்தே இறந்துவிட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை வஸீலாவாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர்(ரலி­) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர்(ர­லி) அவர்கள் அப்பாஸ்(ர­லி) அவர்களை முன்னிருத்தி இறைவனிடம் மழைக்காகப் பிரார்த்திக்கிறார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

அப்பாஸ்(ர­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர்(ரலி­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிருத்தி இருக்கலாம்.

நாம் சிறந்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ்(ர­) அவர்களை விட உமர்(ரலி­) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர்(ர­) அவர்கள் முன்னிருத்தப்படவில்லை. இதி­ருந்தே மகான்களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது.


இதி­ருந்தே இந்த செய்திக்கும் இறந்தவர்களையோ மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
எனவே, வசீலா என்றால் நல்லறங்கள் தானே தவிர, வேறெந்த மகான்களோ, இறந்து போன நல்லடியார்களோ இல்லை என்பதை அவர்கள் வைக்கும் ஆதாரங்கள் மூலமாகவே  தெளிவாக அறியலாம்.

No comments:

Post a Comment